What Is Native Advertising? | How does it work?

Native Advertising

Native Advertising

Native advertising என்பதும் விளம்பரம் தான், ஆனால் பார்ப்பதற்கு விளம்பரம் என தோன்றாதபடியும், இணையதள பக்கத்தில் இருக்கும் தகவல்களுடன் ஒத்துப்போகும் படியும் தோன்றுவது, செயல்படுவது.


விளம்பரம் என்றாலே மனிதனுக்கு பிடிப்பதில்லை, அதிலும் சம்பந்தமே இல்லாத விளம்பரம் என்றால் அவ்வளவுதான். ஆனால் விளம்பரம் தான் செய்தித்தாள், தொலைக்காட்சி, இணையதளம் உள்ளிட்ட அனைத்திற்குமே அடிப்படையான வருமானம். தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் இரண்டிலுமே விளம்பரங்களை பார்ப்பவரின் விருப்பத்திற்கு ஏற்றாவாறு மாற்றிட முடியாது. செய்தித்தாளில் அச்சடிக்கப்பட்டுவிட்டாலும் தொலைக்காட்சியில் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டாலும் பார்த்து தான் ஆகவேண்டும்.

ஆனால் இணையதளங்கள் அப்படி அல்ல, ஒவ்வொரு முறையும் சர்வரில் இருந்து தகவல்களை பெறுவதனாலும் இரு வழி கம்யூனிகேஷன் (Two Way Communication) வசதியினை கொண்டதாலும் பயன்படுத்துபவரின் தகவல்களை சர்வருக்கு அனுப்பவும் அவருக்கு ஏற்றது மாதிரியான விளம்பரங்களை சர்வரில் இருந்து பெறவும் முடியும்.

 

அதற்குத்தானே  Behavioral Targeting, Contextual Targeting, Re Targeting என பலவகையான விளம்பர யுக்திகளை பின்பற்றுகிறோம். பிறகு எதற்கு ‘ Native Advertising ‘ ?

 

சபாஷ் சரியான கேள்வி, இந்த கேள்வி மிக முக்கியமானது. நாம் ஒரு ‘தகவல் தொழில்நுட்பம்’ சார்ந்த கட்டுரையை படித்துக்கொண்டு இருக்கிறோம் என வைத்துக்கொள்வோம். விளம்பரங்கள் நாம் படிக்கும் கட்டுரைக்கு பக்கவாட்டிலோ அல்லது மேற்புறத்திலோ தோன்றிடலாம். அங்கு விளம்பரங்கள் தான் தோன்றும் என்பதும் இணையதளத்திற்கு வருவோருக்கு தெரியம். ஆகையால் அவர்களுக்கு தேவையான விளம்பரங்களை காட்டினால் கூட பெரும்பாலும் பார்க்க மாட்டார்கள். இதனை தவிர்க்க வந்ததுதான் ‘ Native Advertising ‘.

 

Native advertising is the use of paid ads that match the look, feel and function of the media format in which they appear.

 

Native advertising என்பதும் விளம்பரம் தான், ஆனால் பார்ப்பதற்கு விளம்பரம் என தோன்றாதபடியும், இணையதள பக்கத்தில் இருக்கும் தகவல்களுடன் ஒத்துப்போகும் படியும் தோன்றுவது, செயல்படுவது.

நீங்கள் Facebook , Twitter போன்றவற்றில் Scroll செய்திடும்போது கவனித்துப்பாருங்கள், Post போன்றே விளம்பரங்களும் (Video and Feeds) வருவதை பார்க்க முடியும். மிக சாதாரணமாக Scroll செய்து கொண்டு போகும் போது கண்டறிவது கடினம்.

 

இணையதளங்களில் செய்தியோ அல்லது கட்டுரையோ படித்துக்கொண்டு இருக்கும்போது Content க்கு இடையிலேயே விளம்பரங்கள் தோன்றும். அவை பார்ப்பதற்கு படிக்கின்ற Article இன் ஒரு பகுதி போன்றே இருக்கும்.

Sponsored or Promoted என்பதனை வைத்து அது விளம்பரமா அல்லது உண்மையான Content என்பதனை வேறுபடுத்திக்கொள்ளலாம்

Success Rate of Native Advertising

Internet is everywhere. So Everyone must know website creation.

>> விளம்பரங்களை பார்ப்பது 25 % அதிகரித்துள்ளது

>> கட்டுரைகளை படிப்பவர்கள் அதே நம்பிக்கையுடனும் எண்ணத்துடனும் விளம்பரத்தையும் பார்ப்பது அதிகரித்துள்ளது.

 >> Mobile பயன்பாடு அதிகரித்துள்ள சூழ்நிலையில் Native Advertising ஏதோ ஒரு விதத்தில் சிறப்பானதாகவே இருக்கின்றது

 >> Conversion அதாவது விளம்பரங்களை பார்த்து அதன் மூலமாக Purchase செய்வது 18% அதிகரித்து இருக்கின்றது.

Previous

What is Retargeting?

Next

What is Branding?






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.