Saturday, May 11, 2024
HomeAppsகூகுள் லென்ஸில் சூப்பரான 3 ஆப்சன் | பேப்பரில் எழுதியதை கணினிக்கு கொண்டுபோகலாம் | Google...

கூகுள் லென்ஸில் சூப்பரான 3 ஆப்சன் | பேப்பரில் எழுதியதை கணினிக்கு கொண்டுபோகலாம் | Google Lens copy and paste notes to your computer

கூகுள் லென்ஸ் ஆப்
பேப்பரில் எழுதும் பழக்கமுடையவர்களுக்கு பயனுள்ள வகையில் புதிய வசதி ஒன்றினை கூகுள் லென்ஸ் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இதன்மூலமாக பேப்பரில் எழுதியதை உங்களது மொபைலில் எடுத்து அதனை அப்படியே உங்களது கணினியில் பேஸ்ட் செய்திட முடியும். நீங்கள் புரியும் விதமாக எழுதினால் போதுமானது.

Copy/Paste handwritten notes to your computer

கூகுள் லென்ஸ் ஏற்கனவே பல்வேறு சிறப்பான வசதிகளை கொண்டிருந்தது. நீங்கள் அவற்றை படிக்க விரும்பினால் இந்த கட்டுரையின் இறுதியில் அதை படிக்கலாம். முன்பு ஒருவர் பேப்பரில் எழுதியதை மொபைலில் Copy/Paste செய்திட முடியும். அதனை ஒருவர் கணினிக்கு நேரடியாக கொண்டுவர முடியாது. ஆனால் தற்போது முடியும். 

 

உதாரணத்திற்கு, நான் ஒரு பேப்பரில் கட்டுரை ஒன்றினை எழுதுகிறேன் என வைத்துக்கொள்வோம். இதனை அச்சு வடிவதற்கு கொண்டு செல்ல மீண்டும் நானோ அல்லது எனது உதவியாளரோ டைப் செய்துதான் கொண்டுவர முடியும். கூகுள் லென்ஸ் ஆப் மூலமாக நான் எழுதிய கட்டுரையை புகைப்படம் எடுத்தால் அதனை எனது மொபைலில் Copy/Paste செய்திட முன்பு முடியும். ஆனால் தற்போது மொபைலில் இருந்து Copy செய்து நேரடியாக எனது கணினியிலேயே Paste செய்திடும் ஆப்சன் கொடுக்கப்பட்டுள்ளது. 

 

இதற்கு நான் இரண்டு விசயங்களை மட்டும் செய்தால் போதுமானது. ஒன்று, கூகுள் லென்ஸ் புரிந்துகொள்ளும் விதமாக நான் எழுத வேண்டும். இரண்டாவது, எனது மொபைலில் இருக்கும் கூகுள் லென்ஸ் ஆப்பிலும் கணினியில் இருக்கும் கூகுள் டாக்குமெண்ட் கணக்கிலும் ஒரே ஜிமெயில் – ஐ signin செய்திருக்க வேண்டும். இப்போது எனது மொபைலில் நான் Copy செய்துவிட்டு கணினியில் இருக்கும் கூகுள் டாக்குமென்டில் Paste என்ற ஆப்சனை கிளிக் செய்தால் நான் மொபைலில் copy செய்தது அங்கே paste ஆகிவிடும். 

pronounce new words & Search new concepts

கூகுள் லென்ஸ் ஆப்

மேலும் இரண்டு வசதிகளையும் கூகுள் லென்ஸில் கொடுத்திருக்கிறார்கள். அதில் முதலாவது, ஒரு வார்த்தையை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை கற்றுத்தரும் வசதி [pronounce new words]. இரண்டாவது, ஒரு மாணவர் ஒரு பாடத்தை படித்துக்கொண்டிருக்கும்போது ஏதேனும் ஒரு விசயம் புரியவில்லை எனில் அதுபற்றி கூகுள் லென்ஸ் கொண்டு தேடி விவரங்களை பெற முடியும். இந்த வசதி, ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் கிடைக்கும். முதலாவது வசதியானது ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 

 
கூகுள் லென்ஸ் ஆப்

Existing Features

உங்களுக்கு தெரியாத விசயங்களை உங்களது கேமராவில் காட்டி அது பற்றிய விவரங்களை தெரிந்துகொள்வதற்கு கூகுள் லென்ஸ் ஆப் பயன்படும்.



Click Here! Get Updates On WhatsApp

 

கூகுள் பல்வேறு ஆப்களை பயன்பாட்டிற்கு விட்டிருக்கிறது. அவற்றில் சில கவனிக்கத்தக்க ஆப்களை வரிசைப்படுத்தினால் அதில் Google Lens கண்டிப்பாக இருக்கும். இந்தக்கட்டுரையில் Google Lens ஆப்பினை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்யலாம் என்பதனைதான் பார்க்க இருக்கிறோம். 

மொழிமாற்றம் செய்திடும் வசதி | Translate Option

Google Lens UI

நீங்கள் வேறு மொழி பேசக்கூடிய பகுதிக்கு செல்கிறீர்கள். அங்கு இருக்கும் பெயர்ப்பலகைகள் அந்த ஊர் மொழியில் இருக்கும். நீங்கள் அதில் என்ன எழுதி இருக்கிறது என்பதனை தெரிந்துகொள்ள பிறரின் உதவியை நாட வேண்டிய அவசியம் இல்லை. உங்களது மொபைலில் இருக்கும் Google Lens ஆப்பை திறந்து அதில் இருக்கும் கேமரா ஆப்சன் மூலமாக அந்த பெயர்ப்பலகையை காட்டினால் உடனடியாக உங்களுக்கு வேண்டிய மொழியில் மொழிமாற்றம் செய்து காண்பிக்கும்

நீங்கள் பார்ப்பதை பற்றிய தகவலை தேடலாம் | Search what you see

Google Lens UI

உங்கள் வீட்டு தோட்டத்தில் அழகான செடி ஒன்று புதிதாக வளர்ந்திருக்கிறது. அது என்ன செடி என்பதை எப்படி அறிந்துகொள்வது? உங்களது வீட்டில் இருக்கும் நாய்க்குட்டி என்ன ரகம் என்பதனை எப்படி தெரிந்துகொள்வது? ஒரு வார்த்தை தெரிந்தால் அதனை கூகுள் சர்ச்சில் பதிவிட்டு தேடி படிக்கலாம். ஆனால் கண் எதிரே இருக்கின்ற நமக்கு என்னவென்றே தெரியாத விசயத்தை எப்படி தேடி படிப்பது? – அங்கு தான் கூகுள் லென்ஸ் பயன்படுகிறது. நீங்கள் உங்களது மொபைலில் Google lens ஆப்பினை தரவிறக்கம் செய்திட வேண்டும். 

 

பின்னர் அந்த ஆப்பை திறந்தால் அதில் கேமரா லோகோ இருக்கும். அதனை கிளிக் செய்து நீங்கள் எதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமோ அதனை காட்டி சர்ச் செய்தால் அதுபற்றிய விவரங்கள் உங்களுக்கு காட்டப்படும்.

பார்க்கும் பொருள்களை தேடும் வசதி

Search what you see - google lens

 

உங்களது தோழி அழகான bag ஒன்று வைத்திருக்கிறார். அதே போன்றதொரு bag ஐ நீங்கள் வாங்க வேண்டுமென்றால் அவரிடம் கூட நீங்கள் கேட்க வேண்டியதில்லை. உங்களது google lens ஆப்பில் அந்த bag ஐ காட்டி தேடினால் அதே போன்றதொரு bag எங்கு விற்கப்படுகிறது, ரிவியூ, விலை என அனைத்தையும் பெற முடியும்.

மற்றவர்களின் கருத்துக்களை எளிமையாக பெறலாம்

Google Lens UI

 

நீங்கள் ஒரு ஹோட்டலுக்கு உணவருந்த செல்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அங்கே தரப்படும் மெனு கார்டில் “புதிதாக ஒரு உணவு வகை” இருக்கிறது. அதனை ஆர்டர் செய்யலாமா? நன்றாக இருக்குமா? என நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்கள். கடைக்காரரிடம் கேட்டால் நன்றாக இருக்கும் என்றே கூறுவார். ஆனால் அதனை சாப்பிட்ட மற்றவர் கூறுவதை கேட்டால் நன்றாக இருக்குமல்லவா. உடனடியாக கூகுள் லென்ஸ் ஆப்பினை எடுத்து அந்த மெனுவில் இருக்கும் உணவை கேமராவில் காட்டுங்கள். அதனை ஏற்கனவே சாப்பிட்டவர்களின் ரிவியூ வை நீங்கள் உடனடியாக பார்த்து தெரிந்துகொள்ள முடியும்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular