கம்ப்யூட்டர் நவீன சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. இன்று நீங்கள் எந்தவொரு சிறிய அலுவலகத்திற்கோ அல்லது வணிக நிறுவனத்திற்கோ அல்லது வீட்டிற்கோ சென்றால் அங்கே ஒரு கம்ப்யூட்டர் நிச்சயமாக இருக்கும். நாம் கொடுக்கும் தரவுகளை ஒருங்கிணைத்து பல வேலைகளை அவை சுலபமாக செய்கின்றன. மிகப்பெரிய கணக்கீடுகள் துவங்கி, மென்பொருள்களை இயக்கி பல வேலைகளை சுலபமாக செய்திட உதவுகின்றன. இன்றைய காலகட்டத்தில் கம்ப்யூட்டர் என்பது அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டது. ஆகவே, கணினி பற்றி நீங்கள் தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்று. இந்தப்பதிவில் கணினி என்றால் என்ன? கணினி எப்படி செயல்படுகிறது? என்பவை உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில்களை அறிந்துகொள்ளலாம்.
கம்ப்யூட்டர் என்றால் என்ன? [Definition of a Computer]
A computer is an electronic device that can process, store, and retrieve data. It works by taking input, processing it, and producing output based on the instructions it has been given. Computers can perform a wide range of tasks, from simple calculations to complex simulations and analyses. They are used for everything from personal productivity to scientific research, and they have become an essential tool in modern society.
கணினி என்பது ஒரு மின்னணு சாதனமாகும். இதனைக்கொண்டு தகவல்களை புராஸஸ் செய்திட, சேமித்து வைத்திட மற்றும் சேமித்த தகவலை மீட்டெடுக்க முடியும். நாம் கொடுக்கும் தகவல்களை ஏற்றுக்கொண்டு, நாம் கொடுக்கும் கட்டளைக்கு ஏற்ப அதனை புராஸஸ் செய்து தரும் ஒரு மின்னணு இயந்திரம் தான் கம்ப்யூட்டர். கணிணியைக்கொண்டு மிகச்சிறிய கணக்குகள் துவங்கி மிகப்பெரிய கணக்குகள் வரைக்கும் செய்திட முடியும். போட்டோஷாப் போன்ற மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து தேவையான வேலையை செய்திட வைக்க முடியும், தரவுகளை சேமித்து வைக்க முடியும், தரவுகளை பரிமாற்றம் செய்துகொள்ள முடியும், இப்படி ஏகப்பட்ட வேலைகளை கணிணியைக்கொண்டு செய்து முடிக்க முடியும். ஆகவே தான் கணினி ஒரு இன்றியமையாத கருவியாக இருந்து வருகிறது.
கணினி வகைகள் [Types of computers]
பயன்படும் விதத்தை பொறுத்து கணினிகளை பல வகைகளாக பிரிக்கலாம். இங்கே, சில குறிப்பிட்ட கணினி வகைகளை பார்க்கலாம்.
- Personal computers (PCs) : இவை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர். இவை தனி நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட கம்ப்யூட்டர்.
- Laptops : செல்லும் இடங்களுக்கு தகுந்தவாறு வடிவமைப்பு செய்யப்பட்டுள்ள கணினி.
- Tablets : எளிதாக கையடக்க அளவில் உள்ள கணினி. இதனைக்கொண்டு இன்டர்நெட் உபயோகம் செய்யலாம், விளையாடலாம், மற்றும் பல வேலைகளை செய்யலாம்.
- Smartphones : நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் கூட ஒருவகையான கணினி தான். இந்த கையடக்க ஸ்மார்ட்போன் மூலமாக அழைப்புகளை மேற்கொள்ள முடியும், கணினியில் செய்வது போன்றே பல வேலைகளை செய்துகொள்ள முடியும்.
5. Servers: இவை சக்தி வாய்ந்த கணினி. இவை கம்ப்யூட்டர் நெட்ஒர்க்களுக்கு சேவை வழங்கும் விதத்தில் வடிமைக்கப்பட்டு இருக்கும்.
கணினியின் பாகங்கள் [Parts of a Computer]
மனிதர்களின் பெரும்பகுதி வேலையை எளிமையாக்கிய ஓர் மின்னணு சாதனம் கணினி. அது இயங்குவதற்கு பல பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமான ஒன்று. முக்கியமாக கணினியின் பாகங்களை மூன்றாக பிரிக்கலாம். அவை முறையே, ஹார்டுவேர் பாகங்கள் [hardware components], வெளிப்புற உபகரணங்கள் [peripheral devices], சாப்ட்வேர் உபகரணங்கள் [software components].
- ஹார்டுவேர் பாகங்கள் [hardware components]
Central Processing Unit (CPU): கணினியின் மூளை “CPU” தான். தகவல்களை ஒருங்கிணைத்து கட்டளைக்கு ஏற்றவாறு அவற்றை புராஸஸ் செய்வது “CPU” தான்.
Random Access Memory (RAM): இது கணினியில் இருக்கும் short-term மெமரி யூனிட். இங்கே தான் தகவல்கள் தற்காலிகமாக சேமிக்கப்பட்டு அவை புராஸஸ் செய்யப்படும்.
Motherboard: கணினியின் அனைத்து பாகங்களையும் இணைப்பது இதுதான்.
Storage devices: தகவல்களை சேமிக்க உதவும் அமைப்பு இது.
Power supply: கணினி இயங்குவதற்கு தேவையான மின்சாரத்தை வழங்குவது இதன் வேலை.
- வெளிப்புற உபகரணங்கள் [peripheral devices]
இவை கணினியோடு இணைக்கப்பட்டிருக்கும் சாதனங்கள். இவற்றின் மூலமாக கணினிக்கு உள்ளீடுகளை தர முடியும்.
Keyboard : இதன் மூலமாக டைப் செய்து உள்ளீடுகளை கொடுக்க முடியும்.
Mouse: cursor ஐ இதன் மூலமாக நகர்த்தி ஸ்கிரீனில் தேவையானதை செலெக்ட் செய்திட முடியும்.
Monitor: இதன் மூலமாக Output ஐ திரையில் பார்க்க முடியும். கணினியில் என்ன நடக்கிறது என்பதை இதன் மூலமாக அறிய முடியும்.
Printer: இதனைக்கொண்டு கணினியில் இருக்கும் டாக்குமெண்ட் உள்ளிட்டவற்றை பிரிண்ட் எடுக்க முடியும்.
- சாப்ட்வேர் உபகரணங்கள் [software components]
கணினியில் இறங்கும் மென்பொருள் மற்றும் அப்ளிகேஷன் அனைத்தும் இந்த வகையில் வரும்.
Operating system: இதுதான் கணினி செயல்படுவதற்கு அடிப்படையான ஒரு புரோகிராம். நாம் கணினியை பயன்படுத்த ஒரு வசதியை இது ஏற்படுத்தி தருகிறது.
Applications : ஒரு குறிப்பிட்ட பணியை செய்வதற்கு பயன்படும் புரோகிராம்கள் இவை.
Read More : கணினியின் முக்கிய பாகங்கள்
கணினிகளின் பயன்கள்
கணினிகள் நவீன சமுதாயத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன. அவற்றின் பயன்பாடுகள் பரந்த அளவில் உள்ளன. இந்த பகுதியில், கணினிகளின் சில முக்கிய பயன்பாடுகளை பார்க்கலாம்.
1. வணிக பயன்பாடுகள்
ஒரு வணிகத்திற்கு கணக்கு என்பது மிகவும் முக்கியம். இதனை மிகவும் எளிமையாக செய்வதற்கு கணினி பெரிய அளவில் உதவுகிறது. வரவு, செலவு, ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தகவல் அனைத்தையும் நிர்வகிக்க கணினி பெரிய அளவில் உதவுகிறது. இதுபோன்று பல வணிக பயன்பாடுகளுக்கு கணினி பெரிய அளவில் உதவுகிறது.
2. கல்வி பயன்பாடுகள்
கணினிகள் கல்வித்துறையில் ஆராய்ச்சிக்காகவும் கற்றலுக்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மாணவர்கள் தகவல்களை பெறுவதற்கும் ஆராய்ச்சி நடத்துவதற்கும் முன்னெப்போதையும் விட கணினி உதவுகிறது. இணையத்தின் மூலமாக கணினியின் உதவியால் கணிதம் மற்றும் அறிவியல் துவங்கி மொழி மற்றும் இசை வரைக்கும் எதனை வேண்டுமானாலும் கணிணியைக்கொண்டு கற்றுக்கொள்ள முடியும்.
3. வேறு சில பயன்பாடுகள்
1. தொலைத்தொடர்பு மற்றும் பொழுதுபோக்கு போன்ற விசயங்களில் கணினி பெரிதும் உதவுகிறது.
2. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடங்களை கணினி மூலமாக பயன்படுத்த கணினி உதவுகிறது.
3. எழுதுதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் இசை தயாரிப்பு போன்ற படைப்பு முயற்சிகளுக்கும் கணினிகள் பயன்படுகிறது.
4. புதிய புரோகிராம்களை எழுத, இயக்க கணினி உதவுகிறது.
5. இணையதள வடிவமைப்பு, அப்ளிகேஷன் வடிமைப்பு போன்றவற்றை செய்திட கணினி உதவுகிறது.
6. விளையாடுவதற்கு கணினி பயன்படுகிறது.
கணினியின் எதிர்காலம் [Future of Computers]
ஒவ்வொரு காலகட்டத்திலும் கணினி மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. அதன் பயன்பாடும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் கணினி எப்படி இருக்கலாம், என்னென்ன மாற்றங்கள் வரலாம் என்பதை இங்கே பார்க்கலாம்.
1. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள்
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது கம்ப்யூட்டிங் உலகில் மிகவும் அற்புதமான மற்றும் உலகையே மாற்றக்கூடிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். தானியங்கி வாகனங்கள், தானியங்கி மருத்துவ சிகிச்சை என அதன் பயன்பாடு நீள்கிறது.
மற்றொரு வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குவாண்டம் கம்ப்யூட்டிங். இது சாதாரண கணினிகளை விட மிக வேகமாக சிக்கலான கணக்குகளை தீர்க்கும் திறனைக் கொண்டுள்ளது.
2. முன்னேற்றங்களுக்கான சாத்தியங்கள்
கணினி பல்வேறு துறைகளில் மாற்றங்களை ஏற்படுத்திட பெரிய அளவில் உதவுகிறது. கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் இது பல வேலைகளை எளிமையாக்கியுள்ளது. உதாரணத்திற்கு, ஆடை வடிவமைப்பு துறையில் பல சிறந்த வடிவமைப்புகளை உருவாக்கவும், கட்டிட துறையில் முன்கூட்டியே கட்டிட வடிவமைப்புகளை உருவாக்கவும், மென்பொருள் துறையில் பல சிறந்த மென்பொருள்களை உருவாக்கவும் கணினிகள் உதவுகின்றன.