Tuesday, December 3, 2024
HomeTech Articles2020 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் இதுதான்

2020 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் இதுதான்

2020 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் இதுதான்

Future Tech

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ், மெஷின் லேர்னிங், 5ஜி , எக்ஸ்டென்டெட் ரியாலிட்டி என பல்வேறு தொழில்நுட்பங்களின் உச்சபட்ச பலன்களை 2020 – 2030 க்குள் மனித இனம் நிச்சயமாக பெற்றுவிடும்.

ஆங்கிலத்தில் 10 ஆண்டுகளை decade என குறிப்பிடுவார்கள். அப்படி நாம் பார்த்தோமானால் கடந்த சில 10 ஆண்டுகள் தொழில்நுட்ப யுகத்தில் பொன்னான காலம் என்றே குறிப்பிடலாம். அதன் நீட்சி 2020 – 30 களிலும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கப்போகிறது. அதன்படி ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தாலும் அவற்றின் முழு பயன்களையும் பெற்றுவிடாத பல தொழில்நுட்பங்களின் உச்சபட்ச பலன்களையும் அதோடு சேர்த்து புதிய பல தொழில்நுட்பங்களையும் நாம் அடைய போகிறோம் என்பதுதான் மகிழ்ச்சியான செய்தி. அவற்றில் சில தொழில்நுட்பங்கள் குறித்து இங்கே பார்க்கலாம்.

1.ஸ்மார்ட் ஹோம் [Smart Home]

smart home

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் என்பவை மக்களை பெரிதும் எப்படி ஈர்த்ததோ அப்படித்தான் இனிவரும் ஆண்டுகளில் ஸ்மார்ட் ஹோம் [Smart Home] என்ற ஒன்றும் தவிர்க்கமுடியாத தொழில்நுட்பமாக வளரப்போகிறது. அதென்ன ஸ்மார்ட் ஹோம் என்கிறீர்களா? எப்படி நமது வீடுகளில் சாதாரணமாக இருந்த டிவி இன்று ஸ்மார்ட் டிவியாக மாறியிருக்கிறதோ அதனைப்போலவே கதவுகள் ஸ்மார்ட் கதவுகளாகவும் விளக்குகள் ஸ்மார்ட் விளக்குகளாகவும் மாற்றப்படும். அப்படி வீட்டில் இருக்கும் பெரும்பான்மையான உபகரணங்கள் அனைத்தும் ஸ்மார்ட் பொருளாக மாற்றப்பட்டுவிட்டால் அவற்றை இணைய உதவியோடு அல்லது தானியங்கி விதத்தில் கட்டுப்படுத்திட முடியும். இவை உங்களது வாழ்க்கை முறையை எளிமைப்படுத்தும் மற்றும் பாதுகாப்பானதாக மாற்றும்.

இப்போது சிலர் தங்களது வீடுகளை ஸ்மார்ட் ஹோம் ஆக மாற்றிட துவங்கிவிட்டார்கள். பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இதில் முழுமூச்சாக களம் இறங்கி இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் மிகப்பரவலாக பலரால் ஏற்றுக்கொள்ளப்படும் தொழில்நுட்ப முன்னேற்றமாக ஸ்மார்ட் ஹோம் இருக்கும்.

2.அதிவேக 5ஜி

5G in tamil

அனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும் .

 

Browsing Speed : 56 Mbps to 490 Mbps

Download Speed: 8 Mbps to 100 Mbps

(It differs based on the network/ signal strength)

இந்தியாவில் 5ஜி சோதனை விரைவில் துவங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதில் பங்கேற்று இருக்கின்றன. ஒவ்வொருமுறை இன்டர்நெட் வேகம் கூடும் போதும் பல்வேறு தொழில்நுட்ப புரட்சி ஏற்படும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலுமே 5 ஜி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போகிறது. 5 ஜி ஆல் ஏற்படப்போகும் மாற்றம் குறித்து இங்கே படியுங்கள்.

எலெட்ரிக் கார்ஸ் [மின்சார வாகனம்]

எலெட்ரிக் வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்போகும் இந்தியா

தானியங்கி வாகனங்களுக்கான சோதனை மிகவும் வேகமாக நடந்து வரக்கூடிய சூழலில் அதற்கு முன்னதாகவே எலட்ரிக் வாகனங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்பதே உண்மை. சுற்றுசூழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்துவரக்கூடிய சூழலில் பல்வேறு நாடுகளும் மின்சாரத்தில் இயங்கக்கூடிய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்கள் வாங்க வேண்டும் என வலியுறுத்துகின்றன. கார் மற்றும் இருசக்கர வாகன நிறுவனங்களும் வாகன உற்பத்தியில் இறங்கிவிட்டன. அதிக நேரத்திற்கு பேட்டரி நிற்பது மற்றும் ரீசார்ஜ் செய்திட எடுத்துக்கொள்ளும் நேரம் போன்றவையே மிக சவாலான விசயமாக பார்க்கப்பட்டது. தற்போது அதிலும் பல்வேறு முயற்சிகள் செய்யப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

2020 – 30 ஆண்டுகளுக்குள் சாலைகளில் ஓடும் பெரும்பான்மையான வாகனங்கள் மின்சார சக்தியினால் இயங்கும் என எதிர்பார்க்கலாம்.

டிஜிட்டல் வங்கிகள்

2020 இல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தொழில்நுட்பங்கள் இதுதான்

தற்போது மக்கள் தங்களது பணத்தை நிர்வகிக்க வங்கிகளையே நம்பி இருக்கிறார்கள். தற்போது வங்கிகளுக்கு  பதிலாக தங்களது பணத்தை டிஜிட்டல் முறையில் இயங்கும் வங்கிகளில் சேமிக்கவும் நிர்வகிக்கவும் துவங்கிவிட்டார்கள். உதாரணத்திற்கு இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் Monzo எனும் டிஜிட்டல் பெரும்பாலானவர்களை ஈர்க்கும் வங்கியாக மாறியிருக்கிறது. கிட்டத்தட்ட மொபைல் ஆப் மூலமாகவே அனைத்தையும் செய்துகொள்ள முடியும்.

 

பல்வேறு நாடுகளை சேர்ந்த வங்கிகள் டிஜிட்டல் முறையில் சேவையினை மிகக்குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்போகின்றன. இதனால் வங்கி துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும். கிராமப்புறங்களையும் இன்டர்நெட் சென்று அடைகிற போது டிஜிட்டல் வங்கிகளுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மெஷின் லேர்னிங்

AI-ML Artificial Intelligence vs Machine Learning explained in tamil

Machine Learning என்பதற்கான விளக்கம் அதன் பெயரிலேயே இருக்கிறது. ஆம் ஒரு கணினியில் இருக்கக்கூடிய மென்பொருளானது (Computer Algorithm) இன்னொரு புரோகிராமை அனுபவத்தின் மூலமாக தானாகவே கற்றுக்கொள்ள அனுமதிக்கும் தொழில்நுட்பம் தான் மெஷின் லேர்னிங் (Machine Learning) என அழைக்கப்படுகிறது.

தற்போது மிகப்பெரிய அளவில் தகவல்கள் கிடைக்கின்றன. அவற்றை முறையாக ஒழுங்குபடுத்தி அதனைக்கொண்டு ஒரு புரோகிராமை கற்றுக்கொள்ள வைக்கும்போது மிகப்பெரிய நன்மைகளை பெற முடியும். உதாரணத்திற்கு லட்சக்கணக்கான நபர்களின் ஸ்கேன்களை உள்ளீடாக கொடுக்கும் பட்சத்தில் எளிமையாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட முடியும். இதுபோல மருத்துவம், உற்பத்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய புரட்சியை மெஷின் லேர்னிங் தொழில்நுட்பம் கொடுக்கப்போகிறது.

கிரிப்டோகரன்சி

ஏற்கனவே பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோகரன்சிகள் அறிமுகமாகி தற்போது புழக்கத்தில் இருந்துவருகிறது [ நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை] . பேஸ்புக் எப்படியாவது தனது லிப்ரா கரன்சியை அறிமுகப்படுத்திவிட வேண்டும் என முயற்சி செய்துகொண்டு இருக்கிறது. பல்வேறு அரசுகளும் கூட கிரிப்டோகரன்சியை அறிமுகப்படுத்தலாமா என ஆராய்ந்து வருகின்றன. வரும்காலங்களில் இது நடக்கும் என்று கூட எதிர்பார்க்கலாம்.

விரிவாக கிரிப்டோகரன்சி  குறித்து இங்கே படியுங்கள் 

Cloud Computing

கூகுள் (Google) போன்ற மிகப்பெரிய கம்பெனிகள் கிளவுட் கம்ப்யூட்டிங் என்ற அமைப்பை உருவாக்குகின்றன. அவை அதிக செயல்திறன் கொண்ட சர்வர்ஸ் (Servers), ஸ்டோரேஜ் (Storage), டேட்டாபேஸ் (database), நெட்வொர்க்கிங் (networking), சாப்ட்வேர் அப்ளிகேஷன் (software application) போன்றவற்றை வழங்குகின்றன. இவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனில் மிகக்குறைந்த பணத்தை கொடுத்து இன்டர்நெட் (Internet) உதவியுடன் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

 

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது தற்போது நாம் பயன்படுத்திக்கொண்டு இருக்கக்கூடிய கணினி மற்றும் அப்ளிகேஷன் முதலியவற்றினை முன்னேறிய வகையில் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை குறிக்கின்ற சொல். இன்டர்நெட் உடன் இணைக்கப்பட்டு இருக்கின்ற எந்தவொரு கருவியும் கிளவுட் கம்ப்யூட்டிங் இல் இருக்கக்கூடிய ஸ்டோரேஜ் , அப்ளிகேஷன் உள்ளிட்டவற்றை பயன்படுத்திக்கொள்ள முடியும். மிகப்பெரிய நிறுவனங்கள் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பத்துக்காக மிகப்பெரிய இடங்களில் கோடிக்கணக்கான எலக்ட்ரானிக் கருவிகளை ஒருங்கிணைத்து அவற்றினை பராமரித்து வருகின்றன.

விரிவாக படிக்க : Click Here

ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்

AI-ML Artificial Intelligence vs Machine Learning explained in tamil

மனிதனை போலவே முடிவெக்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கையான நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் என்று பெயர். காட்சி உணர்தல் (visual perception), பேச்சின் தன்மை (speech recognition) , முடிவெடுக்கும் திறன் (decision-making), மொழி பெயர்ப்பு (translation between languages) இந்த திறன்களை கொண்டு மனிதர்கள் செய்கின்ற வேலையினை ஒரு கணினி செய்தால் அது ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ். சாதாரணமாக சொல்லவேண்டுமானால் “மனிதனை போல இயங்கும் ஓர் இயந்திரம்” தான் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்.

 

ஏற்கனவே பல்வேறு துறைகளில் இதன் வீச்சை இப்போதே நம்மால் பார்க்க முடிகிறது. இனிவரும் காலங்களில் மருத்துவம், தயாரிப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மிகப்பெரிய புரட்சி ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்

தொழில்நுட்பத்தினால் உண்டாகப்போகிறது.

நான் மேலே குறிப்பிட்டுள்ளவை சில தொழில்நுட்பங்கள் தான். ஆனால் இன்னும் பல தொழில்நுட்பங்களும் 2020 – 30 காலகட்டத்திற்குள் நிச்சயமாக வரத்தான் போகின்றன. அவற்றை நமது டெக் தமிழன் இணையதளத்தில் நிச்சயமாக வழங்குவோம்.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular