Monday, May 20, 2024
HomeUncategorizedஅதிகமாக சம்பாதிக்கும் உலகின் டாப் 5 கேமர்கள் | top gaming earners 2020 in...

அதிகமாக சம்பாதிக்கும் உலகின் டாப் 5 கேமர்கள் | top gaming earners 2020 in tamil

Gaming Earners

தாங்கள் விளையாடுவதை twitch,youtube, facebook உள்ளிட்ட தளங்களில் வெளியிட்டு அதன் மூலமாக மில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்கள் பலர். அந்தவகையில் உலகம் முழுமைக்கும் அதிகமாக வீடியோ கேமிங் மூலமாக சம்பாதிக்கும் 5 நபர்களைத்தான் இங்கே பார்க்கப்போகிறோம்.



வீடியோ கேமிங் மூலமாக சம்பாதிப்பது என்பது எளிமையான விசயமாக பார்க்கத்தோன்றினாலும் கூட அது அவ்வளவு எளிதான விசயம் கிடையாது. பலரும் தற்போது இந்த வழிமுறையில் பணம் ஈட்ட முயற்சித்து வருகிறார்கள். நீங்களும் அதில் ஒருவராக இருந்தால் பேஸ்புக்கில் நீங்கள் விளையாடுவதை லைவ் செய்து பணம் ஈட்டுவது எப்படி என்பதை இதனை கிளிக் செய்து கற்றுக்கொள்ளுங்கள். நிஞ்சா என பொதுவாக கேமிங் உலகில் அறியப்படும் டைலர் பெல்வின் தான் உலகிலேயே அதிகமாக வீடியோ கேமிங் மூலமாக பணம் ஈட்டுகிறவராக அறியப்படுகிறார். இவர் 2019 இல் மட்டும் 17 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சம்பாதித்துள்ளார். போர்ப்ஸ் பத்திரிகையிலும் இதற்காக இவர் இடம் பிடித்தார். இவரைப்போலவே பலரும் வீடியோ கேமிங் மூலமாக சம்பாதித்து வருகிறார்கள். அவர்களில் முதல் 10 இடங்களை பிடித்திருப்போரை இங்கே பார்க்கலாம். 

#1 Ninja (Tyler Blevins) [நிஞ்ஜா டைலர் பெல்வின்ஸ்] 

வருமானம் $17 மில்லியன் 

 

அமெரிக்காவை சேர்ந்த டைலர் பெல்வின்ஸ் கேமிங் உலகில் பிரபல்யமாக நிஞ்சா என அறியப்படுகிறார். இவர் 2019 இல் மட்டும் 17 மில்லியன் அமெரிக்கன் டாலர்களை சம்பாதித்து முதலிடம் பிடித்துள்ளார். சிறுவயதில் இருந்தே கேம் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்த இவர் தான் படிக்கும் காலங்களில் உணவகங்களில் வேலை பார்த்துக்கொண்டே படித்தவர். படிப்பு, வேலை, கேம் என அனைத்திலும் சிறந்தவராக இருந்தார் டைலர். ஆரம்பத்தில்  Halo என்ற கேமை சிறப்பாக விளையாடி அதனை ஆன்லைனில் வெளியிட்டு அதன் மூலமாக சிறிய அளவில் சம்பாதித்து வந்தார். பிறகு போட்டிகளில் பங்கேற்று அவர் வெற்றியடைந்ததை தொடர்ந்து அவர் உலகம் முழுமைக்கும் அறியப்பட்டார்.  Fortnite Battle Royale என்ற கேமை விளையாட ஆரம்பித்த பின்னர் இவர் அதிக பாலோயர்களை பெறத்துவங்கினார். இதன்மூலமாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை சம்பாதித்து வருகிறார். 

இவர் Twitch இல் 12.8 மில்லியன் பாலோயர்கள், Youtube இல் 20 மில்லியன் பாலோயர்கள், இன்ஸ்டாகிராமில் 12 மில்லியன் பாலோயர்கள், ட்விட்டரில் 3.8 மில்லியன் பாலோயர்கள் என அசத்துகிறார். 

#2 PewDiePie (Felix Kjellberg)

வருமானம் : $15 மில்லியன் 

 

பெலிக்ஸ் கெல்பெர்க் எனும் இவர் youtube இல் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கும் ஒரு கேமராக அறியப்படுகிறார். இவர் ஆண்டு ஒன்றுக்கு சுமார் $15 மில்லியன் டாலர்களை சம்பாதிக்கிறார். PewDiePie இதுதான் அவருடைய youtube சேனல். சிறந்த கேம்களை விளையாடுவதை இவர் தொடர்ச்சியாக செய்துவருகிறார். 

#3 Preston (Preston Arsement)

வருமானம் : $14 மில்லியன் 

Minecraft விளையாட்டுக்காக அறியப்பட்ட இவர் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக $14 மில்லியன் சம்பாதிக்கிறார். 27 வயதாகும் இவர் தனது நான்கு youtube சேனல்களிலும் சேர்த்து 32 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள். 

#4 Markiplier (Mark Fischbach)

வருமானம் : $14 மில்லியன் 

 

Amnesia: The Dark Descent போன்ற பயமுறுத்தும் கேம்களை விளையாடும் இவர் ஆண்டு ஒன்றுக்கு $14 மில்லியன் சம்பாதிக்கிறார். 

#5 Shroud (Michael Grzesiek)

வருமானம் : $12.5 மில்லியன் 

பல கேம்களை வலைதளங்களில் விளையாடும் இவர் ஆண்டு ஒன்றுக்கு $12.5 மில்லியன் சம்பாதிக்கிறார். கனடாவை சேர்ந்த இவர் shroud என அறியப்படுகிறார். பப்ஜி உள்ளிட்ட பல கேம்களை இவர் லைவ் ஸ்ட்ரீம் செய்து பணம் ஈட்டுகிறார். 






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular