Saturday, April 27, 2024
HomeYoutubeYouTubeல் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?

YouTubeல் இருந்து எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்?

How much you can earn from YouTube? – Video Content ஐ உருவாக்குகிறவர்களுக்கு பணம் ஈட்டும் ஒரு தளமாக இருந்து வருகிறது YouTube. அவர்கள் பதிவேற்றும் வீடியோக்களை உலகில் உள்ள இணையவாசிகள் பார்க்குமாறு பகிரலாம். அப்படி, YouTube பயனாளர்கள் வீடியோக்களை பார்க்கும் போது தோன்றும் விளம்பரங்களின் மூலமாக குறிப்பிட்ட வீடியோவை பதிவேற்றிய நபர் சம்பாதிக்க முடியும். நீங்கள் இவ்வளவு தான் YouTube மூலமாக சம்பாதிக்க முடியும் என கூற முடியாது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தின் அளவானது நீங்கள் எந்த Category வீடியோவை பகிர்கிறீர்கள், உங்களது வீடியோக்களை எங்கே இருந்து அதிகம் பார்க்கிறார்கள், எவ்வளவு views உங்களது வீடியோவிற்கு வருகிறது என்பதையெல்லாம் பொறுத்தது. 

இந்தப்பதிவில், சராசரியாக ஒருவரால் YouTube இல் எவ்வளவு சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதை பார்க்கலாம்.

Ad Revenue [விளம்பர வருவாய்]

YouTube இன் முதன்மையான வருமானம் விளம்பரங்களின் மூலமாகவே வருகிறது. Youtube Partner Program இல் இணைவதன் மூலமாக விளம்பரங்களின் மூலமாக பணம் ஈட்ட முடியும். விளம்பரங்களை காண்பிக்க விரும்பும் நிறுவனங்கள் (Advertisers) YouTubeக்கு பணம் செலுத்துகிறார்கள். ஒவ்வொரு முறை விளம்பரம் காண்பிக்கப்படும் போதும் குறிப்பிட்ட பணத்தை அவர்களிடம் இருந்து பெறுகிறது YouTube. அந்தப்பணத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கை வீடியோவை பதிவேற்றம் செய்தவருக்கு பகிர்ந்து வழங்குகிறது YouTube.

Monetization Eligibility [பணமாக்குதல் தகுதி]

Youtube Partner Program க்கு தகுதி பெற, யூடியூபர்கள் சில தகுதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். 

* கடந்த 12 மாதங்களில் குறிப்பிட்ட Youtube Channel குறைந்தது 1,000 Subscribers, 4,000 Hours View Duration பெற வேண்டும்.

CPM

2019 இல் யூடியூப் வருமானம் $15 பில்லியன்

CPM என்பது 1,000 முறை காண்பிக்கப்பட்ட விளம்பரங்களுக்கு நிறுவனங்கள் சராசரியாக செலுத்தும் தொகையை இது குறிக்கிறது. CPM ஆனது உங்களது வீடியோவை எங்கே இருப்பவர்கள் பார்க்கிறார்கள், எவ்வளவு பேர் பார்க்கிறார்கள், நீங்கள் எது சார்ந்து வீடியோ பதிவேற்றி உள்ளீர்கள் போன்ற காரணிகளின் அடிப்படையில் பரவலாக மாறுபடும். சராசரி CPM $0.25 முதல் $4 வரை இருக்கும். சில சமயங்களில் இது  அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். YouTube விளம்பர வருவாயில் ஒரு பகுதியை எடுத்துக்கொள்கிறது. இப்போதைக்கு வருகிற வருவாயில் 45% ஐ YouTube எடுத்துக்கொள்கிறது. Youtube சேனல்களுக்கு 55% ஐ வழங்குகிறது.

Sponsor Video [ஸ்பான்சர் வீடியோ]

மக்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட யூடியூபர்கள் மூலமாக தங்களது நிறுவன பொருள்களை விளம்பரப்படுத்த நிறுவனங்கள் விரும்புகின்றன. அதற்காக யூடியூபர்களை அந்த நிறுவனங்கள் அணுகுகின்றன. அவர்கள் குறிப்பிட்ட பொருள்களை விளம்பரப்படுத்த Review Video, Promotional Video போன்றவற்றை போடுவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் பணம் வழங்குகின்றன. இதன் மூலமாகவும் யூடியூபர்கள் சம்பாதிக்க முடியும். அனைத்து யூடியூபர்களுக்கும் இந்த வாய்ப்பு கிடைப்பது இல்லை. மிகவும் பிரபலம் அடைந்த யூடியூபர்களுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்கிறது.

Product Sales [பொருட்கள் விற்பனை]

பலர் தங்களது பொருள்களை மக்களிடம் கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக Youtube ஐ பயன்படுத்துகிறார்கள். அதேபோல, பல யூடியூபர்கள் Affiliate Marketing மூலமாக சம்பாதிப்பதற்கு Youtube ஐ பயன்படுத்துகிறார்கள். பிற நிறுவனங்களின் பொருள்களை விற்றுக்கொடுப்பதன் மூலமாக கணிசமாக கமிஷன் தொகையை யூடியூபர்கள் பெறலாம். இந்தத்தொகையை யாரிடமும் பகிர்ந்துகொள்ள தேவை இல்லை.

Crowdfunding and Donations [நன்கொடைகள்]

சில படைப்பாளிகள் தங்களது பார்வையாளர்களிடமிருந்து உதவியினை பெற முடியும். அவர்கள் தங்களது பண பரிமாற்றம் தொடர்பான தகவல்களை பார்வையாளர்களிடம் தெரிவித்து பணத்தை பெறலாம். பார்வையாளர்கள் அவர்களை நம்பும் பட்சத்தில் தங்களால் முடிந்த உதவியை செய்வார்கள். உதாரணத்திற்கு, பிரபலமான நகைச்சுவை சேனல் நடத்துகிறவர்கள் இப்படித்தான் தாங்கள் எடுக்கப்போகும் படத்திற்கு தேவையான உதவியை பெற்றார்கள். Patreon, Kickstarter அல்லது Indiegogo போன்ற க்ரவுட் ஃபண்டிங் தளங்கள் மூலமாகவும் பெறலாம்.

யூடியூப் ஒரு லாபகரமான தளமாக இருந்தாலும், நீங்கள் சம்பாதிக்கக்கூடிய பணத்தின் அளவு பல காரணிகளின் அடிப்படையில் கணிசமாக மாறுபடும். விளம்பர வருவாய், ஸ்பான்சர் செய்யப்பட்ட உள்ளடக்கம், சேனல் மெம்பர்ஷிப்கள், வணிகப் பொருட்களின் விற்பனை மற்றும் நன்கொடைகள் அனைத்தும் யூடியூபரின் சாத்தியமான வருமானத்திற்கு பங்களிக்கின்றன. இருப்பினும், வெற்றிகரமான YouTube சேனலை உருவாக்குவதற்கு ஆர்வம், சீரான உழைப்பு, பார்வையாளர்களின் ஈடுபாடு போன்றவை மிகவும் முக்கியமானவை என்பதை நினைவில் கொள்வது அவசியம்.

யூடியூப் சேனல் துவங்குவது எப்படி? பணம் சம்பாதிப்பது எப்படி?

TECH TAMILAN

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular