Monday, May 20, 2024
HomeTech Articles5ஜி தொழில்நுட்பம் | பயன்பாடு | What is 5G? | Benefits of...

5ஜி தொழில்நுட்பம் | பயன்பாடு | What is 5G? | Benefits of 5G | Tamil

5G in tamil

5G Technology

அனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும் .



Click Here! Get Updates On WhatsApp

இந்தியாவில் தற்போது 4G இணைய வேகம் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது . கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 4G சேவையை வழங்குகின்றன. .

அடுத்தகட்டமாக 5G சேவையினை இந்தியாவில் கொண்டுவர சோதனைகள் தொடங்கப்போகின்றன . ஆம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவிக்கையில் “தொலைதொடர்பு அமைச்சகம் சென்னை IIT இல் தொடங்கவிருக்கும் ஆய்வுகளுக்கு உதவி செய்யும் “என்றார் .

இந்த சோதனை இந்திய தொலைதொடர்பில் மைல்கல்லாக இருக்கப்போவதுடன் , தொலைதொடர்பு நிறுவனங்கள் 5G க்கு மாறுவதற்கும் உதவி மற்றும் அறிவுரைகளை வழங்கும் .

5ஜி சேவையினை வழங்குவதன் மூலமாக இந்திய அரசிற்கு அலைக்கற்றை ஏலத்தின் மூலமாக $27 மில்லியன் கிடைக்கும் .

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் 5 ஜி சேவை வழங்கப்பட்டுவிடும் என கூறலாம் . இதற்கு முன்னர் இந்திய மக்கள் 2G, 3G , 4G போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வந்திருக்கின்றனர் . அவை ஒவ்வொண்டிற்கும்  சாதாரண மக்களாகிய நாம் அறிந்திருப்பது என்னவோ இணைய வேகம் ஒவ்வொரு தலைமுறை தொழில்நுட்பத்திலும் அதிகரித்திருக்கிறது என்பது தான் . தற்போது ஐந்தாம் தலைமுறை தகவல்தொழில்நுட்பம் வந்ததும் இணைய வேகம் மட்டும் கூடப்போகிறது என நினைத்துக்கொள்ளவேண்டாம் . கட்டற்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை இந்த 5G ன் மூலமாக நாம் பெறப்போகிறோம். சரி அப்படி என்ன இந்த 5G யால் வந்துவிடப்போகிறது என பார்க்கலாம். வாருங்கள்

வேகம் பல மடங்கு அதிகரிக்கும் (High Speed)

5G in tamil

அனைவரும் அறிந்ததைப்போலவே 5G இல் இணையவேகம் பலமடங்கு அதிகரிக்கும் . நாம் தற்போது மொபைலில் பயன்படுத்துகின்ற இணைய வேகத்தைவிட 1000 மடங்கு வேகமாகவும் , வீடுகளில் பயன்படுத்துகின்ற அதிவேக பிராட்பேண்ட் வேகத்தை விட 100 மடங்கு வேகத்துடன் செயல்படும் .

 Browsing Speed : 56 Mbps to 490 MbpsDownload Speed: 8 Mbps to 100 Mbps (It differs based on the network/ signal strength)

Self Driving Cars (தானியங்கி கார்கள்)

கூகுள் உபர் போன்ற பல நிறுவனங்கள் தானியங்கி கார்களை வடிவமைத்து கொண்டிருக்கின்றன . அந்த கார்கள் அனைத்துமே சரியாக செயல்படுவதற்கு அதிவேக இண்டெர்நெட் சேவை தேவைப்படும் . அந்த இணைய வேகத்தினை 5G தொழில்நுட்பத்தினால்  மட்டுமே தர முடியும் .

தொலைதூர அறுவைசிகிச்சை [Remote surgery ]

மருத்துவ துறையில் தற்போது அதிநவீன மாற்றங்கள் நடந்துவருகின்றன . இனி வரும் காலங்களில் நோயாளியின் அறையில் மருத்துவர் இல்லாமலே கூட சர்ஜரி செய்யும் வாய்ப்புகள் அதிவேக இண்டெர்நெட் உதவியினால் செய்யமுடியும் என்கிறார்கள் .

வேறொரு இடத்தில் இருக்கக்கூடிய மருத்துவர் VR Glass மற்றும் அதற்கான கை கிளவுஸ்களை அணிந்துகொண்டு எங்கோ இருக்கக்கூடிய நோயாளிக்கு அங்கு அமைக்கப்பட்டிருக்கும்  ரோபோவுடன் இணைந்து அறுவை சிகிக்சை செய்ய முடியும் .

ஸ்மார்ட் ஹோம் [Smart Home]

இருந்த இடத்தில் இருந்துகொண்டே கட்டளைகள் இட்டால் விளக்குக்ளை ஆன் செய்வது , நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கான பதிலை சொல்வது , வீட்டின் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற பணிகளுக்காக கூகுள் ஹோம்  , அமேசானின் எக்கோ போன்ற கருவிகள் சிறப்பாக வேகமாக செயல்பட அதிவேக 5G தொழில்நுட்பம் உதவிடும்  .

responsive வேகம் 5G தொழில்நுட்பத்தில்  அதிகம் என்பதால் இதுபோன்ற கருவிகளின் சிறப்பான செயல்பாடுகளுக்கு சரியானதாக இருக்கின்றது . 

Virtual Reality

Virtual Reality தொழில்நுட்பத்தை நீங்கள் போகிமேன் மொபைல் கேமில் பார்த்திருக்கலாம் . இன்னும் அதிநவீனமான முறையில் 5G தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெறமுடியும் .

Real Player One என்னும் ஹாலிவுட் திரைப்படத்தை பாருங்கள்.

தகவல் தொழில்நுட்ப புரட்சி

5G தொழில்நுட்பத்தால் இணைய வேகம் பல மடங்கு அதிகரிக்க இருப்பதனால் இணையத்தோடு தொடர்புடைய பல விசயங்களில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படபோகிறது .

தகவல்களை டவுன்லோடு செய்யும் வேகம் அதிகரிக்க போவதிலிருந்து தொடங்கி தானியங்கி கார் , விர்ச்சுவல் ரியாலிட்டி என நீள போகிறதென்பதுதான் உண்மை .

5G சோதனையால் பறவைகள் இறந்ததாக பரவிய வதந்தி

bird dead at netherland park

நவம்பர் 05, 2018 அன்று healthnutnews.com என்ற இணையதளத்தில், நெதர்லாந்து நாட்டில் உள்ள ஹேக் (Hague) எனும் இடத்தில் ஹ்யுஜென்ஸ் பார்க் இல்  நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்துவிட்டன என செய்தி வெளியிடப்படுகிறது. 5 ஜி தொழில்நுட்பத்திற்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல பக்கங்களை நடத்துகின்ற John Khules எனும் நபரின் மூலமாக இந்த செய்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது.

ஏற்கனவே சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் இயக்கியிருந்த 2.O திரைப்படம் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் இந்த செய்தி முக்கியத்தும் பெற்றது.

healthnutnews.com என்ற இணையதளத்தில் வெளியான செய்தி இதுதான்,

 

ஹேக் (Hague) எனும் இடத்தில் இருக்கக்கூடிய பார்க்கில் பல பறவைகள் இறந்து கிடந்தன. இந்த செய்தி உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம், காரணம் அது ரகசியமாக கையாளப்பட்டது. திடீரென 150 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்தவுடன் இதனை அனைவரும் கவனிக்க துவங்கிவிட்டனர். அப்போது இறந்திருந்த பறவைகளின் எண்ணிக்கை 297.

இதற்க்கு காரணம் அறிய சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கே மூலையில் வைக்கப்பட்டு இருந்த 5ஜி ஆன்டெனாவை காணலாம். இதனை பயன்படுத்தி தான் அங்கே 5ஜி சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பாதிப்பினால் மரங்களில் இருந்த பறவைகள் இறந்து விழுந்தன, தண்ணீரில் இருந்த பறவைகள் கதிர்வீச்சில் இருந்து தப்பிக்க நீருக்குள் மூழ்கி கொண்டன. இறந்த  பறவைகள் வைரஸ் தொற்றால் இறக்கவில்லை, எந்தவொரு விஷத்தாலும் அவை கொல்லப்படவில்லை. நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு காரணமாக என்ன இருக்குமெனில் 5ஜி சோதனையின் போது வெளிப்பட்ட அதீத கதிர்வீச்சினால் தான் இவை இறந்து போயிருக்கும்.

நெதர்லாந்தில் பறவைகள் இறந்தது உண்மையா?

அந்த பகுதியின் முனிசிபல் அறிக்கையின்படி பறவைகள் இறந்தது உண்மை தான் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் அந்த குறிப்பிட்ட பார்க் பகுதியில் நூற்றுக்கணக்கான பறவைகள் இறந்து கிடப்பதனால் அங்கு நாய்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தற்சமயம் பறவைகள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை எனவும் அதுகுறித்து ஆராய்ந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பறவைகள் இறந்த தினத்தன்று 5ஜி சோதனை நடந்ததா?

உலகமே இன்று அடுத்த தலைமுறை அலைவரிசையான 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாறுவதற்கான சோதனைகளை செய்ய துவங்கிவிட்டன. இந்தியாவிலும் இதற்கான வேலைகள் துவங்கி இருக்கின்றன. அதனைப்போன்றே நெதர்லாந்து நாட்டிலும் சோதனைகள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி பறவைகள் இறந்ததாக சொல்லப்படுகின்ற பகுதியில் 5ஜி சோதனை நடைபெற்று இருக்கிறது. ஆனால் அது நடந்தது ஜூன் 28, 2018. அப்போது இதுபோன்று எந்தவொரு பறவை இறப்பு நிகழ்வும் நடைபெறவில்லை என கூறப்படுகிறது.

உண்மை தான் என்ன?

மேலும் 5ஜி தொழில்நுட்பத்தினை பயன்படுத்த வேண்டிய இடங்களில் அதிகப்படியான செல்போன் கோபுரங்களை நிறுவவேண்டி இருக்கும். குறைந்த அதிர்வெண் கொண்ட ரேடியோ அலையானது அதிக தூரத்திற்கு பயணிக்கும் ஆனால் அதிக அதிர்வெண் கொண்ட ரேடியோ அலைகள் குறைந்த தூரம் மட்டுமே பயணிக்கும். ஆகையால் குறுகிய தொலைவிற்கு உள்ளாக கதிர்வீச்சினை பெற்று மீண்டும் அனுப்புவதற்கு ஏதுவாக அதிகப்படியான செல்போன் டவர்களை நிறுவ வேண்டி இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

 

மேலும் இந்த சம்பவம் குறித்து Dr. Eric van Rongen, a member of the Health Council of the Netherlands and the Chairman of the International Commission கூறும் போது , ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 3ஜி மற்றும் 4ஜி தொழில்நுட்பங்களில் வெளியிடப்படும் கதிர்வீச்சினை விட 5ஜி டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது குறைவானதே. பறவைகள் இறந்ததற்கு காரணமாக இருக்கக்கூடிய அளவிற்கு சக்தியை உமிழக்கூடிய ஆற்றல் இந்த ஆன்டெனாக்களுக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

 

உலகம் அனைவருக்குமானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதேசமயம் பல நாடுகள் 5ஜி தொழில்நுட்பத்துக்கான சோதனையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கக்கூடிய சூழலில் ஒரு பகுதியில் ஏற்பட்ட பறவைகளின் மரணத்திற்கு 5ஜி சோதனை தான் காரணமென ஏதோ ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்ட யூகமான செய்தியை அடிப்படையாக கொண்டு செய்திகளை பரப்புவது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.

 

செல்போன் நிறுவனங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், கதிர்வீச்சின் அளவு கட்டுப்படுத்தப்பட வேண்டும். ஆனால்  பறவைகள் இறந்ததற்கு 5ஜி சோதனையால் ஏற்பட்ட கதிர்வீச்சுதான் காரணமென கூற இயலாது. அது வதந்தி.

 


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

4 COMMENTS

  1. […] தற்போது அறிமுகமாகி இருக்கும் 5ஜி தொழில்நுட்பமும் IoT இன் வளர்ச்சிக்கு மிக முக்கியக்காரணம். மொத்தத்தில் IoT என்பது வீடு துவங்கி அனைத்து துறைகளிலும் பயன்படும்.  […]

  2. […] இந்தியாவில் 5ஜி சோதனை விரைவில் துவங்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இதில் பங்கேற்று இருக்கின்றன. ஒவ்வொருமுறை இன்டர்நெட் வேகம் கூடும் போதும் பல்வேறு தொழில்நுட்ப புரட்சி ஏற்படும். கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலுமே 5 ஜி மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போகிறது. 5 ஜி ஆல் ஏற்படப்ப&#301… […]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular