Sunday, April 28, 2024
HomeGadgetsஅமேசான் கிண்டில் | Different types of amazon's kindle device compared by its...

அமேசான் கிண்டில் | Different types of amazon’s kindle device compared by its advantages

amazon kindle device அமேசான் கிண்டில் ஒப்பீடு

Features of Android Q OS

தொடர்ச்சியாக கணிணி மற்றும் செல்போன்களை பார்ப்பதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . நமக்கும் இவற்றில் படிப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும். ஆனால் அமேசான் கிண்டில் பாதிப்பை குறைக்கும்.

நமது தாத்தா பாட்டி மற்றும் அப்பா அம்மா காலத்தில் நாளிதழ் வாசிப்பும்  புத்தக வாசிப்பும் அதிகமாக இருந்தன . இதனால் புத்தகங்களை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய வர்த்தகம் நடைபெற்று வந்தது . ஆனால் நம் தலைமுறையில் புத்தகங்களை கடைகளுக்கு சென்று வாங்கி படிப்பது குறைந்துவருகிறது . இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் தொழில்நுட்ப முன்னேற்றதினால் கணினியிலும் செல்போன்களிலும் படிக்கின்ற பழக்கம் அதிகரித்து வருகின்றது .

ஆனால் தொடர்ச்சியாக கணிணி மற்றும் செல்போன்களை பார்ப்பதனால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள் . நமக்கும் இவற்றில் படிப்பது மிகவும் சிரமமானதாகவே இருக்கும் . இங்கு தான் அமேசான் நிறுவனத்தின் Kindle Device க்கான தேவை ஏற்படுகிறது .

Kindle Device எப்படி வேலை செய்கின்றது ?

அமேசானின் Kindle Device

Kindle ஒரு எலக்ட்ரானிக்ஸ் கருவி தான். பார்ப்பதற்கு Tab போன்று இருக்கும் இந்த கருவியும் பேட்டரி மூலம் தான் இயங்குகிறது , இணையத்தின் உதவியினாலேயே இயங்குகிறது . பிறகு என்ன வித்தியாசம் என்கிறீர்களா ? நிச்சயமாக இருக்கின்றது . படிக்கும் போது முற்றிலும் புத்தகத்தாளில் படிப்பது போன்ற ஒரு உணர்வினை Kindle இல் படிக்கும்போது பெற முடியும் . இதனால் கண்களுக்கு எந்தவித பாதிப்போ அல்லது தொந்தரவோ இருக்காது .

You can feel like a book when you read on Kindle Device

இதனை தவிர Amazon ஏற்கனவே ஆன்லைனில் புத்தக விற்பனையில்  ஈடுபட்டு கொண்டிருப்பதனால் Kindle கருவியை தானே உருவாக்கிட தொடங்கியது . எண்ணற்ற பல புத்தகங்களை மின்னணு முறையில் வைத்திருப்பதனால்  Kindle இல் எண்ணற்ற பல புத்தகங்களை டவுண்லோடு செய்து படிக்க முடியும் . பல புத்தகங்கள் இலவசமாகவும் கிடைக்கின்றன.

வேறு இணையதளங்களில் டவுன்லோட் செய்த pdf file போன்றவற்றையும் படிக்கலாம்

ஆயிரக்கணக்கான புத்தகங்களை ஒரே கருவிக்குள் அடக்கிவிட  முடியுமென்பதனால் புத்தகங்களை சுமந்துகொண்டு செல்ல வேண்டி இருக்காது.

Advantages of  kindle device and its advantages :

 அதிநவீன resolution இருப்பதனால் மிகதெளிவாக படிக்க முடியும்

ஒருமுறை சார்ஜ் போட்டாலே வாரக்கணக்கில் படிக்க முடியும் , ஆகவே தொலைதூர பயணங்களில் படிப்பதில் சிக்கல் ஏற்படாது .

மேலும் Vocabulary, Dictionary போன்ற பல சிறப்பம்சங்கள் உங்களது மொழித்திறனை அதிகரிக்க உதவும்

 

All-new Kindle [From: ₹ 7,999.00]


Screen size : 6″ glare-free

Storage : 4 GB

Resolution : 167 ppi

Built-in Front Light : Yes – 4 LEDs

Connectivity : Wi-Fi

All-new Kindle Paperwhite [From: ₹ 12,999.00]

Screen size : 6″ glare-free

Storage : 8 GB or 32 GB

Resolution : 300 ppi

Built-in Front Light : Yes – 5 LEDs

Connectivity : Wi-Fi or Wi-Fi + Free 4G

All-new Kindle Oasis [From: ₹ 24,999.00]

Screen size : 7″ glare-free

Storage : 8 GB or 32 GB

Resolution : 300 ppi

Built-in Front Light : Yes – 25 LEDs

Connectivity : Wi-Fi or Wi-Fi + Free 4G

எந்த கிண்டில் டிவைஸை வாங்கலாம்?

என்னைப் பொறுத்தவரைக்கும் ஆரம்ப விலையில் கிடைக்கக்கூடிய All-new Kindle [From: ₹ 7,999.00] ஐ வாங்கலாம். இதற்க்கு முன்னர் இருந்த ஆரம்ப விலை கிண்டில் 4 ஆயிரம் ரூபாய்க்கே கிடைத்தது ஆனால் அதில் Built-in Front Light என்ற ஆப்சன் இருக்காது. அந்த ஆப்சன் இல்லாவிடில் நீங்கள் வெளிச்சத்திற்கு தனியே ஒரு லைட் வேண்டும். All-new Kindle இல் Built-in Front Light என்ற ஆப்சன் இருக்கிறது. அதோடு  சேமிப்புத்திறன் 4ஜிபி இருக்கிறது. இதில் நீங்கள் சில ஆயிரம் புத்தகங்களை சேமித்து வைத்துக்கொள்ள இயலும். படித்து முடித்துவிட்டால் பழையதை நீக்கிவிட்டு புதியதை ஏற்றிக்கொள்ள முடியும். ஆகவே இதுவே முதல் முறையாக கிண்டில் வாங்க நினைப்பவர்களுக்கு சரியானதாக இருக்கும்.

Resolution : 167 ppi & Resolution : 300 ppi  என்ன வித்தியாசம்? 

 

ppi என்பது Pixels Per Inch. எழுத்தின் துல்லியத்தன்மையை குறிப்பிடும் அளவீடு முறைதான் இது. உங்களது கண்கள் நன்றாக இருந்தால் குறைந்த விலை கிண்டில் போதும் என்றால் Resolution : 167 ppi  போதுமானது.

கிண்டில் வாங்கிவிட்டால் போதுமா அனைத்து புத்தகங்களையும் இலவசமாக படிக்க முடியுமா?

 

அப்படி இல்லை. அமேசான் பல ஆயிரக்கணக்காண புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள அனுமதிக்கிறது. இதற்கு கிண்டில் தான் வேண்டும் என்பதில்லை. உங்களது மொபைலில் கிண்டில் ஆப்பை டவுன்லோட் செய்துகூட தரவிறக்கிக்கொள்ள முடியும்.

நீங்கள் அமேசானில் புத்தகங்களில் விலைகளை பாருங்கள். Paperpack அதாவது உண்மையான புத்தகம் அதன் விலை 200 எனில் kindle விலை ரூ 10 அல்லது ரூ 20 என்றுதான் இருக்கும். Kindle வடிவ புத்தகத்தின் விலை மிக மிக குறைவாக இருக்கும். அதேபோல நீங்கள் எந்த கருவியில் எப்போது வேண்டுமானாலும் login செய்து நீங்கள் வாங்கிய புத்தகங்களை படித்துக்கொள்ள முடியும்.

Kindle Unlimited என்ற ஒரு ஆப்சன் உண்டு. நீங்கள் மாதம் ரூ 169 ரூபாயை செலுத்திட வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் Kindle வடிவ புத்தகங்கள் எத்தனை வேண்டுமானாலும் படிக்கலாம். ஒரே நேரத்தில் 10 புத்தகங்களை டவுன்லோட் செய்துகொள்ள முடியும். பழையதை நீக்கிவிட்டு புதியதை பெற்றுக்கொள்ள முடியும்.

தற்போது பல்வேறு இணையதளங்களில் லட்சக்கணக்கான புத்தகங்களை இலவசமாக தரவிறக்கிக்கொள்ள முடியும். அவற்றை உங்களது கிண்டில் கருவியில் ஏற்றி படித்துக்கொள்ள முடியும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular