What is Retargeting? How does it work? | Tamil

Retargeting

Retargeting

Re targeting அல்லது Re marketing என்பது ஏற்கனவே தங்களது இணையதளத்திற்கு வந்தவர்களுக்கோ அல்லது தங்களது பொருள்களை பார்த்தவர்களுக்கோ அல்லது வாங்கியர்களுக்கோ மீண்டும் தங்களது விளம்பரங்களை காட்டுவது

நாம் முந்தைய பகுதியில் Behavioural targeting என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? Contextual targeting என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது? என்பதை பார்த்தோம். படிக்காதவர்கள் படித்துவிடவும். இந்த பகுதியில் Re targeting அல்லது Re marketing குறித்து பார்ப்போம்.

How Retargeting works?


தற்போதைய Digital Advertising  இல் Re Targeting மிகசிறந்ததாக பார்க்கப்படுகின்றது. Re Targeting ம் ‘Cookie’ உதவியுடன் செயல்படுகிறது. மேலும் இதில் மிகச்சிறிய JavaScript code வாடிக்கையாளர்களை பின்தொடருவதற்கு பயன்படுத்தப்படுகிறது. சில DSP க்கள் அதனை Beacon என அழைக்கிறார்கள். அதில் இருக்கும் Code, pixel  என அழைக்கப்படும். 

> முதலில் Advertisers ஒரு Beacon மூலமாக Pixel ஒன்றினை உருவாக்க வேண்டும். [Javascript Code]

 

> எந்த பக்கத்திற்கு வருகின்ற நபர்களை கண்காணித்து அவர்களுக்கு மீண்டும் விளம்பரங்களை காட்டிட வேண்டுமோ அந்த பக்கத்தில் அந்த Code ஐ இடம்பெற செய்ய வேண்டும்.

 

> பயனாளர்கள் குறிப்பிட்ட இணையப்பக்கத்தினை திறக்கும் போது Pixel இயங்க ஆரம்பிக்கும். அது பயனாளர்களின் User Id உள்ளிட்ட பல தகவல்களை Advertisers க்கு அனுப்பிடும்.

 

> பயனாளர்களின் கணினியிலும் Cookie யில் User Id உள்ளிட்ட தகவல்கள் சேமிக்கப்பட்டு இருக்கும்.

 

> Advertiser தனது பக்கத்திற்கு வந்தவர்களுக்கு விளம்பரங்களை காட்டிட விரும்பினால் ‘Beacon’ இல் சேமித்து வைக்கப்பட்டுள்ள User Id யை தனது Campaign இல் target செய்து குறிப்பிட்ட நபர்களுக்கு விளம்பரங்களை காட்டிட முடியும்.

 

> இன்னும் பல விதமான கட்டுப்பாடுகளில் சரியான நபர்களுக்கு விளம்பரங்களை காட்டிட வசதிகளும் தற்போது வந்துவிட்டன.

 

ஒரேநேரத்தில் அனைத்துவிதமான Targeting களையும் பயன்படுத்தி ஒரே நேரத்தில் Campaign ஐ இயக்கிட முடியும்.

 

Digital Advertising குறித்த பல தகவல்கள் தொடர்ச்சியாக வர இருக்கின்றன. தவறாமல் படிக்க Subscribe செய்திடுங்கள்.

Previous

What is Contextual Targeting?

Next

What Is Native Advertising?






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.