Thursday, May 9, 2024
HomePersonal Finance In TamilCredit Card வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

Credit Card வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க

Credit Card advantage and disadvantage explained in tamil.

ஒரு காலத்தில் Credit Card வாங்குவது கடினமானதாக இருந்தது. ஆனால், இன்றைய வேகமான உலகில், கிரெடிட் கார்டை எளிதாக பெற முடிகிறது. ஆனால், Credit Card ஐ நீங்கள் முறையாக பயன்படுத்தாவிடில் உங்களை பெரும் நிதி சிக்கலில் அது தள்ளிவிடும்.   

கிரெடிட் கார்டுகள் பண சிக்கலில் நமக்கு உதவிகரமாகவும், ஆபர்களை வழங்கும் விதமாகவும் இருந்தாலும் அதில் ஆபத்துகளும் இருக்கவே செய்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட நிலைகளில் சிக்கிவிடாமல் இருக்க அதன் நன்மை மற்றும் தீமைகள் குறித்து அறிய நினைத்தால் அதற்கான சரியான பதிவு இதுதான்.

Advantages Of Having Credit Card

Buy without money

கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு அவசரமான நேரத்தில் மிகவும் உதவிகரமாக இருக்கும். உதாரணத்திற்கு, உங்களுக்கு ஒரு பொருள் மிகவும் அவசியம் ஆனால் வாங்குவதற்கு பணம் இல்லை எனில் நீங்கள் விரும்பிய நேரத்தில் அந்தப்பொருளை வாங்க கிரெடிட் கார்டு உதவும். 

வங்கி அனுமதித்த பணத்தை நீங்கள் செலவு செய்துவிட்டு அவர்கள் கொடுத்த கால அளவிற்குள் திரும்ப செலுத்தும் போது அதற்கான வட்டி [Loan Interest] போன்றவற்றை கொடுக்கத் தேவை இல்லை.

கிரெடிட் கார்டு வைத்திருப்பதன் மூலமாக நீங்கள் கடன் தேவைப்படும் போது மூன்றாம் நபரிடம் சென்று நிற்க தேவையில்லை.

Credit Card advantage and disadvantage in tamil
Credit Card advantage and disadvantage in tamil

 

CIBIl Score or Credit Score

நீங்கள் கடன்கள் அல்லது அடமானங்களுக்கு விண்ணப்பிக்கும் போது Cibil Score நன்றாக இருந்தால் தான் கடன் வழங்குவார்கள். இல்லையேல் உங்களுக்கு வங்கிகள் தர மாட்டார்கள். நீங்கள் கடனே வாங்காமல் இருந்தாலும் உங்களுக்கு Cibil Score ஏறாது. 

நீங்கள் பொறுப்பாக கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாங்குகிற கடனை முறைப்படி அடைத்தால் உங்களுக்கு Cibil Score உயரும்.

Offers and Discounts

பல கிரெடிட் கார்டுகள் வெகுமதி திட்டங்கள், கேஷ்பேக் அல்லது பயண சலுகைகளை வழங்குகின்றன.  அன்றாடச் செலவுகளுக்கு உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் செலவினங்களுக்கு உறுதியான பலன்களை வழங்கும் புள்ளிகள் அல்லது கேஷ்பேக்கைப் பெறலாம்.

Emergency Money Transaction

எதிர்பாராத செலவுகள் ஏற்படும் போது கிரெடிட் கார்டில் உள்ள பணம் அவசர நிதியாகச் செயல்படும்.  இது தேவைப்படும் நேரங்களில் உங்களுக்கு பயனை வழங்குகிறது. இது உங்கள் சேமிப்பைக் குறைக்காமல் அவசர சூழ்நிலைகளைத் தீர்க்க உங்களை அனுமதிக்கிறது.

Disadvantages Of Having Credit Card

அதிக வட்டி விகிதங்கள்

கிரெடிட் கார்டுகளின் மிக முக்கியமான குறைபாடுகளில் ஒன்று அதிக வட்டி. மாதந்தோறும் நிலுவைத் தொகையை திரும்ப செலுத்த வேண்டும். ஒருவேளை நீங்கள் கடனை திருப்பி செலுத்தாத பட்சத்தில் உங்களுக்கு அதிகப்படியான வட்டி விதிக்கப்படும்.

கடன் குவிப்பு

expense management
expense management

கிரெடிட் கார்டை நீங்கள் எளிதாக பயன்படுத்தலாம். ஆகவே, நீங்கள் அதிகப்படியான கடனை நீங்கள் வாங்கிவிடும் வாய்ப்பு மிக அதிகம். ஒரு அளவிற்கு மேல் உங்களுக்கு கடன் அதிகரிக்கும் பட்சத்தில் உங்களால் அதிகமாக கடனை திருப்பி செலுத்த முடியாது. இதனால், நீங்கள் அதிகப்படியான வட்டி கட்டும் சூழலுக்கு தள்ளப்பட்டு மூழ்கும் அபாயம் உண்டு.

கிரெடிட் ஸ்கோர் தாக்கம்

கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை தவணை தவறாமல் நீங்கள் செலுத்தாமல் போனால் உங்களுடைய சிபில் ஸ்கோர் பாதிக்கப்படும். இதனால் உங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் லோன் கிடைப்பதில் சிக்கலை உண்டாக்கும்.

ஆண்டு கட்டணம்

சில கிரெடிட் கார்டுகள் வருடாந்திர கட்டணங்களுடன் வருகின்றன. ஒருவேளை நீங்கள் கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தாமல் போனால் உங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு Offer அல்லது discount கிடைக்காமல் போகலாம். உங்களுடைய ஆண்டு கட்டணத்தை விடவும் கிடைக்கக்கூடிய பலன் குறைவாக இருந்தால் கிரெடிட் கார்டு வைத்திருப்பது வீண்.

முடிவுரை

உங்களுக்கு சீரான மற்றும் தெளிவான நிதி மேலாண்மை [Money Management] பழக்கங்கள் இருந்தால் நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருக்கலாம். கிரெடிட் கார்டு வைத்திருப்பது சில சிக்கலான நேரங்களில் உங்களுக்கு தேவைப்படும் பண தேவையை பூர்த்தி செய்திட உதவும். பொறுப்புடன் பயன்படுத்தினால், கிரெடிட் கார்டு ஒரு மதிப்புமிக்க நிதிக் கருவியாக இருக்கும், இதனை பயன்படுத்தும் போது offers மற்றும் discount உங்களுக்கு பலனை  வழங்குகிறது.  இருப்பினும், அதிக வட்டி விகிதங்கள் மற்றும் கடனைக் குவிக்கும் ஆபத்து போன்ற சாத்தியமான ஆபத்துக்களைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.  

கட்டுப்பாட்டோடு இருக்கும் திறன், தெளிவான நிதி மேலாண்மை பண்பு இரண்டும் இருந்தால் நீங்கள் தைரியமாக கிரெடிட் கார்டை பயன்படுத்தலாம்.

Personal Finance சார்ந்த மேலும் பல கட்டுரைகளை நீங்கள் வாசிக்க இங்கே கிளிக் செய்திடுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular