Sunday, May 12, 2024
HomeApps'WhatsApp Chat Messages Disappear' ஆப்சனை பயன்படுத்துவது எப்படி?

‘WhatsApp Chat Messages Disappear’ ஆப்சனை பயன்படுத்துவது எப்படி?

WhatsApp

வாட்ஸ்ஆப்பில் ஒருவர் பிறருக்கு அனுப்பிடும் மெசேஜ் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும் வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதனை ஆங்கிலத்தில் WhatsApp disappearing message என குறிப்பிடலாம்.

வாட்ஸ்ஆப் அதிக எண்ணிக்கையிலான பயனாளர்களை உலகம் முழுமைக்கும் கொண்டிருக்கிறது. அவ்வப்போது வாட்ஸ்ஆப் புதிய புதிய அப்டேட்களை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக “disappearing message” என்ற வசதியை வாட்ஸ்ஆப் அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஆப்சனை நீங்கள் ஆக்டிவ் செய்த பிறகு, ஒருவருக்கோ அல்லது ஒரு குரூப்பிற்கோ நீங்கள் அனுப்பிடும் மெசேஜ் ஆனது 7 நாட்களுக்கு பிறகு தானாகவே அழிந்துவிடும். நீங்கள் ஒவ்வொரு பயனாளருக்கும் இந்த ஆப்சனை தனித்தனியாக ஆக்டிவ் செய்திட வேண்டும்.  இந்த ஆப்சனை பின்வருமாறு நீங்கள் ஆக்டிவ் செய்திடலாம். 

>> Update your WhatsApp to the latest version. [உங்களது மொபைலில் இருக்கும் வாட்ஸ்ஆப்பை அப்டேட் செய்துகொள்ளுங்கள்] 

 

>> Open any person chat in your WhatsApp, and select on the contact info. [நீங்கள் யாருக்கு இந்த ஆப்சனை ஆக்டிவ் செய்திட வேண்டுமோ அவர்களது சாட்டை திறந்திடுங்கள். contact info வை கிளிக் செய்திடுங்கள் 

 

>> Scroll down, you will find ‘Disappearing Messages’ [கீழே ‘Disappearing Messages’ என்ற ஆப்சனை காணலாம்] 

 

>>  The feature is default set is disable if you want you can enable it [ enable என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்கவும்] 

 

>> Now, the messages sent to the chat will disappear after seven days. [இனி நீங்கள் அனுப்பிடும் செய்தியானது 7 நாட்களுக்கு பிறகு தானாக அழிந்துவிடும்] 

 

>> 7 நாட்கள் என்பது நீங்கள் இந்த ஆப்ஷனை ஆன் செய்த நாள் முதலே கணக்கிடப்படும். 

 

>> ஒருவர் உங்களுடைய மெசேஜ் ஐ 7 நாட்கள் திறக்காமலேயே இருந்தாலும் மெசேஜ் மறைந்துவிடும். ஆனால் நோட்டிபிகேஷனில் அந்த மெசேஜ் இருக்கும் 

 

>> அதேபோல ஒரு மெசேஜ் ஐ தேர்ந்தெடுத்து அதற்கு பதில் அளித்திருந்தால் [quoted text] குறிப்பிட்ட மெசேஜ் 7 நாட்களுக்கு பிறகும் மறையாது. 

 

>> ஒருவர் disappearing message ஆப்ஷனை ஆன் செய்வதற்கு முன்னாலேயே backup எடுத்திருந்தால் நீங்கள் அனுப்பிய மெசேஜ் அதில் இருக்கும். அவர் அந்த backup ஐ restore செய்திடும் போது மெசேஜ் அழிந்துவிடும். 

 






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular