Sunday, April 28, 2024
HomeGadgetsமைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம் | ஹோலோலென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

மைக்ரோசாப்ட் ஹோலோலென்ஸ் 2 அறிமுகம் | ஹோலோலென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

HoloLens explained in tamil

Hololens

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) என்ற தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஹோலோலென்ஸ் 2 ஐ மைக்ரோசாப்ட் நிறுவனம் தற்போது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது.விலை $3500, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 2,50,000 ஆகும். 



Click Here! Get Updates On WhatsApp

இந்த ஆண்டின் துவக்கத்தில் பார்சிலோனாவில் நடைபெற்ற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் [Mobile World Congress] மாநாட்டில் ஹோலோலென்ஸ் 2 ஐ [Hololens 2]அறிமுகப்படுத்தியது மைக்ரோசாப்ட் நிறுவனம். நவம்பர் 07 முதல் இதனை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. அதன்படி அமெரிக்கா, ஜப்பான், சீனா, ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்கள் வாங்கிக்கொள்ள இயலும். விலை $3500, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ 2,50,000 ஆகும். ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து செயல்படும் ஹோலோலென்ஸ் 1 பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஹோலோலென்ஸ் 2 ஐ அதிரடியாக களமிறக்கி இருக்கிறது மைக்ரோசாப்ட் நிறுவனம். 

 

இந்த பகுதியில் ஹோலோலென்ஸ் எப்படி வேலை செய்கிறது? அதனால் என்ன பயன் ஏற்படப்போகிறது என்பதனை பார்க்கலாம்.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி

HoloLens explained in tamil

ஹோலோலென்ஸ் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு ஹெட்செட் [Headset]. அதனை தனது தலையில் அணிந்துகொள்ள வேண்டும். தற்போதைய ஹோலோலென்ஸ் இல் ஐரிஸ் முறையிலான உள்ளீடு [login] செய்திடும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் நீங்கள் தலையில் அணிந்தவுடனேயே இயங்க ஆரம்பித்து விடும். 

 

 

ஹோலோலென்ஸ் ஆனது ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality) என்ற தொழில்நுட்பத்தினை அடிப்படையாக கொண்டு செயல்படுகிறது. விர்ச்சுவல் ரியாலிட்டி [Virtual Reality] முறைப்படி இயங்கும் கருவியை நீங்கள் அணிந்துகொண்டால் நீங்கள் முழுவதுமாகவே வேறு ஒரு இடத்தில் இருப்பதை போன்ற எண்ணம் தோன்றும். உதாரணத்திற்கு நிலவில் இருப்பதை போன்று கூட உணர்வினை உங்களுக்கு ஏற்படுத்திட முடியும். 

 

ஆனால் ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் நீங்கள் இருக்கும் இடம் அப்படியே தான் இருக்கும். ஆனால் கூடுதலாக, டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம் [பொருள், செடி , மரம், இயந்திரம், புத்தகம் etc] அதோடு இணைத்து உங்களது விருப்பம் போல காட்டப்படும். உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் இருக்கும் மேசை இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதன் மேல் ஒரு அழகிய பொம்மை பைக் ஒன்று நின்றால் அருமையாக இருக்கும் என நீங்கள் நினைக்கலாம். அதனை ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் செய்திட முடியும். உங்களது கண்களுக்கு மட்டுமே அப்படி டிஜிட்டல் முறையில் உருவாகும் பொருள் தெரியும். அதேபோல சுவரே இல்லாமல் கூட பிரவுசிங் செய்திட முடியும், வீடியோ பார்க்க முடியும்.

ஹோலோலென்ஸ் எப்படி வேலை செய்கிறது?

Hololens-camera

ஹோலோலென்ஸ் என்பது படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஒரு ஹெட்செட். அதனை தனது தலையில் அணிந்துகொள்ள வேண்டும். தற்போதைய ஹோலோலென்ஸ் இல் ஐரிஸ் முறையிலான உள்ளீடு [login] செய்திடும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளதால் நீங்கள் தலையில் அணிந்தவுடனேயே இயங்க ஆரம்பித்து விடும். 

 

ஹோலோலென்ஸ் இன் முன்புறமாக 5 க்கும் மேற்பட்ட கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை உங்களை சுற்றி இருக்கும் பொருள்களை ஆராய்ந்து அதன் தகவல்களை உடனுக்குடன் அனுப்பிக்கொண்டே இருக்கும். 

அதேபோல ஹோலோலென்ஸ் இல் Holographic Processing Unit (HPU) எனும் அமைப்பு இருக்கிறது. மிக அதிக அளவிலான தகவல்களை ஒருங்கிணைத்து மிக வேகமாக புராஸஸ் செய்கிற திறன் படைத்த இந்த அமைப்புதான் ஹோலோலென்ஸ் சிறப்பாக செயல்பட முக்கியகாரணமாக இருக்கிறது. 

 

ஹோலோலென்ஸ் ஐ நீங்கள் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில் இப்படி புரிந்துகொள்ளலாம், அதாவது ஒரு திறன் வாய்ந்த கணினி ஒன்றினை நீங்கள் ஹெட்செட் வடிவில் தலையில் மாட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். அந்த கணினியின் திரையானது உங்களது கண்களுக்கு முன்னால் இருக்கிற கண்ணாடி. அந்தக்கண்ணாடியின் வாயிலாக நீங்கள் உங்களை சுற்றி இருப்பவற்றையும் கணினியில் இருந்து வரும் பிம்பத்தையும் ஒருங்கே இணைத்துப்பார்க்க முடியும். மிகச்சிறந்த கேமரா, ஸ்பீக்கர், புராசஸர், டிசைன், பேட்டரி என சிறப்பானதாக இருக்கிறது.

ஹோலோலென்ஸ் அப்ளிகேஷன்ஸ் உதாரணங்கள்

பியானோ

நீங்கள் உங்களது அறையில் இருக்கிறீர்கள் அப்போது உங்களுக்கு ஒரு பியானோ வாசிக்க வேண்டும் என தோன்றுகிறது. ஹோலோலென்ஸ் ஐ அணிந்துகொண்டு பியானோ வேண்டும் என கட்டளையிடுங்கள். உங்களுக்கு பியானோ பிம்பம் தோன்றும். உண்மையான பியானோ எப்படி இருக்குமோ அதே உணர்வு உங்களுக்கு ஏற்படும். அதோடு நில்லாமல் நீங்கள் உண்மையான பியானோவை எப்படி இயக்குவீர்களோ அதேபோல கீ யை அழுத்தினால் உங்களது ஹோலோலென்ஸ் ஹெட்செட் இல் இருக்கின்ற அதிதிறன் வாய்ந்த ஸ்பீக்கர் மூலமாக இசையை உங்களால் கேட்க இயலும். கேட்பதோடு மட்டுமில்லாமல் உங்களுக்கு கேட்பதை மற்றவர்களும் கேட்கச்செய்யலாம். 

 

ஹோலோலென்ஸ் முன்பக்கத்தில் இருக்கின்ற கேமரா ஒன்றானது உங்களது மட்டும் தெரிவதனை பிறரும் பார்க்கும் விதமாக ரெகார்ட் செய்துகொள்ளும் வசதியை வழங்குகிறது

மாதிரி வடிவமைப்புகள்

HoloLens explained in tamil

புதிய கார், வீடு அல்லது இயந்திரம் போன்றவற்றை வடிவமைக்கும் பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு ஹோலோலென்ஸ் பெரும் பயன் அளிக்கும். உதாரணத்திற்கு உங்களால் எந்தவித உபகரணங்களும் இன்றி மாதிரி வீட்டையே உருவாக்கிட முடியும். அதேபோல பிறருக்கு விளக்குவதற்கும் நீங்கள் இந்த ஹோலோலென்ஸ் ஐ பயன்படுத்த முடியும். இதனுடைய பலன்கள் இதுமட்டுமல்ல இன்னும் பல்வேறு துறைகளிலும் இது மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது.

 

 குறிப்பாக மருத்துவம், கல்வி, வடிவமைப்பு போன்ற துறைகளில் ஆதிக்கம் செலுத்தும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular