Saturday, April 27, 2024
HomeStartupChai Kings Franchise துவங்குவது எப்படி? முழு விளக்கம்

Chai Kings Franchise துவங்குவது எப்படி? முழு விளக்கம்

ஒரு நல்ல நாள் என்பது பலருக்கு நல்ல தேநீர் (tea) உடன் தான் துவங்குகிறது. ஆகவே தான் நாம் வீட்டை விட்டு வெளியே வந்தாலே ஏகப்பட்ட டீ கடைகளை காண முடிகிறது.

ஒரு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பாக வயதான, அனுபவம் வாய்ந்த அல்லது குடும்பத்தில் தொடர்ச்சியாக மட்டுமே டீ கடைகளை நடத்தி வந்தார்கள். ஆனால், இப்போது பல இளைஞர்கள் புதுப்புது விதங்களில் டீ கடைகளை நடத்துகிறார்கள். அதிகப்படியாக சம்பாதிப்பதற்கு ஏற்றதொரு தொழிலாக டீ கடை வைப்பது இருக்கிறது.

முன்பு போல அல்லாமல் “தரம்” சார்ந்த மக்களின் பார்வை தற்போது மாறி உள்ளது. அவர்கள் பிராண்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். அது டீ துவங்கி ஆடை, உணவு என நீண்டு கொண்டே போகிறது.

நீங்கள் உங்கள் பெயரில் ஒரு டீ கடை துவங்குவதை விடவும் ஒரு பிராண்டு பெயரில் டீ கடை துவங்கும் போது எளிதாக மக்களை சென்று அடைய முடியும். ஆனால், இப்போது சந்தையில் பல பல பிராண்டுகள் டீ கடை பிரான்சைஸ்களை வழங்கி வருகின்றன. ஆனால், அவற்றில் Chai Kings வெற்றிகரமான பிராண்டாக பார்க்கப்படுகிறது. ஆகவே தான் இந்தப்பதிவில் Chai Kings Franchise பெறுவது எப்படி என்பது பற்றி விரிவாக பார்க்க இருக்கிறோம்.

KFC Franchise வாங்குவது எப்படி? எவ்வளவு முதலீடு தேவை?

Chai Kings Franchise பெறுவதால் என்ன நன்மைகள் இருக்கின்றன?

இப்போது எண்ணற்ற டீ பிராண்டுகள் சந்தையில் இருக்கின்றன. அவற்றில் பல பிராண்டுகள் Franchise வழங்குகின்றன. உதாரணமாக,

Chai Sutta Bar
Chaayos
Justvedic Store
Chai Break
MBA Chai Wala
Chai Point
Chaipatty Tea Cafe
Tpot Cafe
Tea Trails
Elma’s Bakery

ஆனால் Chai Kings ஒரு பரிட்சயமான டீ பிராண்டு என்பதனால் அதிலே நீங்கள் franchise வாங்கும் போது எளிதாக மக்களிடம் சென்று அடையலாம்.

‘Every Sip has a Story’ இதுதான் சாய் கிங்ஸ் இன் பன்ச் வாக்கியம். இதற்கு ஏற்றார் போல டீ யின் தரத்தில் எந்தவித சமரசமும் இல்லாமல் Chai Kings இருக்கிறது என்கிறார்கள். இவர்கள் டீ யின் தரத்தை ஒரே மாதிரியாக வைத்துக்கொள்வதற்கு இவர்களே பல்வேறு இடங்களில் தேயிலை பயிர் செய்கிறார்கள்.

அதேபோல, பல்வேறு வகையான டீ வகைகளை இவர்கள் வழங்குகிறார்கள். உதாரணத்திற்கு, மூலிகை, ஐஸ் டீ, மசாலா, டம்ளர், இஞ்சி, சுலைமணி, எலுமிச்சை, துளசி, செம்பருத்தி, ஆப்பிள், டீ ஹவுஸ் என நீண்டுகொண்டே போகிறது. இதனால், மக்கள் விரும்பிய டீ யை இங்கே பருகலாம்.

மேலும், Chai Kings குறிப்பிட்ட தொலைவிற்குல் ஆர்டர் செய்பவர்களுக்கு 500 ml கேன்களில் டீ டெலிவரி செய்திடும் வசதியையும் வழங்குகிறது. ஸ்டோர் இருக்கும் இடத்தில் இருந்து குறிப்பிட்ட இடத்திற்கு வீட்டிற்கே சென்று டெலிவரி செய்யலாம்.

Chai Kings ஐ மேலும் சிறப்பாக கொண்டு செல்ல முதலீடுகளும் ஈர்க்கபட்டுள்ளன. அதோடு, 500 க்கும் மேற்பட்ட கிளைகளை 5 ஆண்டுகளில் அடைவது என்ற லட்சியமும் அவர்களிடத்தில் உள்ளது.

2016 இல் சென்னையில் துவங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

Chai Kings Franchise Investment Details

நீங்கள் ஒரு Franchise வாங்க வேண்டும் என்றால் நிச்சயமாக முதலீடு செய்து தான் ஆக வேண்டும். அவர்களுடைய பிராண்டு மதிப்பை நீங்கள் பயன்படுத்த இந்த முதலீடு அவசியம்.

Chai Kings Franchise



Chai Kings இல் Franchise வாங்குவதற்கு 8 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஆகும். இந்தத் தொகையானது நீங்கள் எந்த இடத்தில் கடை துவங்குகிறீர்கள் என்பதை பொறுத்து மாறுபடும். இந்ததொகையில் அனைத்துவிதமான கட்டணங்களும் அடங்கி விடும்.

Chai Kings Franchise Requirements

நீங்கள் Chai Kings Franchise வாங்குவதற்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றை இங்கே விரிவாக பார்க்கலாம்.

உங்களிடம் குறைந்தபட்சம் 400 sq feet முதல் 2000 sq feet அளவுள்ள இடம் தேவை. அதேபோல, இந்த இடமானது மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிறுத்தம், பள்ளி கல்லூரி வளாகம் போன்ற இடங்களின் அருகே இருக்க வேண்டும்.

அதேபோல, Chai Kings Franchise வாங்குபவர்கள் நிச்சயமாக Chai Kings வழங்கும் பயிற்சியினை பெற வேண்டும். அவர்கள் தரும் பயிற்சியானது பிராண்டு மதிப்பு சிறப்பாக இருக்கவும், அனைத்து கடைகளும் ஒரே மாதிரியாக செயல்படவும் உதவும்.

அதேபோல, டீ விற்பனையில் சில காலமாவது அனுபவம் இருக்க வேண்டும் எனவும் Chai Kings எதிர்பார்க்கிறது.

Chai Kings Franchise Application Process

Chai Kings இல் Franchise வாங்க நீங்கள் அவர்களது இணையதளத்திற்கு (https://chaikings.com/contacts/) செல்லுங்கள். அங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் மின்னஞ்சல் முகவரி அல்லது தொலைபேசி எண்ணிற்கு அழையுங்கள். அவர்கள் அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் அடுத்தடுத்த நடவடிக்கைக்களை மேற்கொள்ளுங்கள்.

முடிவு

டீ கடை துவங்குவது என்பது இந்த காலகட்டத்தில் மிகவும் இலாபகரமான தொழில். குறிப்பாக, Chai Kings போன்றதொரு பிரபலமான நிறுவனத்தில் Franchise வாங்கி நடத்தினால் நல்ல வருமானத்தை ஈட்ட முடியும்.

KFC Franchise வாங்குவது எப்படி? எவ்வளவு முதலீடு தேவை?

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular