CPU என்றால் என்ன? CPU In Tamil

இன்று சிறுவர்கள் முதல் பெரியவங்கள் வரை கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். அது Desktop Computer அல்லது Laptop ஆக இருக்கலாம். ஆனால், அனைத்திலும் நடக்கும் செயல்முறைகள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அன்றாட வாழ்வில் நம்மோடு ஒன்றிப்போய் இருக்கும் கம்ப்யூட்டர் நமக்கு பல்வேறு விதங்களில் உதவிகரமாக இருக்கிறது. அப்படிப்பட்ட, கம்ப்யூட்டர் பற்றி [What is CPU in Tamil?] நாம் அறிந்து வைத்திருப்பது மிகவும் நல்லது.

எனக்கு எப்போதும் அந்த ஆர்வம் உண்டு. நிச்சயமாக அப்படிப்பட்ட ஆர்வம் உங்களுக்கும் இருக்கும் என நம்புகிறேன். அப்படிப்பட்ட ஆர்வம் கொண்டவர்களுக்கு கம்ப்யூட்டர் பாகங்கள் குறித்து நான் தமிழில் எழுதும் கட்டுரைகள் உதவிகரமாக இருக்கும் என நம்புகிறேன்.

மனிதனுக்கு எப்படி மூளை மிக முக்கியமான அமைப்போ அதனைப் போலவே கணினிக்கு மிக முக்கிய அமைப்பு CPU. கணினி எப்படி வேலை செய்கிறது என்பதை அறிய ஒவ்வொரு கருவியும் எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அதிலும் குறிப்பாக, கணினியின் மிக முக்கிய அமைப்பான CPU எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம்.

இந்தப்பதிவில், CPU எப்படி வேலை செய்கிறது என்பதை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.[CPU Meaning In Tamil]

CPU என்றால் என்ன?

உங்களிடம் என்ற கேள்வியை யாரேனும் கேட்டாலோ அல்லது உங்களுக்கே அது இருந்தாலோ உங்களுக்கான பதில் இதுதான். CPU என்பதன் ஆங்கில விரிவாக்கம் central processing unit, சிலர் இதனை central processor எனவும் அழைப்பதுண்டு. மனிதனுக்கு எப்படி மூளை மிக முக்கியமான அமைப்போ அதனை போலவே கணினிக்கு மிக முக்கிய அமைப்பு CPU.

கணினியில் அதிகப்படியான பணிகளை செய்யும் அமைப்பான CPU , தன்னிடம் இருக்கும் Instructions களை பயன்படுத்தி Input கருவிகளில் இருந்து பெறக்கூடிய தகவல்களை Process செய்து output கருவிகளுக்கு அனுப்புகிற பணியினை மேற்கொள்ளும்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், தனக்கு இருக்கும் அனுபவங்களை வைத்துக்கொண்டு எப்படி மூளை ஒவ்வொரு விசயத்திலும் செயலாற்றுகின்றதோ அதனைப்போலவே கணினிக்கு சிபியு செயலாற்றுகிறது.

Components of a CPU

எப்படி மனித மூளை வேலை செய்திட, அதற்கு தேவையான தரவுகளை கண்கள், காதுகள், இப்படி பல்வேறு உறுப்புகளில் இருந்து பெற்றுக்கொள்கின்றனவோ அதனைப்போலவே CPU வும் பல்வேறு பாகங்களில் இருந்து பெற்றுக்கொள்ளும்.

அப்படி CPU வில் பல பாகங்கள் இருக்கின்றன.

Input Devices
Arithmetic Logic Unit (ALU)
Control Unit
Storage
Output Devices

ஒவ்வொன்று குறித்தும் விரிவாக இனிவரும் கட்டுரைகளில் பார்க்கலாம். இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.

CPU Main Diagram
CPU Main Diagram

Input Devices – நீங்கள் கொடுக்கும் உள்ளீடுகள் (input) ஐ இந்த கருவிகளில் இருந்து தான் பெறலாம்.

Arithmetic Logic Unit (ALU) இன் முக்கிய பணி Arithmetic மற்றும் Logical பணிகளை மேற்கொள்ளுவது தான்.

Control Unit இன் முக்கிய பணி சேமிக்கபட்டு இருக்கும் வழிமுறைகளை (Instructions) எடுத்து இயக்குவது தான்.

Storage : இங்கே தான் தேவையான தரவுகள் அனைத்தும் சேமிக்கப்பட்டு இருக்கும். தேவைப்படும் நேரங்களில் இங்கிருந்து தகவல்களை CPU பெற்றுக்கொள்ளும்.

Output Devices : இந்த கருவிகள் மூலமாகத்தான் முடிவுகள் உங்களுக்கு காண்பிக்கப்படும்.

உதாரணத்திற்கு, நீங்கள் 1+1 என்ற கூட்டலை மேற்கொள்ள நினைக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். கீபோர்டு [Input Devices] மூலமாக நீங்கள் 1+1 என கொடுக்க வேண்டும். CPU தனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொண்டு கூட்டலை மேற்கொள்ளும். பிறகு திரையில் [Output Devices] உங்களுக்கு பதிலை (2) என காட்டும்.

CPU முறையாக இயங்கவேண்டும் எனில் System Clock ,memory, secondary storage, and data and address buses போன்றவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

எப்படி வேலை செய்கிறது? Functions of a CPU

கணினியில் இருக்கக்கூடிய Input devices களில் இருந்து தகவல்களை பெற்று மெமரியில் இருக்கக்கூடிய Instructions க்கு ஏற்றபடி Process செய்து Output கருவிகளின் மூலமாக result ஐ கொடுப்பது தான் CPU இன் முக்கிய பணி . மேலும் CPU ஆனது தனது internal bus இன் மூலமாக கணினியின் Memory Unit களுடன் இணைந்து தகவல் பரிமாற்றம் செய்து கொள்கின்றது.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

Read More :

What is computer? | கணினி என்றால் என்ன?
Basic parts of computer | கணினியின் முக்கிய பாகங்கள்

TECH TAMILAN