Sunday, April 28, 2024
HomeYoutubeயூடியூப் சேனலை நீக்குவது எப்படி? How To Delete Youtube Channel Tamil

யூடியூப் சேனலை நீக்குவது எப்படி? How To Delete Youtube Channel Tamil

Explained step by step process to delete the YouTube channel properly in Tamil.

YouTube Channel துவங்குவது பலருக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. இருந்தாலும் சில காரணங்களால் அதில் இருந்து விடுபட்டு வேறு துறைகளுக்கு செல்ல நினைக்கும் போது ‘How To Delete Youtube Channel’ என்ற கேள்வி எழலாம். யூடியூப் சேனலை நீக்குவது என்பது எளிதாக செய்துவிடக்கூடிய வேலை தான். இருந்தாலும் அதனை முறைப்படி செய்திட வேண்டியது அவசியம். யூடியூப் சேனலை நீக்குவதற்கு முன்னதாக செய்திட வேண்டிய விசயங்கள், சேனலில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்து வைப்பது, நிரந்தரமாக சேனலை நீக்குவது என பல்வேறு விசயங்களை இந்த கட்டுரையில் உங்களுக்கு விரிவாக விளக்கப்போகிறேன்.

யூடியூப் சேனலை நீக்குவது ஏன்? Why delete your YouTube channel?

உங்கள் YouTube சேனலை நீக்குவதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒருவேளை நீங்கள் நினைத்தது மாதிரியான வருமானத்தை அதன் மூலமாக பெற முடியாமல் போயிருக்கலாம் அல்லது தொடர்ந்து உங்களால் சேனலை நடத்த முடியாமல் போயிருக்கலாம். உங்கள் காரணங்கள் எதுவாக இருந்தாலும், நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் சேனலை ஏன் நீக்க விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவாக இருப்பது முக்கியம்.

2019 இல் யூடியூப் வருமானம் $15 பில்லியன்

உதாரணத்திற்கு, நீங்கள் இவ்வளவு நாட்கள் உழைத்து உருவாக்கிய சேனலை நீக்கிவிட்டால் மீண்டும் அதனை உருவாக்குவது கடினம், நீங்கள் பிரபலமானவராக இருந்தால் உங்களை பின்தொடரும் நபர்கள் பலர் இருந்தால் உங்களது தனிப்பட்ட இந்த முடிவு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

யூடியூப் சேனல் துவங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி?

YouTube channel Delete செய்துவிட்டால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன?

உங்கள் YouTube சேனலை நீக்குவதற்கு முன்பாக அதனால் ஏற்படும் விளைவுகளைப் புரிந்துகொள்வது அவசியம். உங்கள் சேனல் நீக்கப்பட்டதும், உங்களின் அனைத்து வீடியோக்கள், கமெண்ட்டுகள் மற்றும் சந்தாதாரர்கள் நிரந்தரமாக அகற்றப்படுவார்கள். இதனால் உங்களுடைய சேனலில் பதிவேற்றிய எந்த வீடியோக்கள் அல்லது உள்ளடக்கம் ஆகியவற்றை யாராலும் பார்க்க முடியாது.

நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய சேனலை நிரந்தரமாக நீக்கிவிட்டால் மீண்டும் அதேபோன்றதொரு சேனலை உருவாக்குவது மிகவும் கடினம்.

உங்களது சேனல் மூலமாக உங்களுக்கு வருமானம் வந்துகொண்டு இருந்தால் உங்களது சேனலை நீக்கியபிறகு அது வராது.

YouTube Channel ஐ Backup எடுப்பது எப்படி?

உங்களது சேனலை நீக்குவது என முடிவு செய்துவிட்ட பிறகு குறைந்தபட்சம் அதனை Backup எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. பின்வரும் எளிய வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் இதனை செய்யலாம். 

To back up your YouTube channel, follow these steps:

1. Sign in to your YouTube account and click on your profile picture in the top-right corner of the screen.

2. Click on “YouTube Studio” from the drop-down menu.

3. In the left-hand menu, click on “Settings” and then “Channel”.

4. Under “Channel settings”, click on “Advanced settings”.

5. Scroll down to the “Download channel” section and click on “Download channel”.

6. Follow the on-screen instructions to download your data and content.

5 Tips for successful youtube blogger in tamil

YouTube Channel ஐ Delete செய்வது எப்படி?

நீங்கள் மேலே சொன்ன வழிமுறைகளை பயன்படுத்தி உங்களது சேனலின் backup ஐ எடுத்துவிட்டால் பின்வரும் வழிமுறையை பின்பற்றி YouTube Channel ஐ Delete செய்திட ஆரம்பிக்கலாம். 

1. Sign in to your YouTube account and click on your profile picture in the top-right corner of the screen.

2. Click on “YouTube Studio” from the drop-down menu.

3. In the left-hand menu, click on “Settings” and then “Channel”.

4. Under “Channel settings”, click on “Advanced settings”.

5. Scroll down to the “Delete channel” section and click on “Delete channel”.

6. Follow the on-screen instructions to confirm that you want to delete your channel.

7. Enter your password to confirm the deletion.

நீங்கள் delete செய்துவிட்டால் மீண்டும் உங்களது சேனலை மீட்டெடுக்க முடியாது. ஆகவே, அதனை நினைவில் வைத்துக்கொண்டு டெலீட் செய்திடுங்கள். 

Alternatives to deleting your YouTube channel

உங்களுக்கு ஏதேனும் தற்காலிக பிரச்சனைகள் ஏற்பட்டு அதனால் Youtube தளத்தில் இருந்து சற்று விலகி இருக்கலாம் என இந்த முடிவுக்கு வந்துள்ளீர்களா? அப்படி இருந்தால் நீங்கள் டெலீட் செய்திடாமல் உங்களது வீடியோக்களை Private Mode இல் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலமாக உங்களது வீடியோக்களை யாரும் பார்க்க முடியாது. மீண்டும் உங்களுக்கு ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்றும் போது நீங்கள் Public என மாற்றிக்கொள்ளலாம்.

Conclusion

நாம் ஏற்கனவே பேசியபடி Youtube சேனலை நீங்கள் நிரந்தமாக நீக்கிவிட்டால் மீண்டும் மீட்டு எடுப்பது முடியாத காரியம். ஆகவே, டெலீட் செய்வதற்கு முன்பாக backup எடுத்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. உங்களுக்கு தற்காலிகமாக சூழல் சரியில்லை, பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என தோன்றினால் நீங்கள் உங்களது வீடியோக்களை Private இல் வைத்துவிடலாம். பின்னர் தோன்றும் சமயத்தில் மீண்டும் Public என வைத்துக்கொள்ளலாம்.

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular