Monday, May 20, 2024
HomeTech Articlesஉலக அளவில் 62 ஆம் இடம் பிடித்த இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் | PARAM Siddhi...

உலக அளவில் 62 ஆம் இடம் பிடித்த இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர் | PARAM Siddhi AI

PARAM Siddhi AI

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் திட்டத்தின்படி [National Supercomputing Mission] உருவாக்கப்பட்ட PARAM Siddhi AI என்ற உயர் செயல்திறன் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் பெற்ற கணினி உலக அளவிலான 500 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் 63 ஆம் இடம் பிடித்து சாதனை புரிந்திருக்கிறது.

மருத்துவம், கண்காணிப்பு, வேதியியல், புள்ளியியல் போன்ற பல துறைகளில் அதிக தரவுகளைக் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும் போதும் சிக்கலான அறிவியல் கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளும் போதும் சூப்பர் கம்ப்யூட்டர் என்பது அத்தியாவசியமான தேவையாக மாறுகிறது. எப்போதும் செய்திகளில் அடிபடுவது ஜப்பான் மற்றும் சீனாவின் சூப்பர் கம்ப்யூட்டர் பற்றிய செய்திகள் தான். தற்சமயம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள சூப்பர் கம்ப்யூட்டர் ஒன்று சிறந்த 500 சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலில் 62 ஆம் பிடித்திருப்பது ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. 

உலக அளவில் சிறந்து விளங்கும் சூப்பர் கம்ப்யூட்டர்களின் திறனை ஆராய்ந்து Top500.org என்ற அமைப்பு 500 சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர்களின் பட்டியலை வெளியிடுகிறது. இந்தப்பட்டியலில் மீண்டும் ஜப்பானின் ‘Supercomputer Fugaku’ என்ற சூப்பர் கம்ப்யூட்டர் முதலிடம் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறது. இந்த கணினியின் அதிகபட்ச நிலையான செயல்திறன் நிலை [maximum sustained performance level] 442,010 teraflops per second என்ற புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மேற்கொண்ட இதே சோதனை முடிவைக்காட்டிலும் 6.4% திறன் கூடியிருக்கிறது. 

Supercomputer Fugaku – Supercomputer Fugaku, A64FX 48C 2.2GHz, Tofu interconnect D, Fujitsu

RIKEN Center for Computational Science

Japan

இரண்டாம் இடத்தில் அமெரிக்காவின் Summit சூப்பர் கம்ப்யூட்டர் இடம் பிடித்திருக்கிறது. இந்த கணினியின் அதிகபட்ச நிலையான செயல்திறன் நிலை [maximum sustained performance level] 148,600.0 teraflops per second என்ற நிலையில் இருக்கிறது. 

 

Summit – IBM Power System AC922, IBM POWER9 22C 3.07GHz, NVIDIA Volta GV100, Dual-rail Mellanox EDR Infiniband, IBM

DOE/SC/Oak Ridge National Laboratory

United States

 

மூன்றாம் இடத்தை அமெரிக்காவின் Sierra வும் நான்காம் இடத்தை சீனாவின் Sunway TaihuLight வும் பிடித்திருக்கின்றன. 

 

இந்தப்பட்டியலில் தான் 62 ஆம் இடத்தை இந்தியாவின் PARAM Siddhi-AI பிடித்திருக்கிறது. இந்த கணினியின் அதிகபட்ச நிலையான செயல்திறன் நிலை [maximum sustained performance level] 4,619.0 teraflops per second என்ற நிலையில் இருக்கிறது. 

 

PARAM Siddhi-AI – NVIDIA DGX A100, AMD EPYC 7742 64C 2.25GHz, NVIDIA A100, Mellanox HDR Infiniband, Atos

Center for Development of Advanced Computing (C-DAC)

India

 

 

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங்  திட்டத்தின்படி சுமார் 4500 கோடி ரூபாய் செலவில் சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. MeitY, DST, C-DAC மற்றும் IISc ஆகியவற்றின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் குறைந்தது 50 சூப்பர் கம்ப்யூட்டர்களையாவது நிறுவ வேண்டும் என்பதே. சூப்பர் கம்ப்யூட்டர் உருவாக்கம் natural language processing, surveillance, image processing, automotive industry, healthcare, robotics, computer vision மற்றும் IoT உள்ளிட்டவற்றில் பெரும் பங்கு ஆற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

டாப் 100 சூப்பர் கம்ப்யூட்டர் பட்டியலில் இந்தியாவின் இன்னொரு சூப்பர் கம்ப்யூட்டரான Indian Institute of Tropical Meteorology இல் இருக்கும் Pratyush இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 77 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. 

 

இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டர்கள் தொடர்ச்சியாக பட்டியலில் இடம்பிடிப்பது மிகவும் நல்ல செய்தியாகவே பார்க்கப்படுகிறது. அடுத்ததடுத்த ஆண்டுகளில் மேலும் பல சூப்பர் கம்ப்யூட்டர்கள் இந்தப்பட்டியலில் இடம்பிடிக்கும் என நம்பலாம். 






Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular