Monday, May 20, 2024
HomeTech Articles"System UI isn’t Responding" - மொபைலில் இந்த பிரச்சனை இருக்கிறதா? 100% Solution

“System UI isn’t Responding” – மொபைலில் இந்த பிரச்சனை இருக்கிறதா? 100% Solution

Android Fix

நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் திடீரென “UI isn’t Responding” என்ற pop up அடிக்கடி வருகிறது என்ற பிரச்சனை பயனாளர்களிடையே இருக்கிறது. இந்தப்பிரச்சனையை சரி செய்திட ‘ factory reset’ செய்வது அவசியமில்லாத ஒன்று. பின்வரும் வழிமுறையை பயன்படுத்தி இதை சரி செய்யலாம்.



“UI isn’t Responding” இந்த பிரச்சனை தற்போது பல ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் வருகிறது. சில சமயங்களில் குறிப்பிட்ட ஆப்பை இன்ஸ்டால் செய்திடும் போது இந்த பிரச்சனை எழுகிறது. நீங்கள் குறிப்பிட்ட அந்த ஆப்பை நீக்கிய பின்னரும் கூட இந்த pop up பிரச்சனை எழுந்துகொண்டே தான் இருக்கும். இதனை சரி செய்திட பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினால் ஏதாவது ஒரு நிலையில் இந்தப் பிரச்சனை சரியாகி விடும். எனது நண்பருக்கும் இந்தப்பிரச்சனை இருந்தது பின்னர் சரி செய்யப்பட்டு விட்டது.

1. Restart the Phone

உங்களது ஆண்ட்ராய்டு மொபைலை சுவிட்ச் ஆப் [Switch Off] செய்து பிறகு மீண்டும் ஆன் [On] செய்திடுங்கள். பல சமயங்களில் மொபைல் போனை restart செய்தாலே பிரச்சனைகள் சரியாகிவிடும். நீங்கள் restart  செய்த பின்னரும் இதே பிரச்சனை நீடித்தால் இரண்டாவது வழிமுறையை பின்பற்றுங்கள்.

2. Check internal memory

பல்வேறு சமயங்களில் நமது போனில் இருக்கக்கூடிய மெமரி [memory] முடிந்துபோய்விடும். அப்படி இன்டெர்னல் ஸ்டோரேஜ் முடிந்துபோனாலும் கூட “UI isn’t Responding” என்ற pop up வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தேவையில்லாத பைல்களை நீக்கி மெமரி இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

3. Update your Apps

எனது நண்பருக்கு “UI isn’t Responding” என்ற பிரச்சனை இருந்த போது அவரது மொபைலில் இருக்கும் அனைத்து ஆப்களையும் அப்டேட் செய்திடுமாறு ஆலோசனை தெரிவித்தேன். அவரும் அப்படி செய்திடவே pop up  வருவது நின்று போன்றது. நீங்கள் இந்த வழிமுறையை பின்பற்றினால் பிரச்சனை சரியாகிவிடும். அப்படியும் சரியாகாவிடில் அடுத்த வழிமுறைக்கு செல்லுங்கள்.

4. System Software Update

மேற்கூறிய 3 வழிமுறைகளை பின்பற்றியும் பிரச்சனை சரியாகவில்லை எனில் உங்களது மொபைல் போனில் Settings > About phone > Software update > Check for Updates என்பதில் சென்று உங்களது ஆண்ட்ராய்டு மொபைல் போனுக்கு அப்டேட் வந்துள்ளதா என பாருங்கள். வந்திருந்தால் அதனை அப்டேட் கொடுத்திடுங்கள். இப்போது உங்களது மொபைலை restart செய்து “UI isn’t Responding”  என்ற பிரச்சினை இருக்கிறதா என பாருங்கள். இருந்தால் கடைசி வழிமுறையாக factory reset செய்துவிடுங்கள்

5. Factory Reset

பொதுவாக மேற்க்கூடிய வழிமுறைகளை பின்பற்றினாலே பிரச்சனைகள் சரியாகிவிடும். அப்படியும் சரியாகாவிடில்  கடைசி வழிமுறையாக Factory Reset என்பதை செய்துவிடுங்கள். நீங்கள் இப்படி செய்திடும் போது உங்களது மொபைலில் இருக்கும் அனைத்து தகவல்களும் அழிந்துபோகும். ஆகவே நீங்கள் Factory Reset கொடுப்பதற்கு முன்னதாக backup எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்களது மொபைலில் பிரச்சனை எழுந்திருந்தால் நீங்கள் எந்த வழிமுறையை பின்பற்றிய போது பிரச்சனை சரியாகியது என கமெண்டில் தெரிவியுங்கள். பிறருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular