ஒரு நல்ல ஐடியா, கொஞ்சம் திறமை, விடாமுயற்சி இருந்தால் நீங்களும் யூடியூப் சேனல் ஆரம்பித்து பெரிய ஆளாக வர முடியும். அதில் பணமும் சம்பாதிக்க முடியும்.
இன்று பல இளைஞர்கள் யூடியூப் சேனல் துவங்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்களால் அதில் நீடித்து நிற்க முடிவதில்லை.அதற்கு மிக முக்கியக்காரணம் வரவேற்பு அவ்வளவாக கிடைப்பதில்லை என்பதுதான். இணையம் பார்க்கும் பெரும்பாலானவர்கள் இன்று தங்களுக்கு தேவையான விசயங்களை வீடியோ வடிவத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவே விரும்புகிறார்கள். நீங்கள் உங்களது யூடியூப் சேனலுக்கு தயார் செய்யும் வீடியோவையே பேஸ்புக் உள்ளிட்ட தளங்களிலும் அப்லோட் செய்துகொள்ளலாம். இந்த கட்டுரையில் ஒரு வீடியோ பிளாக் உருவாக்குவதற்கு அடிப்படையான சில விசயங்களை உங்களுக்கு குறிப்பிட்ட சொல்ல விரும்புகிறேன். புதிதாக இந்த முயற்சியில் இறங்கப்போகிறவர்களுக்கு பெரும் பயனுள்ளதாக இந்தக்கட்டுரை அமையும்.
யூடியூப் சேனல் துவங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி?
Branding watermark யூடியூப் வீடியோவில் வைப்பது எப்படி?
1. உங்கள் வீடியோவை எதற்காக பார்க்க வேண்டும்?
உங்களது வீடியோவை பார்ப்பதனால் அவர்களுக்கு ஏதேனும் கிடைக்கும் என்ற பட்சத்தில் தான் மக்கள் அவர்களது நேரத்தை செலவழித்து உங்களது வீடியோவை பார்ப்பார்கள். அது தகவல் தருகிற வீடியோவாக இருக்கலாம், நகைசுவை தருகிற வீடியோவாக இருக்கலாம் அல்லது பாடம் கற்றுக்கொடுக்கும் வீடியோவாக இருக்கலாம் அல்லது சமையல் வீடியோவாக இருக்கலாம். ஆகவே உங்களது வீடியோ சேனலை யார் பார்க்கப்போகிறார்கள்? அவர்கள் எதற்காக பார்க்க வேண்டும்? அவர்கள் பார்ப்பதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? இந்த அடிப்படை கேள்விகளுக்கு பதில் தெரிந்து நீங்கள் செயல்பட்டால் நிச்சயமாக உங்களது முயற்சி வெற்றி அடையும்.
தற்போதைய சூழலில் அரசியல் மற்றும் செய்திகள் வழங்கும் வேலையை பலர் செய்து வருகிறார்கள். செல்போன் போன்ற பொருள்களை ரிவியூ செய்யவும் பலர் இருக்கிறார்கள். நீங்களும் இதற்குள்ளாகவே செல்ல நினைத்தால் அவர்களை விடவும் சிறப்பாக செயல்பட என்ன செய்யலாம் என்பதை யோசித்து செயல்படுங்கள். பெரிதாக யாரும் முயற்சி செய்யாத ஒரு விசயத்தை நீங்கள் செய்தால் அதிகம் போட்டி இருக்காது. அப்படிப்பட்ட ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
>> சுற்றுலாத்தளங்கள் [Tourist Places Review]
>> சிறந்த ஹோட்டல்கள் மற்றும் கடைகள் [Hotels and Shops review]
>> தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பு [Manufacturing Videos]
>> அரசியல் [Politics and News]
>> நகைச்சுவை மற்றும் குறும்படங்கள் [Comedy and Short Films]
2. நல்ல கேமரா மற்றும் மைக் [Camera and Mic]
இப்போதெல்லாம் வீடியோவை பார்க்கிறவர்கள் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள். உங்களது வீடியோவில் தகவல் [content] அதிகமாக இருந்தாலும் அதனை நீங்கள் வழங்குகிற விதம் சரியில்லாமல் இருந்தால் அதிக நேரம் உங்களது வீடியோவை பார்க்க மாட்டார்கள். ஆகவே ஒரு வீடியோ சேனல் ஆரம்பிப்பதற்கு முன்னதாக ஒரு சிறந்த கேமரா மற்றும் மைக் ஆகியவற்றை வாங்கிக்கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த நபர்களிடமோ அல்லது நீங்களே கூட இணையத்தில் தேடினால் கூட அதுபற்றிய தகவல்களை பெற முடியும்.
3. எடிட்டிங் [Editing]
எப்படிப்பட்ட வீடியோவையும் ஒரு சிறந்த எடிட்டரால் பார்க்கத்தூண்டும் வீடியோவாக மாற்றிவிட முடியும். ஒரு நல்ல எடிட்டிங் வேலை செய்யவில்லை எனில் நீங்கள் எவ்வளவு பெரிய கேமராவை வைத்திருந்தும் பலனில்லை. ஆகவே ஒரு சிறந்த எடிட்டிங் சாப்ட்வேரை கற்றுக்கொள்ளுங்கள். தற்போதைய சூழலில் எண்ணற்ற மென்பொருள்கள் இலவசமாகவே இணையத்தில் கிடைக்கின்றன. ஆகவே அவற்றை பயன்படுத்திக்கொள்ள ஆரம்பியுங்கள்
CyberLink PowerDirector
KineMaster [Mobile]
Adobe Premiere
Corel VideoStudio
4. லைட்டிங் [Lighting]
ஒரு அறைக்குள் இருந்துதான் நீங்கள் வீடியோ எடுக்கப்போகிறீர்கள் என்றால் அதற்கு அவசியமான ஒன்று லைட்டிங். தற்போது நிறைய நபர்கள் Greenmat பயன்படுத்துகிறார்கள். பின்னால் பச்சை நிற துணியை வைத்து எடுத்துவிட்டு பிறகு எடிட்டிங் செய்திடும்போது பின்பக்கத்தை மட்டும் மாற்றிக்கொள்ளும் யுக்தி தான் அது. நீங்கள் youtube இல் தேடினால் கூட எண்ணற்ற வீடியோக்கள் கிடைக்கும். இதனை செய்வதற்கும் லைட்டிங் என்பது அவசியமான ஒன்று. மிகக்குறைந்த விலையிலேயே தற்போது LED விளக்குகள் கிடைக்கின்றன. ஆகவே அதில் உங்களுக்கு தேவையான ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்.
5. தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்
பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு என்னவென்றால் 10 வீடியோ எடுப்பார்கள் அதற்குள் அவர்கள் எதிர்பார்த்தது மாதிரி மக்கள் வரவேற்பு கொடுக்கவில்லை, அதிக அளவில் subscribers கிடைக்கவில்லை என்றவுடன் வீடியோ போடுவதை கைவிட்டுவிடுவார்கள். இதுதான் மிகப்பெரிய தவறு. இந்தத்தவறை நீங்கள் ஒருபோதும் செய்யாதீர்கள். உங்கள் வீடியோ உடனே பெரிய அளவில் பார்க்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தவறு. மக்கள் பார்க்க பார்க்கத்தான் உங்களை நம்புவார்கள், உங்களை விருப்புவார்கள், உங்களை பின்தொடருவார்கள். ஆகவே உடனே எதையும் நிறுத்திவிடாதீர்கள்.
உங்களின் ஏதோ ஒரு வீடியோ பெரிய அளவில் ரீச் ஆனாலும் கூட உங்களது மற்ற வீடியோக்களையும் மக்கள் அதிகம் பார்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. ஆகவே தொடர்ச்சியாக உங்களது முயற்சியை செய்துகொண்டே இருங்கள்.
Click Here! Get Updates On WhatsApp
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.