Saturday, April 27, 2024
HomeTech Articlesபாஷினி AI இவ்வளவு சிறப்புகளா? Bhashini AI Explained In Tamil

பாஷினி AI இவ்வளவு சிறப்புகளா? Bhashini AI Explained In Tamil

அண்மையில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி முதல் முறையாக பாஷினி AI ஐ பயன்படுத்தினார். இந்தியில் பிரதமர் பேசுவதை தமிழ் மொழி தெரிந்த பார்வையாளர்கள் தமிழில் நேரலையில் கேட்பதற்கு பாஷினி AI உதவியது.

What is Bhashini AI?

பாஷினி AI ஒரு language translation system. இது உடனடியாக ஒரு மொழியில் பேசுவதை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்த்து தருகிறது.



பாஷினி AI யின் நோக்கம், இந்திய மக்களிடையே இருக்கும் மொழி தடையை அகற்றி அவர்கள் மொழியிலேயே பேசப்படுவதை கேட்பதற்கும் எழுதப்படுவதை படிப்பதற்கும் உதவுகிறது.

சாமானிய மக்களும் இந்த AI ஐ பயன்படுத்தும் விதமாக ஆண்ட்ராய்டு, ஆப்பிள் ஐ ஓயெஸ் தளங்களிலும் இது கிடைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது.

Bhashni’s Mission

அனைத்து இந்தியர்களும் தங்கள் தாய்மொழிகளில் இணையம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை பெற உதவுவதே பாஷினியின் முக்கிய பணியாகும். பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் கொண்ட நம் நாட்டில் சிறந்த தகவல்கள் அனைத்தும் மொழிகளுக்குள் அடைபட்டு இருப்பதனால் மற்ற மொழி பேசும் மக்களுக்கு அது கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

ஆனால், Bhashini இந்தத் தடைகளை நிச்சயமாக நீக்கிவிடும்.

அதேபோல, அரசாங்க திட்டங்களையும், தீர்ப்பு உள்ளிட்ட விவரங்களையும் பல்வேறு மொழிகளில் பெற இது பெருமளவில் உதவும்.

What is Bhasha Daan initiative?

ஒரு ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் டூல் சிறப்பாக செயல்பட வேண்டுமெனில் அதனை பயிற்றுவிப்பது மிகவும் முக்கியம். இந்திய மொழிகளில் தரவுகளை உள்ளீடு செய்வதற்கு மக்களின் பங்களிப்பை கொடுப்பதற்கான ஒரு ஏற்பாடு தான் Bhasha Daan initiative.

Bhashini AI எங்கே உருவாக்கப்பட்டது?

Digital India Corporation என்ற மத்திய அரசின் அமைப்பிற்கு கீழே Digital India Bhashini Division (DIBD) வருகிறது. இது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கீழ் செயல்படுகிறது. இங்கே தான் Bhashini உருவாக்கப்படுகிறது.

Bhashini AI ஏன் முக்கியத்துவம் பெறுகிறது?

இந்தியா பல்வேறு துறைகளில் வளர்ந்து வருகிறது. உலக நாடுகளுடன் போட்டிபோட வேண்டுமெனில் பல்வேறு சவால்களை கடப்பது அவசியம். பல்வேறு மொழிகளை கொண்ட இந்தியாவின் மிக முக்கியமான சவால் தகவல் பரிமாற்றத்தில் இருக்கும் தொய்வு தான்.

இதனை சரி செய்திட Bhashini AI பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular