Saturday, May 11, 2024
HomeAppsFacebook Pay அமெரிக்காவில் அறிமுகம் - facebook வாயிலாக பணம் அனுப்பலாம்

Facebook Pay அமெரிக்காவில் அறிமுகம் – facebook வாயிலாக பணம் அனுப்பலாம்

Facebook-Pay tamil

Facebook Pay

சமூக வலைதள ஜாம்பவான் facebook நிறுவனம் “Facebook Pay” என்ற வசதியை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலமாக பயனாளர்கள் மற்ற ஆப்களை பயன்படுத்தாமலே பணம் அனுப்ப, பொருள்களை வாங்க முடியும்.



Click Here! Get Updates On WhatsApp

நவம்பர் 12,2019 அன்று facebook pay என்ற வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கக்கூடிய facebook பயனாளர்கள் இந்த வசதி மூலமாக பணம் அனுப்பிக்கொள்ள மற்றும் பெற்றுக்கொள்ள முடியும். இந்தியாவில் நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கும் Google Pay மற்றும் phonepe போலவே தான் facebook pay வசதியும் இருக்கும். பணம் அனுப்புவதற்கு தனியாக ஒரு ஆப் என இல்லாமல் நாம் ஏற்கனவே பயன்படுத்திக்கொண்டு இருக்கும் facebook ஆப்பிலேயே இந்த வசதி வர இருப்பதனால் பெரும்பாலானவர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Pay எப்படி செயல்படும்?

Facebook-Pay tamil

நாம் எப்படி Google Pay ஆப்பை பயன்படுத்துகிறோமோ அதைப்போலவே தான் Facebook Pay என்கிற வசதியும் இருக்கும். 

 

பயனாளர் தனது facebook ஆப்பை திறக்க வேண்டும் 

 

settings பகுதிக்குள் நுழைந்து “facebook pay” என்ற ஆப்ஷனை கிளிக் செய்திட வேண்டும் 

 

பின்னர் payment முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 

 

இதில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்திக்கொள்ள முடியும் 

 

அதேபோல PIN எண்ணையும் பயன்படுத்திக்கொள்ளலாம் 

 

Facebook மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரண்டிலும் பயனாளர்களால் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும். தற்போது facebook pay ஆப்சன் இதனை எளிமைப்படுத்தும். அதேபோல Facebook Pay வசதி மற்ற ஆப்களான இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், மெசஞ்சர் போன்றவற்றில் தானாக இணைக்கப்படாது என்றும் பயனாளர்கள் ஒப்புதல் அளித்தால் மட்டுமே இணைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Pay வருமா?

Whatsapp Business logo

இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் WhatsApp Pay வசதியானது சோதனை அளவில் இருக்கிறது. கிட்டத்தட்ட 400 மில்லியன் WhatsApp பயனாளர்கள் இருக்கும் போது 1 மில்லியன் பயனாளர்களுக்கு சோதனை முயற்சியாக கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைத்து பயனாளர்களுக்கும் WhatsApp Pay வருமா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. அதற்க்கு காரணம் இந்திய பயனாளர்கள் மேற்கொள்ளும் பண பரிமாற்றம் தொடர்பான தகவல்களை நிர்வகிக்கும் சர்வர்கள் இந்தியாவில் இருக்கவேண்டும் (data localisation norms) என்ற நிபந்தனையை இன்னும் WhatsApp நிறைவேற்றிடவில்லை. அதனை நிறைவேற்றிடும் போதுதான் WhatsApp Pay துவங்குவதற்கான அனுமதி கிடைக்கும் என RBI உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

 

பெரும்பாலானவர்கள் பொருள்களை வாங்கவும் விற்கவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்திட துவங்கிவிட்ட இந்நேரத்தில் Facebook Pay மிகச்சிறந்த வசதியாகவும் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாகவும் இருக்கும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular