Sunday, May 19, 2024
HomeEcommerceE-commerce என்றால் என்ன? அதிலே வெற்றி பெறுவது எப்படி?

E-commerce என்றால் என்ன? அதிலே வெற்றி பெறுவது எப்படி?

ECommerce Meaning In Tamil

E-commerce இல் ஈடுபட்டு அடுத்த நிலைக்கு செல்ல நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள். இங்கே, Ecommerce இல் வெற்றி பெறுவதற்கு தேவையான யுக்திகள், யோசனைகள், நிகழ்கால உதாரணங்கள் என அனைத்தும் உங்களுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப்பதிவை நீங்கள் முழுவதுமாக படித்து முடிக்கும் போது உங்களுக்கு இகாமர்ஸ் குறித்த ஒரு புரிதல் நிச்சயமாக ஏற்படும். முன்னரே, Ecommerce இல் ஈடுபட்டு இருந்து வெற்றி பெற முடியாமல் போயிருந்தால் நீங்கள் செய்த தவறுகளையும் புரிந்துகொள்ள முடியும். சரியான டூல்ஸ், சரியான யுக்தி, சரியான முயற்சி இவை மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். 

முதல் இரண்டையும் இங்கே நாங்கள் உங்களுக்கு தருகிறோம். மூன்றாவது உங்களிடம் இருந்து வர வேண்டியது. வாருங்கள், இ காமர்ஸ் இல் வெற்றி பெறுவது எப்படி என அறிந்துகொள்வோம்.

E-commerce என்றால் என்ன?

E-commerce என்பதனை தமிழில் இணைய வணிகம் அல்லது மின் வணிகம் என்று சொல்லலாம். ஒரு பொருளை முற்றிலுமாக இணைய வழியில் விற்பது அல்லது வாங்குவது இ காமர்ஸ் என்று சொல்லப்படுகிறது. நமக்கு பெரும்பாலும் தெரிந்த இ காமர்ஸ் தளங்கள் அமேசான், பிளிப்கார்ட், ஈபே போன்றவற்றைக் கூறலாம். 

தற்போது அதிகரித்து வரும் ஸ்மார்ட் போன் மற்றும் இணைய பயன்பாடு காரணமாக இ காமர்ஸ் பிரபலம் ஆகி வருகிறது. இதுபற்றி நீங்கள் விரிவாக இங்கே கிளிக் [E Commerce Meaning In Tamil] செய்தும் படிக்கலாம்.

இ காமர்ஸ் துறையின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?

நாம் எந்தத்தொழிலில் ஈடுபடப்போகிறோமோ அந்தத்தொழில் பற்றி அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இ காமர்ஸ் துறை அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. நாளுக்கு நாள் ஆன்லைனில் பொருள்கள் வாங்குகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதனால் இந்தத்துறையின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. முன்பை விட, மொபைல் போன்களின் வருகை மற்றும் சமூகவலைத்தளங்களின் தாக்கம் ஆகியவற்றின் காரணமாக அதிகமான தகவல்களை மக்கள் தங்கள் விரல் நுனியில் வைத்துள்ளனர். ஆகவே, இ காமர்ஸ் பிசினஸில் ஈடுபடுகிறவர்கள் முன்பை விடவும் தனித்துவமாகவும் சிறப்பாகவும் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Ecommerce Success க்கு முக்கியமானவை

நீங்கள் Ecommerce இல் வெற்றிபெற வேண்டுமெனில் அதற்கு பல விசயங்கள் சாத்தியமாக வேண்டும். முதலில் சரியான பிசினஸ் திட்டமிடல் வேண்டும் மற்றும் உங்களுடைய வாடிக்கையாளர் யார் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். உங்களுடைய வாடிக்கையாளருக்கு என்ன தேவை, என்ன மாதிரியான பொருள்களை அவர் வாங்குவார், அவர்களுடைய அனுபவம் பற்றி முழுமையாக தெரிந்திருக்க வேண்டும். சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இணையதளம், சிறப்பான வாடிக்கையாளர் சேவை, நம்பகத்துவம் இவை அனைத்தும் நம்பிக்கையை பெறுவதற்கு உதவும். 

Choosing the Right Ecommerce Platform

இ காமர்ஸ் துறையில் நீங்கள் சாதிக்க எடுக்கும் முதல்படி சரியான Ecommerce Platform ஐ தேர்வு செய்வது தான். மார்க்கெட்டில் ஏகப்பட்ட இ காமர்ஸ் தளங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அம்சங்கள் சிறப்பாக இருக்கிறது. நீங்கள் அதில் இருந்து சிறப்பான ஒன்றை தேர்வு செய்திட வேண்டியது அவசியம். ease of use, scalability, security, and integration இவற்றை அடிப்படையாகக்கொண்டு நீங்கள் உங்களுக்கான இ காமர்ஸ் தளத்தை தேர்வு செய்திடுங்கள். இந்தத்தேர்வை நீங்கள் செய்திட தேவையான நேரத்தை எடுத்துக்கொள்ளலாம்.

உங்களது இணையதளத்தை மேம்படுத்துங்கள்

இ காமர்ஸ் தளத்தை தேர்வு செய்த பிறகு நீங்கள் கவனம் செலுத்த வேண்டியது உங்களது இணையதளத்தை மேம்படுத்துவதில் தான். பார்க்கும் போதே பார்ப்பவரை ஈர்க்கும் விதத்தில் இருக்க வேண்டும், விற்பனைக்கு இருக்கும் பொருள்களை எளிதாக காணும் அளவில் பிரித்து வைத்திருக்க வேண்டும், வாங்கும் விதத்தில் இருக்க வேண்டும்.

Seamless Checkout Process

எந்தவித தடங்கலும் இல்லாமல் பொருளை வாங்கும் விதத்தில் இணையதளத்தை மேம்படுத்துங்கள். இல்லையேல், பாதியிலேயே வாங்குவோர் சென்றுவிட வாய்ப்பு உண்டு. மிகவும் விரைவாக பொருள்களை வாங்கும் விதத்தில் Payment வழிமுறையை வைத்துக்கொள்ளுங்கள்.

Email Marketing ஐ பயன்படுத்துங்கள்

Ecommerce இல் சாதித்தவர்கள் பலர் Email Marketing ஐ அதிகமாக பயன்படுத்தி இருக்கிறார்கள். வாடிக்கையாளர்களை தொடர்புகொள்ளவும் அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவும் இதனை பயன்படுத்தலாம். ஈமெயிலில் பட்டனை அழுத்தினால் உங்களது இணையதளத்திற்கு வருமாறு செய்து அங்கிருந்து பொருள்களை வாங்குமாறு செய்யலாம். தள்ளுபடி தகவல்கள், புதிய பொருள் பற்றிய விளம்பரம், போன்றவற்றை ஈமெயிலில் அனுப்பலாம்.

Utilizing Social Media for Ecommerce Success

சமூகவலைதளம் மக்களிடையே பெரிய அளவில் அறிமுகம் ஆகியுள்ளது. மக்களின் வாங்கும் முடிவில் சமூகவலைதளங்கள் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியும் வருகின்றன. உங்களது பிராண்டை விளம்பரப்படுத்த சமூகவலைத்தளம் ஓர் சிறந்த தளம். அங்கே நீங்கள் உங்களது வாடிக்கையாளர்களோடு எளிதாக தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியும்.

வெற்றியாளர்களை பின்பற்றுங்கள்

உங்களது துறையில் வெற்றி பெற்றவர்கள் என்ன மாதிரியான யுக்தியை பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களை விடவும் சிறப்பாக நீங்கள் அதனை செய்திடுங்கள். அடுத்தவர்களை அப்படியே பின்பற்றிடாமல் அதனை நன்கு ஆராய்ந்து பின்பற்றினால் எளிதாக வெற்றிபெற முடியும்.

முடிவுரை

நாம் ஏற்கனவே இ காமர்ஸ் என்றால் என்ன என்பது குறித்து விரிவாக எழுதி இருந்தோம். இந்தப்பதிவில், இ காமர்ஸ் துறையில் வெற்றி பெறுவதற்கு தேவையான செயல்பாடுகள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்த்துவிட்டோம். முதலில் சிறந்த இ காமர்ஸ் தளத்தை தேர்வு செய்வது துவங்கி, ஈமெயில் மார்க்கெட்டிங் பயன்படுத்துவது, சமூக வலைதளத்தை பயன்படுத்துவது என அனைத்தையும் கூறி இருக்கிறேன். இதனை நீங்கள் பயன்படுத்துங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular