யூடியூப் சேனல் துவங்குவது எப்படி? How To Start A Youtube Channel?

யூடியூப் சேனல் துவங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி?

“Most of the individuals highly earned in Youtube”

Youtube Channel முறைப்படி ஆரம்பிப்பது எப்படி என்பதை இங்கே விரிவாக படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

பெரிய நிறுவனங்களின் துணை இன்றி,எங்கும் வேலைக்கு செல்லாமல் Youtube Channel துவங்கி அதன் மூலமாக சில ஆயிரங்கள் துவங்கி பல லட்சங்கள் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி கேள்விப்படும்போது நாமும் யூடியூப் சேனல் துவங்கி சம்பாதிக்கலாம் என பலர் நினைக்கின்றனர். உங்களுக்கு திறமை இருந்தால் நிச்சயமாக சம்பாதிக்கலாம். அதற்கு சில ஐடியாக்கள் இருக்கின்றன. அதற்கு முன்னதாக யூடியூப் சேனல் ஒன்றினை எப்படி துவங்குவது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். [How to start youtube channel in tamil?]

இன்று பல வீடியோக்கள் யூடியூப் மூலமாகவே பகிரப்படுகின்றன. யூடியூப் என்பது Google நிறுவனத்தின் இலவச சேவை. Google அக்கவுண்ட் கொண்ட எவரும் எவ்வளவு வீடியோ வேண்டுமானாலும் யூடியூப் இல் அப்லோட் செய்து பகிர முடியும். இதோடு சேர்த்து யூடியூப் ஒரு நன்மையையும் கொண்டிருக்கிறது. ஆம், யூடியூப் மூலமாக உங்களால் சம்பாதிக்க முடியும். YouTube Partner Program இல் நீங்கள் இணைந்து கொண்டால் உங்களால் சம்பாதிக்க முடியும். உங்களால் சிறந்த வீடீயோவை தொடர்ச்சியாக வழங்க முடிந்து அதனை அதிகப்படியான நபர்கள் பார்த்தால் உங்களுக்கு அதற்கு ஏற்ற வருமானம் வரும்.

Youtube Channel துவங்குவதற்கு முன்னதாக என்னவெல்லாம் தேவை?

Youtube Channel துவங்குவதற்கு உங்களுக்கு ஆசை இருக்கலாம். ஆனால், அதை வெற்றிகரமாக துவங்கி நடத்துவதற்கு உங்களுக்கு சில அடிப்படை விசயங்கள் மிகவும் அவசியம். அவை உங்களிடம் இருக்கிறதா என முதலில் பாருங்கள். இல்லையேல், அவற்றை ஏற்பாடு செய்துகொண்டு ஆரம்பியுங்கள். அப்போது தான் எந்தவித இடையூறும் இல்லாமல் உங்களால் செய்லபட முடியும்.

  1. தனியாக அல்லது குழுவாக

Youtube Channel துவங்குவது எளிதான விசயம் போல இருக்கலாம். ஆனால், சிறப்பான ஒரு சேனலை உருவாக்க சில அடிப்படை வேலைகளை செய்திட வேண்டியது அவசியம். உங்களுக்கு Youtube Channel துவங்க வேண்டும் என்ற ஆர்வம் வந்துவிட்டால் முதலில் நீங்கள் முடிவு செய்திட வேண்டியது, இதை நாம் தனியாக செய்யப்போகிறோமா அல்லது குழுவாக செய்யப்போகிறோமா என்பது தான்.

தனியாக செய்யப்போகிறீர்கள் என்றால், வீடியோ எடுப்பது, எடிட் செய்வது, அப்லோட் செய்வது என அனைத்தையும் உங்களால் செய்துவிட முடியுமா அதற்கான நேரம் உங்களுக்கு இருக்குமா என்பதை முதலில் பாருங்கள். இரண்டு மூன்று பேர் சேர்ந்து செய்தால் எளிதாக செய்துவிட முடியும் என்றால் உங்களைப்போலவே ஆர்வம் கொண்டவர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

பொதுவாக, குழுவாக சேர்ந்து செய்திடும் போது எளிதாக செய்திட முடியும், தொடர்ச்சியாகவும் செய்திட முடியும்.

  1. தேவையான உபகரணங்கள்

இப்போது உள்ள பார்வையாளர்கள் தாங்கள் பார்க்கக்கூடிய வீடியோ நல்ல குவாலிட்டியுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறார்கள். ஆகவே, நீங்கள் சில அடிப்படையான உபகரணங்களை வைத்துக்கொள்வது நல்லது.

camera
microphone
tripod
lighting kit
Creative assets
Editing software

மேற்கூறியவை அனைத்தும் உங்களுக்கு தேவைப்படும். இவற்றை முதலில் ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.

  1. இன்டர்நெட் வசதி

நீங்கள் தரமான வீடியோக்களை அப்லோட் செய்வதற்கு உங்களுக்கு நல்ல இன்டர்நெட் வசதி இருப்பது அவசியம்.

  1. Creative Minds

இன்றைய போட்டி நிறைந்த உலகில் நீங்கள் வெற்றிபெற புதிதாக சிந்திக்கக்கூடிய ஆட்கள் உங்களது குழுவில் இருக்க வேண்டியது அவசியம். ஆகவே, அப்படிப்பட்ட நபர்களை உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள்.

  1. பணம்

ஆரம்பகட்டத்திலேயே நீங்கள் எதிர்பார்க்கும் வருமானம் உங்களுக்கு Youtube இல் இருந்து கிடைக்காமல் கூட போகலாம். நீங்கள் வெற்றி பெற சில மாதங்கள் கூட பிடிக்கலாம். ஆகவே, அது வரைக்கும் தொடர்ச்சியாக உங்களது வேலைகளை நீங்கள் செய்துகொண்டே இருக்க குறிப்பிட்ட அளவு பணத்தை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

Niche என்ன? Target Audience யார்?

நீங்கள் YouTube channel இல் வெற்றிபெற வேண்டுமெனில் முதலில் நீங்கள் செய்திட வேண்டியது ‘Niche’ என்ன என்பதை முடிவு செய்திட வேண்டியது தான். Niche என்றால் வேறொன்றும் இல்லை, உங்களது சேனலில் எது பற்றிய வீடியோவை பகிர போகிறீர்கள் என்பது தான். உதாரணத்திற்கு, டிராவல் சேனல், உணவு தயாரிக்கும் சேனல், உணவு review செய்திடும் சேனல் என்றெல்லாம் இருக்கிறது அல்லது அப்படி உங்களது சேனல் எது பற்றியது என்பதை தேர்வு செய்வதில் அதிக கவனம் தேவை. அந்த Niche மக்களுக்கு பிடிக்குமா, எவ்வளவு பேருக்கு பிடிக்கும், ஏற்கனவே அதே மாதிரி சேனல் எதுவும் இருக்கிறதா என பல விசயங்களை பார்த்து முடிவுக்கு வாருங்கள்.

அதேபோல, உங்களது சேனல் யாருக்கானது என்பதில் தெளிவாக இருங்கள். சிறுவர்கள் பார்க்கப்போகிறார்களா, பெண்கள் பார்க்கப்போகிறார்களா, வயதானவர்கள் பார்க்கப்போகிறார்களா என முதலிலேயே தெளிவாக இருப்பது அவசியம். அப்போது தான் அவர்களுக்கான வீடியோக்களை உங்களால் சிறப்பாக செய்திட முடியும்.

புதிய யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி?

Need Google Account

நீங்கள் Youtube சேனல் துவங்குவதற்கு ஒரு ஜிமெயில் கணக்கு அவசியம். உங்களிடம் ஏற்கனவே ஜிமெயில் இருந்தால் அதனையே நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இல்லையேல் பின்வரும் முறையை பின்பற்றி உருவாக்கலாம்.

https://www.google.com என்கிற இணையதளத்திற்கு சென்று உங்களுக்கென கணக்கினை தொடங்க வேண்டும். இது முற்றிலும் இலவசமான ஒன்று. இந்த கணக்கை தொடங்குவதன் மூலமாக நீங்கள் இலவசமாக கூகிளின் பிற வசதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அவை கூகிள் பிளஸ், மெயில் சேவை, கூகிள் டிரைவ் (Google Drive) இன்னும் பல சேவைகள்.

Create Channel on Youtube

யூடியூப் (youtube.com) இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட user name, password கொண்டு உள்நுழையுங்கள். பிறகு பின்வரும் படத்தில் காட்டியுள்ளபடி உங்கள் போட்டோ வை கிளிக் செய்யுங்கள். அதன் பிறகு வரும் வாய்ப்புகளில் (Options) “My Channel” ஐ கிளிக் செய்யவும். கிளிக் செய்தவுடன் பின்வரும் பக்கத்தை உங்களால் காண முடியும். கிளிக் செய்தவுடன் பின்வரும் பக்கத்தை உங்களால் காண முடியும். நீங்கள் ஏற்கனவே சேனல் வைத்திருப்பின் உங்களால் அதனை இங்கு காண முடியும்.

புதிய யூடியூப் சேனல் உருவாக்குவது எப்படி?

இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் “https://www.youtube.com/account”. பிறகு கீழேயுள்ள “See all my channels or create a new channel” கிளிக் செய்யுங்கள் .


அதில் நீங்கள் ஏற்கனவே சேனல் வைத்திருந்தால் அது தெரியும். மேலும் “create a new channel” என்றொரு option இருக்கும். அதனை கிளிக் செய்யுங்கள்.  “Brand Account name” இல் உங்கள் சேனலின் பெயரினை இடுங்கள். “Create ” ஐ கிளிக் செய்யுங்கள்.



உங்களுக்கான சேனல் தயாராகிவிட்டது. நீங்கள் இனி உங்களது வீடீயோவை அப்லோட் செய்யலாம்.

இப்போது நீங்கள் செய்யவிருப்பதுதான் மிக முக்கியமான பகுதி “Monetization”

“Monetization” க்கு விண்ணப்பிப்பது எப்படி?

“Monetization” என்பது நமது சேனலை யூடுயூப் (youtube) நிறுவனத்தார் ஆய்வு செய்து நமது சேனலை அங்கீகரிப்பது எனலாம். இந்த ஆப்ஷனை தேர்தெடுத்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

உங்களது சேனல் சில விசயங்களை அடைந்தால் தான் உங்களால் ‘Eligibility’ க்கு விண்ணப்பிக்க முடியும்.

  • உங்களது சேனல் 1000 subscribers ஐ பெற்றிருக்க வேண்டும்
  • கடந்த 12 மாதங்களில் 4000 மணி நேர பார்வை நேரத்தை பெற்றிருக்க வேண்டும் அல்லது 10 மில்லியன் Shorts Views ஐ கடந்த 90 நாட்களில் பெற்றிருக்க வேண்டும்.
Youtube partner program eligibility 2023

Youtube Views ஐ அதிகரிப்பது எப்படி?

மேலே சொன்ன விசயங்களை பின்பற்றி நீங்கள் Youtube சேனல் ஒன்றினை திறந்து இருப்பீர்கள் என நம்புகிறேன். இப்போது உங்களுக்கு eligibility கிடைக்கவும் அதிக வருமானம் கிடைக்கவும் நீங்கள் சில ஐடியாக்கள் இருக்கின்றன.

  • உங்களது சேனலை மக்கள் நியாபகத்தில் வைத்திருக்கும் விதத்தில் சேனல் பெயரை வைத்திடுங்கள்.
  • அதிகமாக மக்கள் தேடும் விசயங்கள் குறித்து வீடியோக்களை போடுங்கள்
  • Title மற்றும் Description இல் முக்கியமான Keyword இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
  • உங்களது சேனலில் உள்ள வீடியோக்களை பார்வையாளர்கள் எளிதில் கண்டுபிடிக்கும் விதத்தில் Playlist ஐ உருவாக்குங்கள்
  • எப்போதும் மக்கள் விரும்பும் விதத்தில் உங்களது வீடியோக்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

உங்களது யூடியூப் சேனலை பிரபலமாக்குவது எப்படி?

உங்களது சேனலில் உள்ள வீடியோக்கள் மக்கள் விரும்பும் வகையில் இருந்தால் போதும் உங்களது சேனலை அவர்களே பிரபலமாக்குவார்கள். அவர்கள் உங்களது வீடியோக்களை பகிர ஒரு காரணத்தோடு வீடியோவை உருவாக்குங்கள்.

உங்களது சேனல் பெயரில் முன்னனி சமூக வலைதளங்கள் அனைத்திலும் ஒரு கணக்கை உருவாக்குங்கள். அங்கே உங்களது வீடியோவை பகிருங்கள். அதன் மூலமாக உங்கள் சேனல் பிரபலமாகும்.

உங்களுக்கு பிரபலங்கள் யாரையும் தெரிந்திருந்தால் அவர்கள் மூலமாகவும் உங்களது சேனலை பிரபலபடுத்தலாம்.

சக பிரபல்யமான யூடியூப் பிரபலங்கள் யாரேனும் தெரிந்திருந்தால் அவர்கள் மூலமாக உங்களது சேனலை பிரபலமாக்க முயலலாம்.

முடிவு

இந்தக்கட்டுரையில் யூடியூப் சேனல் துவங்குவதற்கான அடிப்படை விசயங்கள் துவங்கி சேனலை பிரபலமாக்குவது எப்படி என்பது வரைக்கும் விரிவாக உங்களுக்கு விளக்கி இருக்கிறேன். நிச்சயமாக இது உங்களுக்கு பலன் தரும் என நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவிடுங்கள்.