Monday, May 20, 2024
HomeTech Articlesசோசியல் மீடியா பயன்படுத்தும் அப்பா அம்மாவிற்கு இத சொன்னீங்களா?

சோசியல் மீடியா பயன்படுத்தும் அப்பா அம்மாவிற்கு இத சொன்னீங்களா?

சமூகவலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

Features of Android Q OS

பெரும்பான்மையான பெற்றோர்கள் இன்று ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி என்பது தெரியாமலே இருக்கிறது. இது ஆபத்தானது.

பெரும்பான்மையான பிள்ளைகள் தங்களது பெற்றோர்களுக்கு ஸ்மார்ட் போனை பரிசளிக்கிறார்கள். நாம் அனுபவிக்கும் தொழில்நுட்பத்தை தங்களது வயதான பெற்றோர்களும் பயன்படுத்திட பிள்ளைகள் நினைப்பது என்பது வரவேற்க தகுந்தது தான். ஆனால் ஸ்மார்ட் போனை எப்படி பாதுகாப்பாக பயன்படுத்திட வேண்டும் என சொல்லிக்கொடுத்து இருக்கிறீர்களா? சமூகவலைதளங்கள் பற்றி அவர்களுக்கு போதிய அறிமுகத்தை கொடுக்க தவறியபடியால் பெரும்பான்மையான பெற்றோர்கள் சமூகவலைத்தளங்களில் வருகிறவற்றை எல்லாம் உண்மையென நம்புகிறார்கள், அதனை பகிர்கிறார்கள், மருத்துவ ஆலோசனைகளை பயன்படுத்தி பார்க்க துவங்குகிறார்கள். இதனை நீங்கள் கவனித்து இருக்கிறீர்களா?

 

சமூகவலைத்தளங்கள் பற்றிய புரிதல் இளைஞர்களுக்கு ஓரளவிற்கு இருக்கிறது. ஆனால் வயதான பெற்றோர்களுக்கு அப்புரிதல் இருப்பதில்லை. காரணம் மொபைல் வாங்கிக்கொடுத்த பிள்ளைகள் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி சொல்லிக்கொடுக்க தவறிவிட்டார்கள்.

ஆமாம், நானும் சொல்லிக்கொடுக்க தவறிவிட்டேன் என்கிறீர்களா? கவலை வேண்டாம். இப்போது அதனை செய்துவிடலாமே!. ஒரு கடிதமோ, மின்னஞ்சலோ, வாட்ஸ்ஆப் செய்தியோ அனுப்பிடலாமே. எப்படி சொல்லிக்கொடுப்பது என்பது பற்றி யோசிக்கிறீர்களா உங்களுக்காகவே இந்த பதிவு.

சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்திட வேண்டும் என்பது பற்றிய தெளிவை உங்களுக்கும் இந்தப்பதிவு வழங்கும்.

LIKE, SHARE,COMMENT செய்வதற்கு முன்பாக இந்த கேள்விகளுக்கு பதிலை பெறுங்கள்

facebook இடம் பயனாளர்களின் தகவல்களை கேட்கும் அரசாங்கம் - அதிகரிப்பு

1. இந்த பதிவை எழுதியது யார்?

2. இந்தப்பதிவு எப்படி எனக்கு காட்டப்படுகிறது? எனது நண்பர் பகிர்ந்ததாலா அல்லது promote செய்யப்பட்டிருப்பதாலா?

3. இந்த பதிவு உண்மையா?

4. இந்த பதிவிற்கு எனது பதில் என்ன?

5. இந்தப்பதிவை பகிர்ந்தால் அதனால் என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் இருப்பவர்களுக்கு பலன் உண்டா?

நீங்கள் ஒரு பதிவிற்கு LIKE, SHARE,COMMENT செய்வதற்கு முன்னதாக இந்த 5 கேள்விகளுக்கு விடையை தெரிந்துகொண்டு இதனை செய்தால் பிரச்சனையே இல்லை.

உண்மையை அறிவது எப்படி?

சமூகவலைதளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?

ஒரு பதிவை பார்க்கும் போது அது உண்மையானதா அல்லது இல்லையா என்பதனை தெரிந்துகொள்வது மிக மிக அவசியமான ஒன்று. பதிவு அதிகாரபூர்வமான கணக்கில் இருந்து வந்துள்ளதா? உதாரணத்திற்கு, செய்திசேனல் கணக்குகள், சம்பந்தப்பட்ட செய்தியை தேடிப்பார்ப்பதன் மூலமாக உண்மை என்ன என்பதை அறியலாம் அல்லது உங்களது நட்பு வட்டத்தில் அது பற்றிய தெளிவு பெற்றவர்களிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம். இரண்டுக்குமே வாய்ப்பு இல்லையெனில் நீங்கள் பார்த்ததோடு விட்டுவிடலாம்.  அப்படி விட்டுவிடுவதே சிறந்தது தான்.

சமூகவலைதளம் எப்படி செயல்படும்?

facebook going to share user data with government against hate speech

நீங்கள் ஒரு பதிவிற்கு LIKE, SHARE,COMMENT போடுகிறீர்கள் எனில் பேஸ்புக் உள்ளிட்ட தளங்கள் என்ன நினைத்துக்கொள்ளும் தெரியுமா? உங்களுக்கு இந்தப்பதிவு பிடித்திருக்கிறது என்றும் ஆகவே இவருக்கு அதே மாதிரியான பதிவுகளை காட்ட வேண்டும் எனவும் புரிந்துகொள்ளும்.

 

நீங்கள் போலியான பதிவுகளுக்கு LIKE, SHARE,COMMENT செய்தால் அது அவர்களை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும்.

நீங்கள் LIKE, SHARE,COMMENT செய்தால் அந்தப்பதிவு உங்களது நட்பில் உள்ளவர்களுக்கும் பரிந்துரைக்கப்படும்.

டிஜிட்டல் அறிவு அவசியம்

fake likes fake followers in tamil

டிஜிட்டல் கருவிகள் பயன்படுத்துவது பெரிதல்ல, அவற்றை பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். இல்லையெனில் உங்களது நிலைமை அதோகதியாகி விடும். அதேபோலத்தான் சமூகவலைதள பயன்பாடும் மிக மிக கவனமாக கையாளத்தெரிந்து இருக்க வேண்டும். இல்லையெனில் உங்களை பிறர் தவறாக பயன்படுத்திக்கொள்வதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular