Thursday, November 21, 2024
HomeTech Articlesஇப்படியாம்மா பேரு வைப்பீங்க,எலான் மஸ்க் குழந்தை பெயர் என்ன தெரியுமா? X Æ A-12

இப்படியாம்மா பேரு வைப்பீங்க,எலான் மஸ்க் குழந்தை பெயர் என்ன தெரியுமா? X Æ A-12

Neuralink’s Elon musk brain reading tech
மிகப்பிரபல்யமான தொழிலதிபரும் புதுமையை நோக்கி அலைபவருமான எலன் மஸ்க் தனது குழந்தைக்கு X Æ A-12 என பெயர் வைத்துள்ளார். இந்தப்பெயரை எப்படி அழைப்பது என பலரும் கேட்டுவந்த நிலையில் அவரே விளக்கம் தந்திருக்கிறார்.

எலன் மஸ்க் எப்போதுமே தொழில்முனைவோர்களால் பெரிதும் விரும்பப்படுகிற ஒரு நபர். இவரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் இங்கே கிளிக் செய்து படியுங்கள். எப்போதும் புதுமையை நகைச்சுவையாக கலந்துபேசும் வழக்கம் உடையவர் எலன் மஸ்க். இவர் சில தினங்களுக்கு முன்னதாக ட்விட்டரில் தனக்கும் தனது காதலியான பாடகி கிரைம்ஸ் க்கும் குழந்தை பிறந்திருப்பதாக தெரிவித்து இருந்தார். 

 

pic.twitter.com/lm30U60OtO

— Elon Musk (@elonmusk) May 5, 2020

அப்போது குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போகிறீர்கள் என சிலர் கேட்க “X Æ A-12 Musk” என்று பெயர் வைக்கப்போவதாக ட்விட்டரில் பதில் அளித்திருந்தார் மஸ்க். எப்போதும் நகைச்சுவையாக பேசுவதைப்போல இதையும் சொல்லியிருப்பார் என நினைத்துக்கொண்டு இருக்கும் போது உண்மையாலுமே அவர் குழந்தைக்கு X Æ A-12 Musk இந்தப்பெயரைதான் வைக்க இருப்பதாக தெரிகிறது. 

 

எலான் மஸ்க்கின் காதலி இதனை ட்விட்டரில் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதோடு நில்லாமல் எதற்காக தங்களது குழந்தைக்கு X Æ A-12 Musk என்ற பெயரை சூட்ட முடிவு செய்தோம் என அந்தப்பெயருக்கு விளக்கத்தையும் அளித்துள்ளார். அதன்படி, 

•X, the unknown variable ⚔️
•Æ, my elven spelling of Ai (love &/or Artificial intelligence)
•A-12 = precursor to SR-17 (our favorite aircraft). No weapons, no defenses, just speed. Great in battle, but non-violent 🤍
+
(A=Archangel, my favorite song)
(⚔️🐁 metal rat)

— ꧁ ༒ Gℜiꪔ⃕es ༒꧂ 🍓🐉🎀 小仙女 (@Grimezsz) May 6, 2020

X என்றால் முடிவு தெரியாத மாறி, Æ என்றால் ash என ஆங்கிலத்தில் உச்சரிப்பார்கள், A-12 என்பது சி.ஐ.ஏ க்கு தயார் செய்யப்பட்ட விமானத்தின் பெயர். [A-12 [Archangel 12] என்பது புகழ்பெற்ற SR-71 என்ற அதிவேக விமானத்தின் முன்னோடி என மஸ்க் குறிப்பிட்டுள்ளார்]. இவை அனைத்தையும் கலந்து தான் தற்போது இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள். எலன் மஸ்க் எப்போதுமே இப்படித்தான் என்று சொல்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யமான தகவல் இருக்கிறது. இந்தப்பெயரை எலன் மஸ்க் கூறவில்லையாம், அவரது காதலி தான் இப்படியொரு பெயரை வைக்கலாம் என்று ஐடியா கொடுத்தாராம். 

 

ஏற்கனவே தனது காதலி பெயருக்கு விளக்கம் கொடுத்திருக்கும் சூழலில் X Æ A-12 இந்தப்பெயரை எப்படி உச்சரிப்பது என்பது குறித்தும் மஸ்க் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதன்படி X என்பதனை வெறுமனே எக்ஸ் என்றே அழைக்க வேண்டும், Æ என்பதை ஆஷ் [ash] என அழைக்க வேண்டும், A-12 [Archangel 12] இதனை ஆர்ச்சஞ்சல் டுவெல் என அழைக்க வேண்டும்.  இறுதியில் அந்தக்குழந்தையினை எக்ஸ் ஆஷ் ஆர்ச்சஞ்சல் டுவெல் [X Ash Archangel Twelve] என்றே அழைக்க வேண்டும். 

 

அப்பாடா, ஒரு பெயருக்கு பின்னால் இத்தனை விசயங்களா என யோசிக்கிறீர்களா. என்ன செய்வது ஒவ்வொருவரும் தங்களது குழந்தைக்கு புதுமையான பெயர்களை வைக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். நீங்களும் உங்களது குழந்தைக்கு இப்படியொரு பெயரை வைக்கலாம் ஆனால் யாராவது அர்த்தம் கேட்டால் தான் குழந்தை பெரிய விளக்கத்தை கொடுக்க வேண்டி இருக்கும். 

தாமஸ் ஆல்வா எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன்

Click Here

யார் இந்த சர் சிவி ராமன்?

Click Here

ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

Click Here

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி?

Click Here

கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர்

Click Here


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular