Friday, May 10, 2024
HomeBiographyPranav Mistry யை உங்களுக்கு தெரியுமா?

Pranav Mistry யை உங்களுக்கு தெரியுமா?

2009 ஆம் ஆண்டு TED India எனும் அறிவுசார் அரங்கில் தன்னுடைய கண்டுபிடிப்ப்பை அறிமுகப்படுத்தினார் . அதுமுதல் அறிவியல் உலகின் தவிர்க்கமுடியாத நபராக மாறிப்போனார் பிரனவ் மிஸ்ட்ரி [Pranav Mistry] .

Piranav Mistry | பிரனவ் மிஸ்ட்ரி

தகவல் தொழில்நுட்பத்துறையில் முன்னனி வகிக்கின்ற பல கம்பெனிகளின் தலைமை பொறுப்புகளில் , பிற முக்கிய பொறுப்புகளில் இந்தியர்கள் இருப்பதனை கண்டு மகிழ்ச்சி அடைந்துவருகிறோம் . அந்த வகையில் முன்னனி மொபைல் போன் உற்பத்தி நிறுவனமான சாம்சங் (Samsung) நிறுவனத்தில் Research துறையின் தலைவராக இருந்துவருகிறார் பிரனவ் மிஸ்ட்ரி. 6 ஆம் அறிவு ( Sixth Sense) தொழில்நுட்பத்திற்கு வித்திட்டு அதனை துவங்கி வைத்தவர் தான் பிரனவ் மிஸ்ட்ரி. அத்தகு பெருமை வாய்ந்த பிரனவ் மிஸ்ட்ரி அவர்களை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம் .

பிரனவ் மிஸ்ட்ரி ஆரம்பகால வாழ்க்கை

பிரனவ் மிஸ்ட்ரி (Piranav Mistry) தன்னுடைய இளங்கலை பட்டத்தை கணிணி மற்றும் பொறியியல் துறையில் நிர்மா தொழில்நுட்ப கல்லூரியில் பெற்றார் .

>>  குஜராத் மாநிலம் , பலன்பூர் எனும் ஊரில் 14.05.1981 அன்று பிறந்தார் .

 >> Master of design degree ஐ ஐஐடி மும்பையில் முடித்தார் .

 >> Media Arts and Sciences இல் முதுகலை பட்டத்தை MIT இல் பெற்றார் .

கட்டிடக்கலை நிபுணரான அவரது அப்பா தானே தயாரித்த விளையாட்டுப்பொருள்களை மகன் பிரனவ் மிஸ்ட்ரி க்கு கொடுப்பார் .

தான் 9 ஆம் வகுப்பு படிக்கும்போதே தன்னுடைய அப்பா பழைய ஸ்கூட்டரை தனித்தனியே பிரித்து பார்த்து , ஒவ்வொன்றும் எப்படி வேலை செய்கின்றது என்பதையும் என்ன பிரச்சனை என்பதை கண்டறியவும் சொல்லித்தந்ததாக  பிரனவ் மிஸ்ட்ரி நினைவு கூறுகிறார் . இளமை காலத்தில் இதுபோன்ற குடும்பசூழலும் பிரனவ் மிஸ்ட்ரி முன்னனி தொழில்நுட்ப நிபுணராக வர காரணமாக அமைந்தது எனலாம் .

பிரனவ் மிஸ்ட்ரி பணியாற்றிய நிறுவனங்கள்

தற்போது சாம்சங் நிறுவனத்தின் புதுமைகளை கண்டறியும் Research துறையின் தலைமை அதிகாரியாக இருக்கும் பிரனவ் மிஸ்ட்ரி அதற்கு முன்னர் பல நிறுவனங்களுடன் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் .

SAMSUNG_GALAXY_FOLD

அந்தவகையில் MIT media Lab இல் உதவி ஆராய்ச்சியாளராகவும் Phd மாணவராகவும் இருந்துள்ளார் . அதுதவிர மைக்ரோசாப்ட் , கூகுள் , CMU , நாசா , யுனெஸ்கோ , ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகம் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார் .

Sixth Sense Technology என்றால் என்ன?

நீங்கள் அணிந்து இருக்கக்கூடிய ஒரு கருவியின் மூலமாக நிகழ்கால உலகத்தில் நம்மை சுற்றி இருக்கக்கூடிய இருக்கக்கூடிய ஒரு பொருளை டிஜிட்டல் தகவலாக மாற்றவும் அந்த தகவலை மேலும் பயன்படுத்திக்கொள்ளவும் முடியும். மொத்தத்தில் நிகழ்கால உலகை டிஜிட்டல் உலகோடு இணைக்கக்கூடிய ஒரு மாபெரும் தொழில்நுட்பம் தான் sixth sense. 

[What is sixth sense? Sixth Sense is a wearable gestural interface that enhances the physical world around us with digital information and lets us use natural hand gestures to interact with that information. … Sixth sense technology has integrated the real world objects with digital world.]

உதாரணத்திற்கு, உங்கள் முன்பாக ஒரு புத்தகம் இருக்கிறது. அதில் இருக்கக்கூடிய வரிகளை உங்களது கணினிக்கு ஏற்ற வேண்டும் என விரும்பினால் நீங்கள் அதனை டைப் செய்துதான் ஆகவேண்டும். ஆனால் sixth sense தொழில்நுட்பத்தின் மூலமாக அந்த புத்தகத்தை ஸ்கேன் செய்து அதை அப்படியே டிஜிட்டல் வடிவில் மாற்றி உங்களது கணினியில் ஏற்றிக்கொள்ளலாம். அந்த வரிகளில் மாற்றங்களைக்கூட செய்துகொள்ளலாம்.

SixthSense Submit

2009 ஆம் ஆண்டு TED india எனும் அறிவுசார் அரங்கில் தன்னுடைய கண்டுபிடிப்ப்பை அறிமுகப்படுத்தினார் . அதுமுதல் அறிவியல் உலகின் தவிர்க்கமுடியாத நபராக மாறிப்போனார் பிரனவ் மிஸ்ட்ரி .

அந்த கண்டுபிடிப்பில் , கழுத்தில் அணிந்திருக்கும் சென்சார் , கேமரா உள்ளிட்ட அமைப்புகள் மூலமாகவும் கைவிரல்களில் அணிந்திருக்கும் கருவி மூலமாகவும் அத்தனை வேலைகளையும் கணிணி அல்லது மொபைல் உள்ளிட்ட எதுவும் இல்லாமலே செய்ய முடியும் . உதாரணத்திற்கு அவரது கருவியின் மூலமாக ஒரு புகைப்படத்தை எடுத்து மின்னஞ்சல் மூலமாக இன்னொரு நபருக்கு அனுப்ப முடியும் .

தற்போது சாம்சங் நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கின்ற பிரனவ் மிஸ்ட்ரி ” அடுத்த புதிய தொழில்நுட்பம் எது என்பதை தேடுவதே எனது பணி . நாளை மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தப்போகிற தொழில்நுட்பத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன் . அவர்களது வாழ்க்கை மேம்படும்விதமாக சிறந்த தொழில்நுட்பத்தை அளிப்பதே எனக்கு மகிழ்ச்சி ” என தெரிவித்து இருக்கிறார் .

37 வயதே ஆகும் பிரனவ் மிஸ்ட்ரி இன்னும் பல உயரங்களை தொடுவார் என நம்பலாம் .

மிகப்பெரிய சாதனைகள் புரிந்தவர்கள் பற்றி நீங்கள் படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து பல சிறந்த கட்டுரைகளை படிக்கலாம். 

RELATED ARTICLES

3 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular