Monday, May 20, 2024
HomeTech ArticlesUSB 2.0 Vs USB 3.0 என்ன வித்தியாசம்?

USB 2.0 Vs USB 3.0 என்ன வித்தியாசம்?

usb-2.0-vs-3.0

usb-2.0-vs-3.0

நீங்கள் புதிதாக பென்ட்ரைவ் வாங்கும் போதோ அல்லது கேபிள் வாங்கும் போதோ USB 2.0 அல்லது USB 3.0 என்று போடப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பதனை விளக்கும் பதிவு தான் இது.


Click Here! Get Updates On WhatsApp


உங்களிடம் அண்மையில் வாங்கிய கணினி இருந்தால் அதில் பென்ட்ரைவ் போடுவதற்கு கொடுக்கப்பட்டு இருக்கும் USB போர்ட்களை பாருங்கள் அதில் படத்தில் காட்டப்பட்டுள்ளது போல ஊதா நிறம் இருந்தால் அது USB 3.0, வெறுமனே சாம்பல் நிறத்தில் இருந்தால் அது USB 2.0. இவ்வளவு தான் வித்தியாசமா என கேட்கிறீர்களா? பார்த்து தெரிந்துகொள்வதற்கு மட்டுமே இந்த வித்தியாசம்.

USB என்பதன் ஆங்கில விரிவாக்கம் Universal Serial Bus. USB என்பது தொடர்புகொள்வதற்கான புரோட்டோக்கால். அதாவது ஒரு கருவி இன்னொரு கருவியுடன் தொடர்பு கொள்வதற்கான அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான தொழில்நுட்ப விசயம் என வைத்துக்கொள்ளுங்கள். அதாவது இரண்டு கணினிகள் அல்லது கணினியோடு பிரிண்டர் அல்லது கணினியோடு பென்ட்ரைவ் ஆகியவை டேட்டா பரிமாறிக்கொள்ள பயன்படுகிற இணைப்பு தான் USB. நமது மொபைல் போன் உள்ளிட்டவைகளைக்கூட கணினியின் USB போர்ட்டில் இணைத்து டேட்டாவை பரிமாறிக்கொள்ளலாம் அல்லது ரீசார்ஜ் செய்தும் கொள்ளலாம்.

USB 2.0, USB 3.0 வித்தியாசம்

usb-2.0-vs-3.0

2000 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட USB 2.0 இன் தகவல் பரிமாற்ற வேகம் 480 MBPS.

 

2008 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட USB 3.0 இன் தகவல் பரிமாற்ற வேகம் 4.8 GBPS. அதாவது USB 2.0 வை விட USB 3.0 10 மடங்கு வேகமாக செயல்படும். உங்களது கணினியில் இருந்து ஒரு படத்தையோ பாடல்களையோ பென்ட்ரைவ்க்கு ஏற்றும் போது USB 3.0 இல் மிகவேகமாக ஏறும்.

 

 

USB 2.0 இல் ஒரு நேரத்தில் டேட்டாவை அனுப்ப அல்லது டேட்டாவை பெற மட்டுமே முடியும் [Half duplex]

 

USB 3.0 இல் இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெறும் (Full duplex)

 

கூடுதல் வேகம் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களால் USB 2.0 வை விட USB 3.0 அதிக விலைக்கு விற்கப்படும்.

 

USB 2.0 ஆனது சாம்பல் நிறத்திலும் USB 3.0 ஆனது ஊதா நிறத்திலும் இருக்கும்.

 

USB 2.0 கேபிளில் 4 ஒயர்களும் USB 3.0 இல் 9 ஒயர்களும் இருக்கும்.

 

தற்போது USB 3.1 வந்துவிட்டது. இதுதான் C type  USB என அழைக்கப்படுகிறது. USB 3.0 வை விடவும் இதன் வேகம் இன்னும் அதிகம் 10 Gbps. இது சிகப்பு நிறத்தில் இருக்கும்

நீங்க பென்ட்ரைவ் வாங்கப்போறீங்களா! இதோ சில நல்ல பென்ட்ரைவ்கள் உங்களுக்காக,


Click Here! Get Updates On WhatsApp










Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular