Sunday, May 12, 2024
HomeBiographyஉடுப்பி ராமச்சந்திர ராவ் : இந்தியாவின் சேட்டிலைட் மேன் | கூகுள் டூடுள்

உடுப்பி ராமச்சந்திர ராவ் : இந்தியாவின் சேட்டிலைட் மேன் | கூகுள் டூடுள்

Udupi Ramachandra Rao Bio

உடுப்பி ராமச்சந்திர ராவ் [Udupi Ramachandra Rao] அவர்களின் பிறந்த தினத்தை [மார்ச் 10] நினைவு கூறும் விதமாக கூகுள் நிறுவனம் அவரது புகைப்படத்தை முகப்பில் வைத்து கொண்டாடியது. இந்திய விண்வெளித்துறையை சிறப்பான உயர்விற்கு அழைத்துச் சென்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் உடுப்பி ராமச்சந்திர ராவ்.

உலகில் சிறந்தவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் அவர்களின் பங்களிப்பை நினைவு கூறும் விதமாகவும் குறிப்பிட்ட நாட்களில் அவர்களின் புகைப்படத்தை தனது முகப்பில் [doodle] வைத்து கொண்டாடும். அந்த வகையில் இந்தியாவின் மிக முக்கிய விண்வெளி விஞ்ஞானி, இந்தியாவின் சேட்டிலைட் மேன் [India’s Satellite Man] என அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உடுப்பி ராமச்சந்திர ராவ் அவர்களின் 89 ஆவது பிறந்த தினத்தை நினைவுகூறும் விதமாக கூகுள் நிறுவனம் முகப்பில் அவரது புகைப்படத்தை வைத்துள்ளது. இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டா [Aryapatta] திட்டத்தில் இவரது பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

1932 மார்ச் 10 அன்று கர்நாடகாவின் தொலைதூர கிராமத்தில் பிறந்த பேராசிரியர் ராவ் தனது பணியை அண்ட-கதிர்வீச்சு  இயற்பியலாளராக [cosmic ray physicist] துவங்கினார். டாக்டர் விக்ரம் சாராபாயின் வழிகாட்டுதழின் பேரில் அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தின், இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் தனது முனைவர் ஆராய்ச்சியை முடித்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின்னர், பேராசிரியர் ராவ் அமெரிக்காவிற்கு சென்றார்.  அங்கு அவர் பேராசிரியராக பணிபுரிந்தார் மற்றும் நாசாவின் முன்னோடி மற்றும் எக்ஸ்ப்ளோரர் விண்வெளி ஆய்வுகள் குறித்து சோதனைகளை நடத்தினார்.

 

பேராசிரியர் ராவ் 1966 ஆம் ஆண்டில் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி, 1972 ஆம் ஆண்டில் தனது நாட்டின் செயற்கைக்கோள் திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர், விண்வெளி அறிவியலுக்கான நாட்டின் முதன்மையான நிறுவனமான இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஒரு விரிவான உயர் ஆற்றல் வானியல் திட்டத்தைத் தொடங்கினார். 

 

1975 ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ‘ஆர்யபட்டா’ ஏவப்படுவதை அவர் மேற்பார்வையிட்டார். அவர் உருவாக்கிய 20 க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களில் இதுவும் ஒன்றாகும், இந்த செயற்கைகோள்கள் தகவல் தொடர்பு மற்றும் வானிலை சேவைகளை மேம்படுத்துவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பெரும்பகுதியை மாற்றியது. 






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular