What is Contextual Targeting? | How does it work? | Tamil

Contextual Targeing

Contextual Targeting

இணையதளத்தில் இருக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் விளம்பரங்கள் காட்டப்படுவது Contextual Targeting

நாம் முந்தைய பகுதியில் Behavioural targeting என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? என்பதை பார்த்தோம். இந்த பகுதியில் Contextual targeting குறித்து பார்ப்போம்.

Contextual Targeting

Contextual targeting என்பது வெப்சைட்டில் இருக்கக்கூடிய Content (keyword), அதாவது அந்த இணையதளப்பக்கம் என்ன மாதிரியான தகவல்களையும், theme [Idea] ஐயும் கொண்டுள்ளதோ, அது தொடர்புடைய விளம்பரங்களை காட்டுதல். உதாரணத்திற்கு Insurance பற்றி எழுதப்பட்டுள்ள இணையப்பக்கத்தில் Reliance Insurance விளம்பரம் போன்றவற்றை காட்டுவது.

Google Contextual Targeting

டிஜிட்டல் அட்வர்டைசிங்

Google’s Contextual targeting எவ்வாறு இறங்குகிறது? கூகுள் நிறுவனத்தின் சிஸ்டம் இணையத்தில் பதிவேற்றப்படும் கோடிக்கணக்கான பக்கங்களை தொடர்ச்சியாக படித்து அந்த பக்கங்கள் எதனை பற்றியது என தரம் (Category) பிரித்து வைக்கிறது. Advertisers எந்தமாதிரியான ‘Keyword’ உள்ள இணையதளங்களில் தங்களது விளம்பரம் காட்டப்படவேண்டும் என விரும்புகிறார்களோ அந்த பக்கங்களில் விளம்பரங்கள் காட்டப்படும்.

Ad displayed on webpage using Contextual Targeting

அதோடு மட்டுமில்லாமல் வழக்கமான Targeting ஆக இருக்கக்கூடிய மொழி, இடம், ஏற்கனவே விளம்பரங்களை பார்த்தவர்களா என்பனவற்றையும் பயன்படுத்தி சரியான நபர்களுக்கு விளம்பரங்களை காட்ட முடியும்.

 

கூகுள் பின்வருவனவற்றை மிக முக்கியமானவையாக எடுத்துக்கொண்டு இணையப்பக்கங்களை தெரிவு செய்கிறது.

 

Text

Language

Link structure

Page structure

 

சில உதாரணங்கள் :

 

YouTube இல் படங்களுக்கான ட்ரைலர் களை பார்க்கும்போது Ticket Booking க்கான விளம்பரங்கள் காட்டப்படும் அல்லது HotStar , Amazon Prime போன்ற விளம்பரங்கள் காட்டப்படும் .

 

இணையத்தில் முடி கொட்டுவதை தவிர்க்க எழுதப்பட்டிருக்கும் இணைய பக்கத்தில் Shamppoo விற்க்கான விளம்பரம் காட்டப்படும்.

Behavioral Targeting எப்படி பார்ப்பவரை பொருத்ததோ அதனைப்போலவே Contextual Targeting என்பது பார்க்கும் இணையதள பக்கத்தை பொருத்தது .

இரண்டையுமே கூட ஒரே நேரத்தில் செய்திட முடியும் .

 

Previous

What is Behavioral Targeting?

Next

What is Retargeting?






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.