Sunday, April 28, 2024
HomeTech ArticlesDelete செய்யப்பட்ட WhatsApp மெசேஜ் ஐ பார்ப்பது எப்படி?

Delete செய்யப்பட்ட WhatsApp மெசேஜ் ஐ பார்ப்பது எப்படி?

WhatsApp என்ற தகவல் பரிமாற்ற மொபைல் செயலி தற்போது பலராலும் பயன்படுத்தப்படுகிறது. WhatsApp நிறுவனம் எளிமையான பயன்பாடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பல்வேறு வசதிகளை கொடுத்துவருகிறது. அப்படியான ஒரு வசதி தான் Delete For Everyone என்கிற வசதி. 

ஒருவர் இன்னொருவருக்கு ஒரு மெசேஜ் அனுப்பிய பிறகு அந்த மெசேஜ் ஐ அழிக்க வேண்டும் என நினைத்தால் இந்த Delete For Everyone என்கிற வசதியை பயன்படுத்தி அழிக்க முடியும். இப்படி அழித்தால் யாருக்கு அனுப்பினோமோ அவரது WhatsApp செயலியிலும் குறிப்பிட்ட மெசேஜ் அழிந்துவிடும். 

deleted whatsapp message
deleted whatsapp message

சிலருக்கு அப்படி அழிக்கப்பட்ட மெசேஜ் என்னவென்று அறிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். ஆனால், வாட்ஸ்ஆப்பில் அப்படி அழிக்கப்பட்ட மெசேஜ் ஐ பார்க்கும் வசதி இல்லை. ஆனால், வேறு சில ஆப்ஷன்களை பயன்படுத்தினால் எந்தவொரு ஆப்பும் இன்ஸ்டால் செய்யாமலேயே உங்களால் அழிக்கப்பட்ட மெசேஜ் என்னவென்று பார்க்க முடியும்.

How to recover deleted WhatsApp messages?

நீங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் பயன்படுத்துகிறவராக இருந்தால் பின்வரும் வழிமுறைகளை பயன்படுத்துங்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்தும் நீங்கள் இதனை அறிந்துகொள்ள முடியும். 

notification history on
notification history on

நீங்கள் இப்படி அழிக்கப்பட்ட மெசேஜ் என்னவென்பதை பார்க்க வேண்டும் என நினைத்தால் Notification History என்ற ஆப்ஷனை ஆன் செய்து வைத்திருக்க வேண்டும். 

Settings > Notification & Status Bar > More Settings > Notification History > On 

நீங்கள் மீண்டும் இங்கே செல்லும் போது அங்கே வரிசையாக உங்களுக்கு வந்த நோட்டிபிகேஷன் அனைத்தும் ரெக்கார்ட் ஆகும். ஒருவர் உங்களுக்கு வாட்ஸ்ஆப்பில்  மெசேஜ் அனுப்புகிறார் எனில் உடனடியாக நோட்டிபிகேஷன் வந்துவிடும். அனுப்பியவர் மெசேஜ் ஐ அழித்தால் கூட அந்த மெசேஜ் நோட்டிபிகேஷனில் வந்துவிடும். அதில் இருந்து என்ன மெசேஜ் அனுப்பினார் என்பதனை உங்களால் தெரிந்துகொள்ள முடியும். 

Settings > Notification & Status Bar > More Settings > Notification History > On

recover deleted whatsapp message
recover deleted whatsapp message

ஒருவேளை உங்களது நண்பர் அல்லது யாரோ ஒருவர் உங்களுக்கு அனுப்பிய மெசேஜ் ஐ டெலீட் செய்துவிட்டால் நீங்கள் மீண்டும் இதே இடத்திற்கு வந்தால் குறிப்பிட்ட அந்த மெசேஜ் என்னவென்பதை பார்க்க முடியும். மிகப்பெரிய மெசேஜ் என்றால் முழு செய்தியையும் உங்களால் பார்க்க முடியாது. நோட்டிபிகேஷனில் எந்த அளவிற்கு தெரியுமோ அந்த அளவிற்குத் தான் உங்களால் பார்க்க முடியும்.

Read More Here :

WhatsApp எண் BAN ஆகிவிட்டதா? மீட்பது எப்படி?

WhatsApp ஐ லாக் செய்வது எப்படி?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular