BlockChain
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு தொழில்நுட்ப விசயத்தில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்திட பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் முன்னனியில் இருக்க வேண்டும் என சீன அதிபர் ஜின்பிங் விரும்புகிறார்
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் வெளிப்படையாகவே வர்த்தகப்பூர் நடைபெற்றுக்கொண்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் சீனாவை சேர்ந்த முன்னனி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹவாய் பெரும் பிரச்சனையை சந்தித்தது. அமெரிக்காவின் செயல்பாட்டுக்கு பிறகு பல நாடுகளிலும் 5 ஜி தொழில்நுட்பத்தை நிறுவுவதில் சிக்கலை சந்தித்தது ஹவாய். இது ஒரு எடுத்துக்காட்டு தான்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகப்பூர் இப்போது தொழில்நுட்பம் பக்கம் திரும்பி இருக்கிறது எனலாம். ஏற்கனவே தொழில்நுட்பத்துறையில் அமெரிக்காவிற்கு சவால் அளித்துவரும் சீனா, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் 5 ஜி போன்ற துறைகளில் கவனம் செலுத்தி முன்னனி வகித்தது. தற்போது பிளாக்செயின் தொழில்நுட்பம் பக்கம் தனது பார்வையை திருப்பி இருக்கிறது சீனா. இதற்கு ஊக்கமளிக்கும் விதமாக அண்மையில் பேசிய அதிபர் ஜின்பிங் “சீன நிறுவனங்கள் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் இருக்கும் வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக அதில் கண்டுபிடிப்புகளை செய்திட வேண்டும்” என பேசினார்.
ஏன் பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் மீது சீனா அதிக கவனம் செலுத்துகிறது? இணைய உலகில் பாதுகாப்பான முறையில் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவும் ஹேக்கர்களால் ஹேக் செய்திட முடியாத அளவிலான தொழில்நுட்பத்தையும் உருவாக்க பிளாக்செயின் தொழில்நுட்பத்தால் மட்டுமே முடியும். இதில் முன்னனி வகித்தால் மற்ற நாடுகளின் நிறுவனங்கள் கூட அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த சீனாவிடம் செல்லவேண்டி இருக்கும்.
வருங்கால உலகம் பண பரிவர்த்தனையை முற்றிலும் இணையத்தின் வாயிலாகவே செய்யும். குறிப்பாக பேஸ்புக் நிறுவனம் லிப்ரா கரன்ஸிகளை அறிமுகப்படுத்தும் போது நிலையான பல கரன்ஸிகளை ரிசர்வ் ஆக வைப்போம் ஆனால் சீனாவின் கரன்சியை தவிர என கூறியிருந்தது. லிப்ரா டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால் சீனாவின் யுவான் கரன்சியை டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்துவதில் அப்படி எதுவும் சிக்கல் இருக்காது. இதன் மூலமாக லிப்ராவிற்கு முன்னனி வகிக்க முடியும் என கருதுகிறது சீனா.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.