Tuesday, January 28, 2025
HomeTech ArticlesWhatsApp Banned My Number Solution In Tamil | உங்களுக்காக

WhatsApp Banned My Number Solution In Tamil | உங்களுக்காக

கடந்த மார்ச், 2023 வாக்கில் மட்டும் சுமார் 47 லட்சத்திற்கும் அதிகமான மொபைல் எண்களை வாட்ஸ்ஆப் நிறுவனம் தடை செய்துள்ளது. தொடர்ச்சியாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தவறான செயல்பாடுகளில் ஈடுபடும் மொபைல் எண்களை தடை செய்துவரும் சூழலில் தவறுதலாக சில எண்களையும் வாட்ஸ்ஆப் தடை செய்துவிட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி, வாட்ஸ்ஆப் நிறுவனம் உங்களது மொபைல் எண்ணை தவறுதலாக தடை செய்து இருந்தால் அதனை எப்படி மீட்பது என்பதை இங்கே பார்க்கலாம். இது WhatsApp Banned My Number Solution In Tamil என ஆன்லைனில் சர்ச் செய்வோருக்கு பெரிதும் பயன்படும். 

Ban செய்யப்பட்ட மொபைல் எண்ணை எப்படி மீட்பது என்பதை தெரிந்துகொள்வதோடு எதனால் வாட்ஸ்ஆப் ஒரு மொபைல் எண்ணை தடை செய்கிறது என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். அதனை இந்தக்கட்டுரையின் இறுதியில் கூறியிருக்கிறேன்.

WhatsApp Banned My Number Solution In Tamil

உங்களது மொபைல் எண்ணை WhatsApp Ban செய்துவிட்டால் தானாகவே Signout ஆகிவிடும். 

நீங்கள் மீண்டும் உங்களது மொபைல் எண் கொடுத்தாலே இந்த புகைப்படத்தில் இருப்பது போல “Your Phone Number xxxxxxx is banned from using whatsapp. Contact support for help” என்று உங்களுக்கு காண்பிக்கும்.

ஒருவேளை வாட்ஸ்ஆப் உங்களை தடை செய்தது தவறு என நீங்கள் நினைக்கும் பட்சத்தில் நீங்கள் “support” என்ற பட்டனை அழுத்துங்கள்.

My number is banned from whatsapp incorrectly. Kindly reactivate my number. என அதிலே டைப் செய்திடுங்கள்.

இப்போது “Next” என அழுத்துங்கள்.

இப்போது உங்களுக்கு பல FAQ கேள்விகள் தோன்றும். அவை எதையும் நீங்கள் அழுத்தாமல் “This doesn’t answer my question” என்ற ஆப்சனை அழுத்துங்கள்.

இப்போது உங்களுக்கு WhatsApp க்கு மின்னஞ்சல் அனுப்புவதற்கான ஆப்சன் தோன்றும். அதிலேயும், My number is banned from whatsapp incorrectly. Kindly reactivate my number. என டைப் செய்து மின்னஞ்சல் அனுப்புங்கள். நீங்கள் இந்த மின்னஞ்சலை அனுப்பும்போதே கீழே உங்களது மொபைல், வாட்ஸ்ஆப் பற்றிய தகவல் அனைத்தும் தானாகவே வந்துவிடும். 

நீங்கள் மின்னஞ்சல் அனுப்பிவிட்டால் உங்களது புகாரை வாட்ஸ்ஆப் சப்போர்ட் விசாரிப்பார்கள். குறைந்தபட்சம் 24 மணி நேரத்தில் உங்களுக்கு வாட்ஸ்ஆப் நிறுவனத்திடம் இருந்து பதில் வரும். சில சமயங்களில் தாமதமும் ஆகலாம். நீங்கள் அதுவரைக்கும் காத்திருக்கத்தான் வேண்டும். 

Why WhatsApp Ban Your Mobile Number?

சரி, வாட்ஸ்ஆப் ஏன் ஒரு மொபைல் எண்ணை ban செய்கிறது என்பதை பார்ப்போம். இதை தெரிந்துகொண்டால் தான் இன்னொருமுறை உங்களது மொபைல் எண் தடை செய்யப்படுவதில் இருந்து தடுக்கலாம்.

Download From Trusted Sources

இப்போது பல இளைஞர்கள் வாட்ஸ்ஆப்பை கண்ட இணையதளங்களில் இருந்தும் டவுன்லோடு செய்கிறார்கள். அதேபோல, வெவ்வேறு விதமான WhatsApp ஐயும் டவுன்லோடு செய்கிறார்கள். இது மிகவும் தவறு. இப்படி செய்வதும் கூட வாட்ஸ்ஆப் உங்களது மொபைல் எண்ணை Ban செய்திட காரணமாக அமைந்துவிடலாம்.

Get Permission

உங்களது Contact இல் இருப்பவர்களை நீங்கள் ஏதேனும் ஒரு குரூப்பில் நீங்கள் சேர்ப்பதற்கு முன்பாக அவர்களது அனுமதியை வாங்குங்கள். ஒருவேளை அவர்களது அனுமதி இல்லாமல் நீங்கள் சேர்த்து அவர்கள் வெளியேறினால் உங்களை Ban செய்திட காரணமாக அமைந்துவிடும்.

Don’t send promotional messages

நீங்கள் தொடர்ச்சியாக promotional messages ஐ யாருக்கும் அனுப்பாதீர்கள். அப்படி நீங்கள் உங்களை தெரியாதவர்களுக்கு அனுப்பும்போது அவர்களால் உங்களது எண்ணை “Report” கொடுக்க முடியும். அப்படி, உங்களது எண்ணிற்கு தொடர்ச்சியாக பலர் “Report” கொடுத்தால் உங்களது மொபைல் எண் BAN செய்யப்பட்டுவிடும். 

நீங்கள் ஏதேனும் Bulk Sender டூலை பயன்படுத்துகிறவராக இருந்தால் தொடர்ச்சியாக அனுப்பாமல் குறிப்பிட்ட இடைவெளியில் செல்லுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

Follow WhatsApp Terms And Conditions

வாட்ஸ்ஆப் அதற்கென பல விதிமுறைகளை வைத்துள்ளது. அதனை நீங்கள் பின்பற்றாத பட்சத்தில் உங்களது மொபைல் எண்ணை வாட்ஸ்ஆப் தடை செய்திடும். உதாரணத்திற்கு, 

> ஆபாச செய்திகளை பகிர்வது 

> வன்முறையை தூண்டும் செய்திகளை பகிர்வது 

> தொடர்ச்சியாக செய்திகளை பகிர்வது 

> வாட்ஸ்ஆப்பை தவறாக பயன்படுத்துவது 

என பல விதிகள் இருக்கின்றன.

முடிவுரை

நீங்கள் மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபடுகிறவராக இருந்தால் உங்களது பர்சனல் மொபைல் எண்ணை எப்போதும் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்ப பயன்படுத்தாதீர்கள். வாட்ஸ்ஆப் உங்களது மொபைல் எண்ணை தடை செய்துவிட்டால் மீண்டும் அதனை மீட்பது கடினம். இப்போது உள்ள காலகட்டங்களில் வாட்ஸ்ஆப் அத்தியாவசியமான ஒன்றாக மாறியுள்ளது. ஆகவே, நீங்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துகொள்ளுங்கள்.

How can I activate my banned WhatsApp number?, How can I remove my number from WhatsApp banned?, What happens when WhatsApp bans your number?, How long can WhatsApp ban your number?, my whatsapp number is banned how to unbanned,can a banned whatsapp number be unbanned,how to unbanned from whatsapp quickly
whatsapp unban request message,how much time it takes to unbanned whatsapp number,permanently banned from whatsapp,is banned from using whatsapp contact support,how to avoid whatsapp ban

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular