Basic parts of computer | கணினியின் முக்கிய பாகங்கள்

கம்ப்யூட்டர் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமாக வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் அது எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கும். அப்படிப்பட்ட ஆர்வத்தோடு நீங்கள் இங்கே வந்திருந்தால் இந்தக்கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். Motherboard, CPU துவங்கி RAM, Keyboard வரைக்கும் ஒவ்வொரு கணினி பாகம் குறித்தும் இங்கே பார்க்கலாம். இப்போது நாம் பயன்படுத்தும் கணினி மிகவும் மேம்பட்டதாக இருந்தாலும் கூட, அடிப்படை கணினி பாகங்களை அறிந்துகொண்டால் கணினி குறித்து மிகப்பெரிய புரிதல் ஏற்படும்.

கணினியின் முக்கிய பாகங்கள்

கணினி பல மின்னணு கருவிகள் இணைந்து உருவாக்கப்பட்ட இயந்திரம். அப்படிப்பட்ட சில முக்கியமான சில பாகங்களை பற்றி அறியலாம்.

Input Unit – தகவலை உள்ளீடு செய்வதற்கான கருவிகள் Input Devices எனப்படும். உதாரணத்திற்கு கீபோர்ட், மவுஸ்,போன்றவற்றை கூறலாம்.

Output Unit – கணினி தன்னிடம் இருக்கும் தகவலை பயனாளர்களுக்கு கொடுக்க பயன்படுகின்ற பாகங்கள் Output Devices எனப்படும். உதாரணத்திற்கு திரை, பிரிண்டர் போன்றவற்றை கூறலாம்.

Control Unit : கணினியில் நடக்க கூடிய அனைத்து பணிகளையும் கட்டுப்படுத்துகிறது அமைப்பு. Input மற்றும் output உள்ளிட்ட அனைத்து பாகங்களும் இதனுடன் தான் இணைந்திருக்கும்.

Arithmetic Logic Unit : கணினியின் மிக முக்கியமான பகுதி இதுதான். Arithmetic மற்றும் logical functions அனைத்தும் இங்குதான் நடைபெறும்.

Memory : தகவல்களை சேகரித்து வைக்கும் அமைப்பு.

CPU : கணினியில் அதிகப்படியான பணிகளை செய்யும் அமைப்பான CPU , தன்னிடம் இருக்கும் Instructions களை பயன்படுத்தி Input கருவிகளில் இருந்து பெறக்கூடிய தகவல்களை Process செய்து output கருவிகளுக்கு அனுப்புகிற பணியினை மேற்கொள்ளும்.

Central Processing Unit (CPU)

CPU என்பதற்கான விரிவாக்கம் Central Processing Unit. இதுதான் கணினியின் மூளை போன்றதொரு அமைப்பு. கட்டளைகளை செயல்படுத்துவது, கணக்கீடுகள் நிகழ்த்துவது போன்வற்றின் மூலமாக பல வேலைகளை CPU செய்து முடிக்கிறது. CPU இன்னும் பல அமைப்புகளை கொண்டுள்ளது. control unit, arithmetic logic unit மற்றும் registers போன்றவை இதன் முக்கியமான அங்கங்கள். control unit ஆனது instructions ஐ கணினியின் மெமரியில் இருந்து பெற்று அதனை decode செய்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து வேலைகளை செய்து முடிகிறது.

ஒரு CPU வை நீங்கள் தேர்வு செய்திடும் போது clock speed என்பதை கவனிக்க வேண்டும். clock speed ஐ gigahertz (GHz) என்ற அளவீடால் அளவிடப்படுகிறது. இது அதிகமாக இருந்தால் சிபியு வேகமாக இருக்கும். Modern CPU வில் dual-core, quad-core, or even octa-core processors இருக்கின்றன.

Random Access Memory (RAM)

RAM என்பது ஒரு கணினிக்கு மிகவும் முக்கியமான அமைப்பு. கணினிக்கு வேகமாக தேவைப்படும் தகவல் அனைத்தும் RAM மெமரியில் தான் சேமிக்கப்பட்டு இருக்கும். ஆனால் இதில் சேமிக்கப்பட்டு இருக்கும் தகவல் அனைத்தும் தற்காலிகமாக மட்டுமே சேமிக்கப்பட்டு இருக்கும். இதனால் தான் இதை volatile memory என்கிறார்கள். RAM அதிகமாக இருந்தால் கணினியின் வேகமும் அதிகமாக இருக்கும்.

RAM ஐ GB ஆல் அளவிட வேண்டும். எவ்வளவு தரவுகளை இதனால் சேமித்து வைக்க முடியும் என்பது இதன் மூலமாக நம்மால் அறிந்துகொள்ள முடியும். ஒரே நேரத்தில் பல்வேறு ஆப்களை பயன்படுத்த நினைக்கிறவர்கள் RAM அதிகமாக பயன்படுத்த வேண்டும்.

பலவிதமான RAM தற்போது உள்ளன, DDR3, DDR4, மற்றும் DDR5. நீங்கள் எதனை தேர்வு செய்திட வேண்டும் என்பது உங்களது மதர்போர்டு மற்றும் உங்களுக்கு எவ்வளவு வேகம் தேவை என்பதை பொறுத்தது.

Hard Disk Drive (HDD) மற்றும் Solid State Drive (SSD)

Hard Disk Drive (HDD) மற்றும் Solid State Drive (SSD) ஆகியவை இரண்டுமே கணினியில் பயன்படுத்தப்படும் ஸ்டோரேஜ் பாகங்கள் தான். ஆனால், இவை இரண்டும் டெக்னாலஜி மற்றும் விலை ஆகியவற்றின் அடிப்படையில் மாறுபடும்.

HDD என்பவை பழமையான ஸ்டோரேஜ் கருவி. அதிகமாக ஸ்டோரேஜ் வசதியை வழங்கும் இவை SSD ஐ விடவும் விலை குறைவானவை.

SSD என்பவை flash memory அடிப்படையில் தகவல்களை சேமிக்கும். HDD ஐ விடவும் இது விலை அதிகமாக இருக்கும். அதேபோல, வேகமும் அதிகமாக இருக்கும்.

Input and output devices

Input மற்றும் output devices என்பவை பயனாளருக்கும் கணினிக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்த முக்கியமானது. Input devices மூலமாக கணினிக்கு தகவல்களை பயனாளர் கொடுக்க முடியும். output devices ஐ பயன்படுத்தி கணினி ரிசல்ட் ஐ பயனாளருக்கு தெரிவிக்க முடியும்.

Input devices – கம்ப்யூட்டர் கீ போர்டு, மவுஸ், தொடுதிரை, ஸ்கேனர் போன்றவற்றை கூறலாம். இந்தக்கருவிகளை பயன்படுத்தி ஒருவரால் கணினிக்கு கட்டளைகளை அல்லது தகவல்களை வழங்க முடியும்.

output devices – கணினி உங்களுக்கு தெரிவிக்க விரும்பும் தகவல்களை உங்களுக்கு கடத்திட சில கருவிகள் இருக்கும். உதாரணத்திற்கு, டிஸ்பிளே ஐ சொல்லலாம். ஒரு விசயத்தை செய்து முடித்த பிறகு அதில் தான் உங்களுக்கு தகவல் காண்பிக்கப்படும். இன்னும் பிரிண்டர், ஸ்பீக்கர் இவையெல்லாம் கூட output devices தான்.

Motherboard

ஒரு கணினியில் இருக்கும் அனைத்து கருவிகளையும் இணைப்பது Motherboard தான். இதில் இருக்கும் input/output ports மூலமாக input மற்றும் output கருவிகள் அனைத்தையும் இணைக்க முடியும். பல விலைகளில் பல்வேறு வசதிகள் அடங்கிய Motherboard சந்தையில் கிடைக்கின்றன. உங்களது தேவைக்கு ஏற்றது மாதிரியான Motherboard ஐ நீங்கள் தேர்வு செய்திட வேண்டும்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN