Friday, May 10, 2024
HomeDigital AdvertisingDifference between First Price Auction vs Second Price Auction? Digital Advertising

Difference between First Price Auction vs Second Price Auction? Digital Advertising

first price auction second price auction

First vs Second Price Auction

RTB இல் இரண்டு முறைகளில் bid winning Price பெறப்படுகிறது. அவை First Price Auction மற்றும் Second Price Auction


ஓர் இணையத்தளத்தையோ அல்லது மொபைல் ஆப்பையோ நீங்கள் பயன்படுத்திடும் போது விளம்பரங்கள் தோன்றுவதை பார்த்திருப்போம். ஒவ்வொருமுறை உங்களுக்கு விளம்பரம் காட்டப்படுவதற்கு முன்னதாக எந்த விளம்பரம் காட்டப்படவேண்டும் என்பதற்க்காக ஏலம் (auction) நடக்கும். Real Time இல் நடக்கின்ற இந்த முறைக்கு RTB அதாவது Real Time Bidding  தொழில்நுட்பம் என்று பெயர்.

விளம்பரம் காட்டப்பட்டவுடன் அதற்க்கு கட்டணமாக எவ்வளவு பணம் Advertiser களிடமிருந்து வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க Second Price Auction என்ற முறையினையே இதற்க்கு முன்னதாக பயன்படுத்தப்பட்டது.  தற்போது First Price Auction என்ற முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த இரண்டு முறைகளிலும் எவ்வாறு கட்டணம் வசூலிக்கப்படும் என்பதனையும் இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தையும் பார்க்கலாம்.

Read this also :

How does Real Time Bidding Work?

Click Here

What is Behavioral Targeting?

Click Here

What is Contextual Targeting?

Click Here

What is Retargeting?

Click Here

Second Price Auction

second-price auction

ஒரு Ad Slot இல் விளம்பரத்தை காட்டுவதற்கு முன்னதாக நடைபெறும் ஏலத்தில் பின்வரும் bid price இல் request வருகிறது என வைத்துக்கொள்வோம்.

 

Bidder A = $4

Bidder B = $4.50

Bidder C = $4.20

இதில் அதிக தொகையினை கூறியிருப்பது Bidder B ($4.50) ஆகவே அவர் வெற்றி பெற்று விட்டார். அவரது விளம்பரம் தான் அந்த Ad Slot இல் காட்டப்படும். இதற்காக அவரிடமிருந்து பெறப்படவேண்டிய தொகை $4.50 , ஆனால் Second Price Auction இல் இவர் $4.21 மட்டும் கொடுத்தால் போதுமானது. அதாவது அவருக்கு அடுத்ததாக எவ்வளவு தொகைக்கு ஏலம் கேட்கப்பட்டதோ அதனை விட $0.01 சேர்த்து கொடுத்தால் மட்டுமே போதுமானது.

First Price Auction

ஒரு Ad Slot இல் விளம்பரத்தை காட்டுவதற்கு முன்னதாக நடைபெறும் ஏலத்தில் பின்வரும் bid price இல் request வருகிறது என வைத்துக்கொள்வோம்.

 

Bidder A = $4

Bidder B = $4.50

Bidder C = $4.20

 

இதில் அதிக தொகையினை கூறியிருப்பது Bidder B ($4.50) ஆகவே அவர் வெற்றி பெற்று விட்டார். அவரது விளம்பரம் தான் அந்த Ad Slot இல் காட்டப்படும். First Price Auction முறைப்படி அவர் கொடுக்கவேண்டிய தொகை $4.50. இரண்டாவது நபர் எவ்வளவு தொகைக்கு போட்டியிட்டாலும் அது பிரச்சனையில்லை.

ஏன் First Price Auction முறை கொண்டுவரப்பட்டுள்ளது?

Internet is everywhere. So Everyone must know website creation.

Transparency  : Second Price Auction இல் இரண்டாவதாக bid செய்யப்பட்ட தொகை என்ன என்பதனை Advertiser களால் தெரிந்துகொள்ள இயலாது. இதனால் தாங்கள் சரியான தொகையினைத்தான் கொடுக்கிறோமா அல்லது ஏமாற்றப்படுகிறோமா என்ற சந்தேகம் எழும். First Price Auction முறை இதனை நீங்குகிறது, நீங்கள் எவ்வளவு தொகைக்கு bid செய்கிறீர்களோ அதனை கொடுத்தாலே போதும்.

 

Advantage to Publisher : வெற்றிபெற்ற தொகை $4.50 என்றாலும் Second Price Auction இல் Advertiser கொடுக்கவேண்டியது $4.21 தான். இதனால் லாபம் என்பது Advertiser க்குத்தான். Publisher களுக்கு இந்த முறையில் நஷ்டம் தான். Publisher களுக்கு லாபம் சேர்க்கும் விதமாகவும் First Price Auction முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Google நிறுவனம் Second Price Auction முறையினை இப்போதைக்கு மாற்றிடப்போவதில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular