Friday, May 10, 2024
HomeDigital AdvertisingTop 5 Affiliate Marketers You Need to Follow to be Successful |...

Top 5 Affiliate Marketers You Need to Follow to be Successful | Tamil

Affiliate Marketing

ஏற்கனவே வெற்றி அடைந்தவர்களை பின்தொடர்ந்து அதே வழிமுறைகளை பின்பற்றினால் வேகமாக வெற்றி பெற முடியும். இங்கே நீங்கள் பின்பற்ற வேண்டிய 5 முக்கிய நபர்கள் மற்றும் அவர்களது இணையதளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Affiliate Marketing என்பது வளர்ந்து வரும் துறையாக இருக்கிறது. எளிதில் பணம் ஈட்டலாம் என்ற ஆர்வத்தின் காரணமாக இளைஞர்கள் பலரும் தற்போது Affiliate Marketing இல் அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் Affiliate Marketing என்பது இளைஞர்கள் முயன்று பார்க்கக்கூடிய ஒரு துறை தான் என்றாலும் கூட சில யுக்திகளை கையாண்டால் மட்டுமே அதிலும் வெற்றி பெற முடியும். Affiliate Marketing என்பது ஒரு கடல், சிலர் சொல்லுவார்கள் ஒரு மின்னஞ்சல் முகவரியும் ஒரு கணினியும் இருந்தால் போதும் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று. ஆனால் முயற்சி செய்தால் மட்டுமே இதில் வெற்றி பெற முடியும்.

Affiliate Marketing என்றால் என்ன?

Affiliate Marketing என்பது வேறொன்றும் இல்லை. நீங்கள் ஒருவருடைய பொருளை விற்றுக்கொடுத்தால் அதற்காக அவர் குறிப்பிட்ட தொகையை உங்களுக்கு கமிஷனாக வழங்குவார். அதுதான் Affiliate Marketing. உதாரணத்திற்கு, அமேசானில் உள்ள ஒரு பொருளை நீங்கள் விற்றுக்கொடுத்தால் அமேசான் உங்களுக்கு 1% – 10% வரைக்கும் கமிஷன் வழங்கும். அமேசான் மட்டுமல்ல clickbank.com, cj.com என பலரும் Affiliate Marketing வாய்ப்பை வழங்குகிறார்கள். 

 

நீங்கள் Affiliate Marketing இல் இணைய வேண்டுமானால் அவர்களது இணையதளத்திற்கு சென்று நீங்கள் இணைந்துகொள்ள வேண்டும். அவர்கள் கொடுக்கும் லிங்கை நீங்கள் உங்களது இணையத்தளத்திலோ அல்லது நேரிடையாக அனுப்பியோ பிறரை வாங்க வைக்கலாம். அவர் அந்த லிங்கை கிளிக் செய்து வாங்கிவிட்டால் உங்களுக்கு கமிஷன் கிடைக்கும். 

 

Affiliate Marketing இல் புதிதாக இணைந்தவர்கள் தானே முயற்சி செய்து வெற்றிபெறுவது சற்று கடினமானது. ஆனால் ஏற்கனவே இந்தத்துறையில் சாதித்துக்கொண்டு இருக்கிறவர்களின் பாதையை பின்பற்றினால் எளிமையாக சாதிக்க முடியும். உலகம் முழுமைக்கும் Affiliate Marketing இல் சிறந்து விளங்கும் 10 நபர்களைப்பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம். அவர்களுடைய இணையதள விவரங்களும் இங்கே தரப்பட்டுள்ளன. 

1. Pat Flynn

எனது முதல் தேர்வு பாட் பிளின் [Pat Flynn]. கடந்த சில வருடங்களாக சிறப்பாக Affiliate Marketing செய்கிறவர்களில் முக்கியமானவர் இவர். 2008 ஆம் ஆண்டில் வேலையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பின்னர் தனது ஆன்லைன் வணிகத்தைத் தொடங்கினார். Pat Flynn தனது இணையதளத்தில் ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார், அப்போது அவர் $8000 வரை சம்பாதித்தார். 2013 வாக்கிலேயே ஆண்டுக்கு $50,000 வரை ஈட்டினார். தற்போது இவருடைய நெட் ஒர்த் 2 மில்லியன் டாலர்கள். 

 

Affiliate Marketing விஷயத்தில் இவர் ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளார். இவரிடம் இருக்கும் சிறப்புத்தன்மையே, வெளிப்படைத்தன்மை தான், ஏனென்றால் அவர் என்ன செய்கிறார் என்பது குறித்து அவர் மிகவும் வெளிப்படையாக இருக்கிறார், மேலும் 2008 முதல் இன்றுவரை அவர் தனது மாத வருமானம் குறித்த முழு விவரங்களையும் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார். அவரது வருமானம் பல்வேறு விதங்களில் இருந்து வந்தாலும் 80% வருமானம் Affiliate Marketing மூலமாகவே கிடைக்கிறது. 

 

அவரைப்பற்றி படிக்க, 

 

www.smartpassiveincome.com

www.GreenExamAcademy.com

www.SecurityGuardTrainingHQ.com

CreateaClickableMap.com

2. John Chow

ஜான் சோவ், Affiliate Marketing விஷயத்தில் பலர் இவரை ஒரு புரட்சிகர நபராக கருதுகின்றனர். Pat Flynn போலவே, ஜான் சோவும் தனது ஆன்லைன் வணிகத்தை வெறும் 2 முதல் 3 ஆண்டுகளில் பெரிய நிலைக்கு கொண்டு சென்றார்.  ஒரு நாளைக்கு 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறேன் என சொல்லுவார் சோவ். 

அவரது சமீபத்திய புத்தகம் Make Money Online: Roadmaps of a Dot Com Mogul பெரிய வரவேற்பை பெற்றது. அவரது வலைத்தளம் JohnChow.com அப்போதே 200000 க்கும் மேற்பட்ட மாத பார்வையாளர்களைக் கொண்டுள்ளது. 

ஆன்லைனில் சம்பாதிக்கிறவர்கள் என்ற முறையில் நீங்கள் அவருடைய வலைப்பதிவுகளைப் படித்து, அவர் எப்படி இவ்வளவு பணம் ஈட்டுகிறார் என்பதை அறிந்துகொண்டு பணம் ஈட்டலாம். 

 

ain website: https://www.johnchow.com/

3. Jeremy Schoemaker

இணைய உலகில் நன்கு அறியப்பட்ட நபராக இருக்கிறார் ஜெர்மி ஸ்கோமேக்கர். காரணம், இவர் Affiliate Marketing மூலமாக மில்லியன் கணக்கில் பணம் ஈட்டியுள்ளார் என்பது தான். பலரும் இவரை தற்போது பின்தொடருகிறார்கள். இவருக்கு 28 வயதாக இருந்த போது இவர் $50,000 கடனில் சிக்கித்தவித்தார். ஆனால் 2003 இல் இவர் ShoeMoney.com என்ற இணையத்தை ஆரம்பித்த பிறகு ஆன்லைனில் அதிக அளவு பணம் ஈட்டத் துவங்கினார். 

 

website: www.shoemoney.com

4. Neil Patel

நீல் படேல் இந்தியர்களுக்கு நிச்சயமாக பரிட்சயமான நபர். இவரை அதிகம் பேர் யூடியூப் தளத்தில் பார்த்திருக்கலாம். மிக இளம் வயதில் வெற்றிகரமான தொழில் முனைவோராக இவர் வளம் வந்துள்ளார். ஆனால் இவரைப்பற்றி பலருக்கும் முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் முதலில் Crazy Egg என்ற நிறுவனத்தை உருவாக்கினார். பிறகு இதனை விற்க முயன்றார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை. ஆகவே இவர் இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக மாற்றிட விரும்பி அதை செய்தும் காட்டினார். பிறகு KISSmetrics என்ற நிறுவனத்தை துவங்கினார். தற்போது https://neilpatel.com/ என்ற இணையதளம் மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் SEO துவங்கி அனைத்து விதத்திலும் பயிற்சி அளித்து வருகிறார். 

 

www.quicksprout.com

www.kissmetrics.com

www.crazyegg.com

5. Affiliate Summit

Affiliate Summit என்ற புரோகிராம் Affiliate Marketing துறையில் ஈடுபடுகிறவர்களுக்கு வழிகாட்டுவதற்காக மிஸ்ஸி வார்டு மற்றும் ஷான் காலின்ஸ் என்ற நபர்களால் 2003 இல் உருவாக்கப்பட்டது. இவர்கள் Affiliate Marketing இல் பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். பின்னர் அதையே தங்களது இணையதளத்தின் வாயிலாகவும் இணைத்து வழங்க ஆரம்பித்தார்கள். 

 

Main website: Affiliatesummit.com

Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular