Saturday, May 11, 2024
HomeAppsகூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து வெளியிடும் "COVID-19 tracing tool"

கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து வெளியிடும் “COVID-19 tracing tool”



கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து வெளியிடும் "COVID-19 tracing tool"

COVID-19 tracing tool

இரண்டு மொபைல் நிறுவன ஜாம்பவான்கள் இணைந்து “”COVID-19 tracing tool” ஐ வடிவமைக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். இதனைக்கொண்டு ஒவ்வொரு தனி மனிதரும் தான் இதற்கு முன்பு COVID-19 பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்தோமா என்பதை அறிந்துகொள்ள முடியும்.

 

ஒவ்வொரு துறையை சேர்ந்தவர்களும் தங்களுக்குள் இருக்கும் வியாபார போட்டிகளை தவிர்த்துவிட்டு கோவிட் 19 [கொரோனா வைரஸ் பரவல்] ஐ கட்டுப்படுத்துவதற்கு தங்களால் இயன்ற வேலைகளை செய்துவருகிறார்கள். கார் தயாரிப்பு நிறுவனங்கள் வென்டிலேட்டர் உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றன. ஆடை வடிவமைப்பு நிறுவனங்கள் மாஸ்க் தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றன.

 

அப்படித்தான் முன்னனி மொபைல் இயங்குதள சேவையை வழங்குகிற கூகுள் [ஆண்ட்ராய்டு] நிறுவனமும் ஆப்பிள் [ஐஓஎஸ்] நிறுவனமும் இணைந்து “COVID-19 tracing tool” ஐ வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவெனில் எந்தவொரு தனி நபரும் அவரது மொபைல் போன் மூலமாகவே கடந்த 14 நாட்களில் கோவிட் 19 பாசிட்டிவ் உள்ள நபர்களுடன் நெருங்கி பழகி இருக்கிறேனா என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஆனால் அனைவரும் இந்த சேவையை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும் நான் நினைவு படுத்த விரும்புகிறேன். 

 

Read this post also : ஆரோக்யா சேது ஆப் பயன்படுத்துவது எப்படி?

“COVID-19 tracing tool” எப்படி செயல்படும்?

கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து வெளியிடும் "COVID-19 tracing tool"

ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஐ பயன்படுத்தித்தான் பெரும்பான்மையான போன்கள் இயங்குகின்றன. ஒரு அப்ளிகேஷன் ஒன்றை உருவாக்கும் போது வெவ்வேறு இயங்குதளங்களில் அவை சரியாக செயல்படாது. அந்தக்குறையை போக்குவதற்குத்தான் இந்த இரண்டு நிறுவனங்களும் தற்போது இணைந்து செயல்படவிருக்கின்றன. 

 

“COVID-19 tracing tool” இல் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. முதலாவது, private proximity contact detection API – அதாவது நீங்கள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு வைத்துள்ளீர்களா என்பதை கண்காணிக்க விரும்பினால் எப்போதும் இந்த ஆப்சனை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். இந்த ஆப்சனை ஆன் செய்து வைத்திருந்தால் உங்களது மொபைல் போன் ஆனது புளுடூத் மூலமாக ஒரு ரேண்டம் எண்ணை தொடர்ச்சியாக குறிப்பிட்ட தொலைவிற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.

மற்றவர்களும் அவர்களது மொபைலில் இந்த ஆப்சனை ஆன் செய்து வைத்திருந்தால் அந்த மொபைலில் இருந்தும் ஒரு ரேண்டம் எண் பகிரப்படும். ஒவ்வொரு மொபைலும் குறிப்பிட்ட எல்லைக்குள் இருந்து வரும் ரேண்டம் எண்களை தொடர்ச்சியாக சேமித்துக்கொண்டே வரும். அந்த ரேண்டம் எண் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை மாறும். இந்த API யைக்கொண்டு பல்வேறு ஆப் தயாரிப்பு நிறுவனங்கள் கோவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டவர்களை எளிமையாக கண்காணிக்கும் ஆப்களை வடிவமைக்கலாம். இந்த API மே மாதத்தில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.



கூகுள் மற்றும் ஆப்பிள் இணைந்து வெளியிடும் "COVID-19 tracing tool"

இரண்டாவது பகுதியானது சற்று அதிக வசதியை வழங்குகிறது. இதில் இந்த பின்தொடரும் வசதியானது இயங்குதளத்துடனேயே இணைத்து வழங்கப்படும். இதனால் தனியாக நீங்கள் ஒரு ஆப்பை டவுன்லோட் செய்யவேண்டிய தேவை இருக்காது. அனைவரின் மொபைல் போன்களிலும் இந்த ஆப்சன் கண்டிப்பாக இடம்பெறும். ஆனால் இதை பயனாளர்கள் தான் ஆன் செய்திட வேண்டும். 

 

10 நாட்களுக்கு நீங்கள் ஒரு கடையில் வரிசையில் 10 நிமிடம் ஒருவருக்கு பின்னால் நின்றுகொண்டு இருந்தீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் இருவருமே மேற்கூறிய ஆப்சனை ஆன் செய்து வைத்து இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அவருக்கு 10 நாட்களுக்கு பிறகு கொரோனா பாசிட்டிவ் என ரிசல்ட் கிடைக்கிறது. ஆனால் அந்த தகவல் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. இந்த சூழலில் நீங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு சிறிய சோதனையை செய்தால் போதுமானது. நீங்கள் உங்களது மொபைலில் 14 முன்புவரை பதிவு செய்யப்பட்ட ரேண்டம் எங்களை சர்வருக்கு அனுப்பிட வேண்டும். ஏற்கனவே கொரோனா பாசிட்டிவ் வந்த நபருடைய தகவல் சுகாதாரத்துறை மூலமாக சர்வருக்கு அனுப்பப்பட்டு இருக்கும். இப்போது அவருடைய ரேண்டம் எண் உங்களுடைய ரேண்டம் எண்ணுடன் 10 நிமிடம் சேர்ந்து இருந்ததை காட்டிவிடும். ஆகவே நீங்கள் எச்சரிக்கையோடு இருக்கலாம். 

 

இதே சோதனையை சுகாதாரத்துறையும் செய்யலாம். அப்படி செய்திடும் போது அவர்கள் தானாகவே கூட உங்களது மொபைலுக்கு  “நீங்கள் கொரோனா பாதித்த நபருக்கு அருகில் இருந்து இருக்கிறீர்கள், ஆகவே எச்சரிக்கையோடு இருங்கள். அசௌகரியமாக உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனையை அணுகுங்கள்” என்ற செய்தியும் அனுப்பப்படும். 

 

இதில் சிக்கல்களும் இருக்கின்றன. ஆமாம், அனைவருமே இந்த வசதியை ஆன் செய்து வைத்திருந்தால் மட்டுமே இந்த வசதியால் 100% பலன் கிட்டும்.  இப்போதைய சூழலில் இந்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ஆரோக்யா சேது ஆப் பெரிதும் பலன் கொடுத்து வருகிறது. கூகுள் மற்றும் ஆப்பிள் கூட்டு முயற்சி நடைமுறைக்கு வரும்போது இன்னும் கூடுதலான பலன்கள் நமக்கு நிச்சயம் கிடைக்கும். பொதுமக்கள் அந்த வசதியை அடுத்தவர்களின் நலனில் அக்கறை கொண்டு சரியாக பயன்படுத்தினால் பெரும்பாலானவர்களை காக்க முடியும். 

 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular