Monday, May 20, 2024
HomeTech ArticlesGoogle Search ஆல் 1 லட்சம் இழந்த பெண் | பாதுகாப்பாக இருப்பது எப்படி?

Google Search ஆல் 1 லட்சம் இழந்த பெண் | பாதுகாப்பாக இருப்பது எப்படி?


[easy-notify id=823]

Highlights :

  • வங்கியின் உதவி எண்ணை கூகுளில் தேடி அழைத்த பெண்
  • வங்கியின் உதவியாளர் என பேசியவர் வங்கி கணக்கை கேட்டவுடன் கொடுத்த பெண்
  • 1 லட்சம் ரூபாய் அந்த பெண்ணின் கணக்கில் இருந்து திருட்டு
  • Google நிறுவனத்திற்கும் இந்த திருட்டிற்கும் நேரடி சம்பந்தம் இல்லை

உங்களது வங்கி கணக்கு விபரங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள் என பலமுறை வங்கியின் சார்பில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுக்கொண்டே இருந்தாலும் மிக நுட்பமான முறைகளில் பண திருட்டு நடந்துகொண்டு தான் இருக்கின்றது. இந்த பதிவில் நாம் பார்க்க இருப்பதும் அந்த வகையிலான ஒருவகை திருட்டு தான். இந்த திருட்டு Google Search ஐ பயன்படுத்தி நடந்திருப்பது தான் கவனிக்க வேண்டிய விசயம். நிச்சயமாக அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விசயம் இது, மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய பதிவு இது.

 

Online Fraud - Women lost her 1 lakh rupees
Online Fraud – Women lost her 1 lakh rupees

 

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கிழக்கு டெல்லி, சீமாபுரி பகுதியை சேர்ந்த  பெண் ஒருவர் தனது தனது வங்கி கணக்கில் தவறாக செய்யப்பட்ட பண பரிவர்த்தனை குறித்து “Customer Care” இல் தெரிவிக்க உதவி எண்ணை கூகுளில் சர்ச் (Google Search) செய்துள்ளார்.

 

அப்போது கூகுளில் காட்டிய எண்ணிற்கு கால் செய்து பேசியுள்ளார். அந்த எண்ணில் பேசியவர்களும் உண்மையான customer care இல் பேசுவதை போன்றே பேசியுள்ளனர். மேலும் பேசிய அவர்கள் பணத்தை திரும்ப பெற கார்டு விவரங்களை கேட்டுள்ளனர். பேசியவர்கள் வங்கி ஆட்கள் தானே என நம்பிய அந்த பெண்ணும் தன்னுடைய விவரங்களை கூறி பணம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார்.

அவர்கள் திருடர்கள் என்பதை அந்த பெண் தெரிந்துகொள்வதற்கு முன்பாகவே அவருடைய கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இதே போன்றதொரு திருட்டு தான் EPFO இல் இதற்க்கு முன்னர் நடந்தது நினைவிருக்கலாம்.


கூகுள் சர்ச் இல் போலியான எண் வந்தது எப்படி?

 

நமக்கு ஒரு கேள்வி இருந்தால் அதற்கான விடையை கூகுளில் போட்டு தேடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் விடை எப்படி வருகிறது? அது கட்டாயமாக உண்மையாக தான் இருக்கவேண்டுமா? என்பதை எல்லாம் நாம் சிந்திப்பதே இல்லை.

கூகுள் எவ்வாறு செயல்படுகிறது , சுந்தர் பிச்சை விளக்கம்

கூகுளில் நீங்கள் ஒரு விசயத்தை தேடினால், அது குறித்த தகவல் இணையத்தில் எங்கேனும் எவராலும் பதிவேற்றப்பட்டிருக்கிறதா என கூகுள் உங்களுக்காக தேடி பதிலை காண்பிக்கும். அந்த பதில் சரியானதா என்பதையெல்லாம் கூகுள் சோதிப்பது இல்லை. இதனை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

 


 

தற்போது நடந்த தவறில் கூகுளின் பங்கு என்னவென்றால், கூகுள் மேப் இல் யார் வேண்டுமானாலும் ஒரு கடையையோ  வங்கியையோ ஊரையோ எதனை வேண்டுமானாலும் சேர்க்க முடியும், அப்டேட் செய்யவும் முடியும். இதனை கூகுள் கொண்டுவந்ததற்கு மிக முக்கிய காரணம், அவரவர் அப்டேட் செய்ய முடிந்தால் எளிமையாக இருக்கும் என்பதனால் தான்.

 

ஆனால் இதனை குற்றவாளிகள் தவறு செய்ய பயன்படுத்திவிட்டனர். ஆமாம் அவர்கள் குறிப்பிட்ட அந்த வங்கியின் கஸ்டமர் கேர் எண் இதுதான் என அவர்களுடைய எண்ணை கொடுத்துவிட்டனர். இதுதான் இங்கு தவறு நடக்க மிக முக்கிய காரணம்.


இவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி?

 
புதிய புதிய வழிகளில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. முதலில் பிறருக்கு நடந்துள்ள குற்றங்களில் இருந்து சிலவற்றை நாம் அறிந்துகொண்டாலே நம்மால் ஓரளவிற்கேனும் அலர்ட்டாக இருக்க இயலும்.

கூகுளில் ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிறுவனத்தின் முகவரியை தேடுகிறீர்கள் எனில் முதலில் வரும் எண் தான் சரியானது என எண்ண வேண்டாம்.

குறிப்பிட்ட அந்த வங்கியின் ஒரிஜினல் இணையதளத்தில் சென்று விவரங்களை அறிந்துகொள்ளுங்கள், அவர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

கூகுள் சர்ச் ஏற்கனவே இருக்கின்ற விவரங்களை தான் காட்டும், அது சரியானதாக இருக்க வேண்டும் என்பதில்லை என்பதனை உணருங்கள்.

வங்கிகள் ஏற்கனவே எவரிடமும் வங்கி கணக்கு விவரங்களை பகிரவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. ஆகவே எவரிடமும் பகிராதீர்கள்.


TECH TAMILAN

இதுபோன்ற பதிவுகளை உங்களது WhatsApp இல் பெறுவதற்கு கிளிக் செய்து இணைந்திடுங்கள்

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular