Sunday, April 28, 2024
HomeTech ArticlesDriverless Vehicles : ஓட்டுநர்கள்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமா?

Driverless Vehicles : ஓட்டுநர்கள்களின் வேலைவாய்ப்பு பறிபோகுமா?

ஓட்டுநர்கள் இல்லாத தானியங்கி வாகனங்கள் Autonomous Vehicles அல்லது Driverless Vehicles என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. பல்வேறு உலக நாடுகளில் பல முன்னனி நிறுவனங்கள் இதற்கான ஆராய்ச்சியை மிக வேகமாக செய்து வருகின்றன.

சில நாடுகளில் சோதனை முயற்சியாக ஓட்டுநர்கள் இல்லாத வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளன. ABI என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் தகவல்படி, 2030 ஆம் ஆண்டிற்குள் சுமார் 11 மில்லியன் ஓட்டுநர் இல்லா வாகனங்கள் சாலையில் பயன்பாட்டில் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. இது உலக வாகன பயன்பாட்டில் 5% ஆகும்.



மிக வேகமாக நடந்துவரும் ஆராய்ச்சிகளின் விளைவாக, ஓட்டுநர் இல்லாத வாகனங்கள் நாம் நினைத்ததை விடவும் வேகமாகவே பயன்பாட்டிற்கு வந்துவிடும் என கணிக்கப்பட்டு உள்ளது. இந்த வளர்ச்சி, சில கேள்விகளையும் நம் முன்னே கொண்டு வருகிறது. அவை குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

What is Driverless Cars or Autonomous Cars?

மனிதர் ஒருவரின் உதவியின்றி முற்றிலும் தானியங்கி முறைப்படி பயணிக்கும் திறன் கொண்ட கார்களை Driverless Cars or Autonomous Cars என அழைக்கிறோம்.

சில தசாப்தங்களுக்கு முன்பு, தானியங்கி கார்கள் பற்றிய நம்பிக்கை இன்மையே அதிகமாக இருந்தது. மனிதர்களின் உதவி இல்லாமல் ஒரு வாகனம் சாலையில் பயணிக்க முடியும் என நம்பும் சாத்தியக்கூறுகள் அப்போது இல்லை. ஆனால், ரேடார், ஆட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் போன்ற துறைகளில் ஏற்பட்டுள்ள அதீத வளர்ச்சி தானியங்கி கார்களை வடிமைக்க முடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது.

அதி நவீன சென்சார்ஸ், கேமரா, ரேடார், ஆட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் இவை சுற்றுவட்டாரத்தில் உள்ள தகவல்களை சேகரித்து, அதில் இருந்து மனிதர்களைப் போலவே முடிவுகளை எடுத்து காரை ஓட்டுநர் உதவி இல்லாமல் இயக்க உதவுகிறது.

Driverless Cars : தற்போதைய நிலை என்ன?

Driverless Cars குறித்து நீங்கள் அறிய முற்பட்டால் அதில் இருக்கும் பல்வேறு வகைகள் பற்றியும் நீங்கள் அறிய வேண்டியது அவசியம். அப்போது தான் தற்போதைய ஆராய்ச்சிகள் எந்த கட்டத்தில் இருக்கின்றன என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

Level 0 (No Automation) : இந்த நிலையில் வாகனத்தை முழுமையாக ஓட்டுநர் தான் கட்டுப்படுத்துவார்.

Level 1 (Driver Assistance) : புறப்படும் போது, அதேபோல சில நேரங்களில் ஓட்டுனருக்கு உதவிகரமாக சில தகவல்களை வழங்கும். ஆனால், வாகனத்தை கட்டுப்படுத்தாது.

Level 2 (Partial Automation) : பார்க்கிங் செய்வது போன்ற சில சூழல்களில் ஓட்டுநரின் மேற்பார்வையின் கீழ் வாகனத்தை கட்டுபடுத்திட இந்த நிலையில் தொழில்நுட்பம் உதவும்.

Level 3 (Conditional Automation) : சில சூழ்நிலைகளில் வாகனம் தானாகவே இயங்கும் திறன் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு, நெடுஞ்சாலைகளில் இவை தானாகவே பயணிக்கும். ஆனால், தேவைபட்டால் உடனடியாக வாகனத்தை கட்டுப்பாட்டில் எடுக்க தயாராக இருக்க வேண்டும்.

Level 4 (High Automation) : இந்த நிலையில் பல்வேறு வேலைகளை தானாகவே செய்திடும் திறன் படைத்தவையாக வாகனங்கள் இருக்கும். ஆனால், சில சந்தர்பங்களில் மனிதர்களின் பங்களிப்பு தேவைப்படும்.

Level 5 (Fully Automation) : மனிதர்களின் பங்களிப்பு எதுவும் இல்லாமல் முற்றிலும் தானாகவே பயணிக்கும் திறன் கொண்ட வாகனங்கள். இதற்கு மனிதர்களே தேவை இல்லை.

பல்வேறு நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தாலும் சில நிறுவனங்கள் மட்டுமே Level 4 என்ற நிலைக்கு வந்துள்ளது. அதுவும், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் தான் இவை சாத்தியமாகி உள்ளது. பொது சாலைகளில் பயணிக்க Level 5 நிலையில் ஒரு முழுமையான அனுமதியை எந்த நிறுவனமும் வாங்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், விரைவிலேயே அந்த நிலையை எட்டிவிடலாம்.

Driverless Cars Companies

பல்வேறு நிறுவனங்கள் தானியங்கி வாகனங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டாலும் பின்வரும் நிறுவனங்கள் அதில் முன்னனி வகிக்கின்றன.

Waymo(Google) : குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் robo taxi services ஐ இது வழங்கி வருகிறது.

Cruise (General Motors) : சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியா போன்ற இடங்களில் robo taxi services ஐ வழங்குகிறது.

Tesla : டெஸ்லாவை பொறுத்தவரைக்கும் ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கும் கார்களை வடிவமைத்து உள்ளது. ஆனாலும், ஓட்டுநரின் மேற்பார்வை அவசியமாகிறது.

Ford : இந்நிறுவனம் robo taxi services ஐ ஆஸ்டின் மற்றும் டெக்சாஸ் போன்ற இடங்களில் அறிமுகம் செய்கிறது.

Baidu : சீன நகரங்களில் robo taxi services ஐ வழங்குகிறது.

ஓட்டுநர்கள்களின் எதிர்காலம் என்னவாகும்?

Driverless Cars, அதாவது ஓட்டுநர்கள் இன்றி பயணிக்கும் கார்களால் தற்போது ஓட்டுநர் பணி பார்த்துக்கொண்டு இருக்கும் பலருக்கு வேலை இழப்பு அபாயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

அமெரிக்காவில் மட்டும் 5 மில்லியன் ஓட்டுநர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாட்டிலும் இந்த மாற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

அண்மையில், இதுகுறித்த தனது கருத்தை தெரிவித்த மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் இந்தியாவில் தான் பதவியில் இருக்கும் வரைக்கும் தானியங்கி வாகனங்களுக்கான அனுமதி கிடைக்காது என கூறினார். இதனால், சுமார் 70 லட்சம் ஓட்டுநர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படலாம் என்பது அவரது குற்றச்சாட்டு. 

அண்மைய தகவல்களின்படி, 2030 வரைக்கும் உலகின் எந்தவொரு இடத்திலும் முற்றிலும் தானியங்கி முறையில் இயங்கும் கார்கள், வாகனங்கள் வர வாய்ப்பு குறைவு என்கிறார்கள் ஆய்வாளர்கள். அப்படியே வந்தாலும், சிறு சிறு நகரங்களில் தான் அவை இயங்க ஆரம்பிக்கும். சிக்கலான வழித்தடங்கள் கொண்ட பகுதிகளில் அவை வருவதற்கு சாத்தியங்கள் மிகக்குறைவு. 

ஆகவே, உடனடியாக தானியங்கி வாகனங்களால் பெரும் ஆபத்து உண்டாகும் என அஞ்சத் தேவையில்லை. ஆனால், உலகம் இப்படியான மாற்றம் ஒன்றினை பார்த்துக்கொண்டு வருகிறது என்பதை அறிந்திருந்தால் அது நல்லது.

முடிவுரை

ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மனிதர்களின் பங்களிப்பு பெருமளவில் தேவைப்பட்ட வேலைவாய்ப்புகள் இதன் வருகையால் பாதிப்பிற்கு உள்ளாக ஆரம்பித்துவிட்டன. ஒருபக்கம், தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக உற்பத்தி அதிகரித்தாலும் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது.
ஆனால், இப்படிப்பட்ட மாறுதல்களை நம்மால் ஒருபோதும் தவிர்க்க முடியாது.

இந்தியாவில் தானியங்கி வாகனங்களுக்கு அனுமதி அளித்தாலும் கூட அதற்கேற்ற சாலை அமைப்புகள் இல்லாத வரைக்கும் அது சாத்தியமாவது இயலாத காரியம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular