Saturday, May 11, 2024
HomeTech Articlesஆக்மெண்டெட் ரியாலிட்டி என்றால் என்ன? | Augmented Reality in Tamil

ஆக்மெண்டெட் ரியாலிட்டி என்றால் என்ன? | Augmented Reality in Tamil

Augmented Reality Technology Explained In Tamil

இருபதாம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் ஆண்டாகவே கருதலாம். பல தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகள் இக்காலத்தில் தான் அடுத்த நிலைக்கு சென்றுள்ளது. இதில் தற்போது ஆக்மென்ட் ரியாலிட்டி (Augmented reality) வந்து சேர்ந்துள்ளது. ஆக்மென்ட் ரியாலிட்டி என்பது விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) என்ற தொழில்நுட்பத்தின் முன்னேற்றமே.

விர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) 

இந்த தொழில்நுட்பத்தில் உபயோகிப்பாளர் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் அணிதிருக்கவேண்டியது அவசியம். இந்த தொழில்நுட்பத்தில் உபயோகிப்பாளர் விர்ச்சுவல் உலகில் இருப்பதை போன்று தோன்றும். அதிகபட்சமாக பார்ப்பதோடு சேர்த்து சத்தம்,வாசனை ,கேட்டல்,தொடுதல் போன்ற உணர்வுகளையும் சென்சாரின் உதவிகொண்டு அனுபவிக்க முடியும்.

virtual reality in tamil
virtual reality in tamil

உதாரணமாக ஒரு துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் (Gun Game ) விர்ச்சுவல் ரியாலிட்டி கண்ணாடி  அணிந்து கொண்டு விளையாடும் போது நம்முடன் கேம் இணைக்கப்பட்டிருக்கும். அந்த கண்ணாடியை அணிந்து கொண்டு தலையை திருப்புவதன் மூலமாக திரையிலும் நாம் திரும்புவோம்.

எளிமையாக சொல்லபோனால் இடது வலது பட்டன்களை அழுத்தி கணினி திரையில் பார்ப்பதற்கு பதிலாக நம் தலையை சரியான திசையை நோக்கி திருப்பி நாம் செய்ய வேண்டியதை செய்யலாம். நாம் எந்த பக்கமாக தலையை திருப்பி சுட  வேண்டிய இடத்தினை உண்மையாக பார்ப்போமா அதை போலவே கண்ணாடி அணிந்துகொண்டு தலையை திருப்பினால் நம்மால் சுட வேண்டிய இடத்தினை பார்க்கமுடியும்.

கீழே குனிவது நடப்பது போன்ற நமது செயல்கள் அனைத்தையும் நம் கண்களால் 3டி  கோணத்தில் பார்க்க முடியும்.எளிமையாக சொல்லப்போனால் 3டி முறையில் அனுபவிப்பதே விர்ச்சுவல் ரியாலிட்டி.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி (Augmented Reality)

விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்தில் இருக்கும் அனைத்து விசயங்களும் இதில் இருக்கும். விர்ச்சுவல் ரியாலிட்டி முறையில் நாம் உண்மையில் இருக்கும் இடத்திற்கும் திரையில் தெரிவதற்கும் தொடர்பு இருக்காது ஆனால் ஆக்மெண்டெட் தொழில்நுட்பத்தில் நாம் இருக்கும் இடத்திற்கும் நாம் திரையில் காணும் இடத்திற்கும் முழு சம்பந்தம் உண்டு. உங்கள் கருவியில் இருக்க கூடிய GPS மற்றும் கேமரா வசதியை கொண்டு தகவல்கள் சேகரிக்கப்பட்டு அது உங்கள் திரையில் உருவாக்கம் செய்து காட்டப்படும்.

pogi man game - augmented reality technology example
pogi man game – augmented reality technology example

குறிப்பாக உருவாக்கம் செய்யப்பட்ட தகவல்களுடன்  கம்ப்யூட்டரின் உதவி கொண்டு வேறு சில தகவல்களையும் சேர்த்து பயனாளிகளின் திரையில் காட்ட முடிவதே ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் சிறப்பு.

போகி மேன் கேம் 

ஆக்மெண்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்திற்கு மிகசிறந்த உதாரணம் போகி மேன் கேம். இந்த கேமில் நீங்கள் இருக்க கூடிய பகுதியின் தகவல்கள் உங்கள் ஸ்மார்ட் போனில் இருக்க கூடிய கேமரா மற்றும் GPS  உதவி கொண்டு சேகரிக்கப்பட்டு உங்கள் திரையில் காட்டப்படும். அதோடு மட்டுமில்லாமல் கம்ப்யூட்டரின் உதவி கொண்டு உங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் ஒரு பூச்சியையோ விலங்கையோ உங்கள் திரையில் கட்டிட செய்வார்கள்.

நீங்கள் அந்த பூச்சியை பிடிக்க அந்த இடத்திற்கு உண்மையாலுமே நடந்து செல்லவேண்டும். அப்படி செல்லும் போது உங்கள் போன் திரையில் நீங்கள் அந்த பூச்சி இருக்கும் இடத்தினை நோக்கி செல்வது தெரியும். இதில் அந்த பூச்சி தான் கம்ப்யூட்டர் கொண்டு கூடுதலாக இணைக்கப்பட்ட தகவல். உண்மையாலுமே அந்த இடத்தில் பூச்சியோ விலங்கோ இருக்காது. உங்கள் மொபைல் போனை அந்த இடத்திற்கு அருகில் கொண்டு சென்றால் பூச்சியினை பிடித்துவிடலாம் உங்கள் ஸ்கோர் உயரும்.

ஆக்மெண்டெட் ரியாலிட்டி பயன்கள்

மருத்துவத்துறையில் மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கும் எளிமையாகவும் தெளிவாகவும் ஆலோசனைகளை பெறுவதற்கும் AR தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது

அவசர நேரங்களில் எங்கிருந்து வேண்டுமானாலும் AR அப்ளிகேசன்களை பயன்படுத்தி சிகிச்சையை அளித்திட முடியும்

ராணுவத்தில் AR தொழில்நுட்பத்தை சேர்ந்த அப்ளிகேசன்களை பயன்படுத்துவதன் மூலமாக எதிராணியினரின் இடங்களை அறிந்துகொள்வது, புதிய வீரர்களுக்கு பயிற்சி அழிப்பது போன்றவற்றை எளிமையாக செய்திட முடியும்

AR தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, கருவியுடன் இணைக்கப்பட்டியிருக்கும் GPS மற்றும் Camera உதவியுடன் live view ஆக வழித்தடங்களை அறிந்துகொள்ள இயலும்.

மேலும் இது மாதிரியான தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை படிக்க நமது WhatsApp Channel இல் இணைந்திடுங்கள்.

TECH TAMILAN

RELATED ARTICLES

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular