Friday, May 10, 2024
HomeAffiliate Marketingகாரில் துர்நாற்றம் வீசுகிறதா? வீட்டில் இருந்தே அகற்றுவது எப்படி?

காரில் துர்நாற்றம் வீசுகிறதா? வீட்டில் இருந்தே அகற்றுவது எப்படி?

சில நாட்கள் காரை நிறுத்திவிட்டு எடுக்கும்போது இருக்கக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானது “துர்நாற்றம்”. இனிமையான பயணத்தை மேற்கொள்ளலாம் என்ற நமது எண்ணத்திற்கு இந்த துர்நாற்றம் மிக முக்கியமான சிக்கலாக வந்துவிடும் (car odour remover).

பொதுவாக, இப்படியான துர்நாற்றம் எழுந்தால் அதனை சரி செய்வதற்கு நாம் கார் சர்வீஸ் செல்வோம். அங்கே அவர்கள் சில ஆயிரங்களை வாங்கிக்கொண்டு நமது காரை சரி செய்து தருவார்கள். ஆனால், சில எளிமையான வழிமுறைகளை பயன்படுத்தி வீட்டில் கிடைக்கும் சாதாரணமான பொருள்களைக் கொண்டு இந்த பிரச்சனையை சரி செய்துகொள்ள முடியும் (remove bad smell from car). அது எப்படி என்பதை இந்தப் பதிவில் காணலாம்.

காரில் துர்நாற்றம் ஏன் வீசுகிறது?

காரில் துர்நாற்றம் வீசுவதற்கு நாம் செய்யக்கூடிய தவறுகள் தான் மிக முக்கியமான காரணமாக அமைகிறது. நாம் அதனை தவிர்த்தால் சில ஆயிரங்கள் செலவு செய்து காரை மீண்டும் மீண்டும் சரி செய்திட வேண்டிய அவசியம் ஏற்படாது.

  • காரில் துர்நாற்றம் வீசுவதற்கு நாம் செய்யக்கூடிய தவறுகள் தான் மிக முக்கியமான காரணமாக அமைகிறது. நாம் அதனை தவிர்த்தால் சில ஆயிரங்கள் செலவு செய்து காரை மீண்டும் மீண்டும் சரி செய்திட வேண்டிய அவசியம் ஏற்படாது. 
  • எலி, பல்லி போன்ற பிராணிகள் காரின் உள்ளே நுழைந்து எச்சங்களை போட்டுவிடும். சில நாட்கள் நாம் காரை எடுக்காமல் விடும்போது அந்த எச்சங்கள் பெரிய அளவில் துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும். இதனை சரி செய்வது மிகவும் கடினமான விசயம்.
  • காரில் நாம் தின்பண்டங்களை தின்றுவிட்டு சிதறிய துண்டுகளை எடுக்காமல் விட்டுவிட்டால் அது சில நாட்கள் கழித்து துர்நாற்றத்தை ஏற்படுத்திவிடும்.
  • நாம் காரை கழுவும் போது மேட் உள்ளிட்டவற்றில் ஈரத்தை வைத்துவிட்டு காரை சில நாட்கள் மூடிவிட்டால் அது பூஞ்சை உள்ளிட்டவை ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.

காரில் துர்நாற்றத்தை அகற்றுவது எப்படி?

Use Air Freshener

உடனடியாக காரை நீங்கள் ஓட்டிச்செல்ல வேண்டும் என்ற நிலை வந்தால் காரை நிறுத்தி சுத்தம் செய்துகொண்டு இருக்க நேரம் இருக்காது. அந்த நேரத்தில் Air Freshener தான் சிறந்த தீர்வாக அமையும். தற்காலிக தீர்வாக இதனை நீங்கள் பயன்படுத்தலாம்.

தற்போது ஆன்லைனில் மிகக்குறைந்த விலையில் சிறந்த Air Freshener கிடைக்கின்றன.

White Vinegar and Water Solution

வினிகரின் அமிலத்தன்மை நாற்றங்களை நீக்குவதற்கு உதவுகிறது. மேலும் தண்ணீருடன் கலக்கும்போது, உங்கள் காரின் டாஷ்போர்டு மற்றும் பிளாஸ்டிக் மேட் போன்ற கடினமானவற்றை சுத்தம் செய்வதற்கு இது இயற்கையான தீர்வாகும். இது அழுக்கு மற்றும் கிரீஸ் போன்றவற்றை கூட நீக்க வல்லது.

வெள்ளை வினிகர் மற்றும் வெதுவெதுப்பான நீர் இரண்டையும் சமமாக கலக்கவும். தேவைப்பட்டால் அதிகமாக வினிகர் சேர்க்கவும். கலவையில் ஒரு துணியை நனைத்து, அதை பிழிந்து, பின்னர் துடைக்கவும். இது அனைத்துவித பூஞ்சை நாற்றத்தையும் குறைக்க உதவும். வினிகர் வாசனை நீடித்தால், ஜன்னல்களைத் திறந்து காரை காற்றில் விடவும்.

Use Baking Soda and Charcoal

பேக்கிங் சோடா மற்றும் கரி இரண்டும் இயற்கையாகவே நாற்றத்தை உறிஞ்சும் தன்மை உடையன. தரை விரிப்புகள், கார் இருக்கைகள் மற்றும் பிற துணிப் பரப்புகளில் பேக்கிங் சோடாவை தெளிக்கவும். குறைந்தது 15 நிமிடங்கள் விட்டுவிடுங்கள். ஒரு பாத்திரத்தில் பல கரி துண்டுகளை வைத்து அங்கே வைத்துவிடுங்கள். கரி தேவையற்ற வாசனையை உறிஞ்சும் விதத்தில் ஒரு இரவு முழுமைக்கும் அங்கேயே வைத்துவிடுங்கள்.

Dr. CHARCOAL Non-Electric Air Purifier

மேலே சொன்ன விசயங்களை உங்களால் செய்திட முடியவில்லை எனில் நீங்கள் அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் கிடைக்கக்கூடிய Dr. CHARCOAL Non-Electric Air Purifier மாதிரியான உபகரணங்களை பயன்படுத்தலாம்.

ஒரு வருடம் பயன்படும் இந்த உபகரணங்கள் காருக்குள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். அதேபோல, விரும்பத்தகாத வாசனைகளையும் உறிஞ்சிவிடும்.

முடிவுரை

காரில் துர்நாற்றம் வீசினால் நம்மால் பயணம் செய்வது கடினமான ஒன்றாக மாறிவிடும். காரில் துர்நாற்றம் வீசக்கூடாது என நீங்கள் நினைத்தால் காரை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை, துர்நாற்றம் வீச ஆரம்பித்துவிட்டால் மேற்கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி துர்நாற்றத்தை அகற்றுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular