Operating System என்றால் என்ன? Operating System In Tamil

கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கின்ற அமைப்புதான் இயங்குதளம். மார்க்கெட்டில் பலவிதமான Operating System இருக்கிறது. இந்தப்பதிவில் பலவிதமான Operating System குறித்து பார்க்கலாம்.

இயங்குதளம் என்பது ஒரு மென்பொருள் தான், கணினியில் இருக்கக்கூடிய வன்பொருள்கள் (Hardware) மற்றும் இன்ஸ்டால் செய்யக்கூடிய மென்பொருள்கள் (Software) ஆகியவற்றினை ஒருங்கிணைத்து செயல்பட வைக்கின்ற மிகப்பெரிய வேலையை செய்கிறது.

பெருவாரியாக “OS” அல்லது ஆங்கிலத்தில் “Operating System” என அழைக்கப்படும் இயங்குதளம் தான் எந்தவொரு கணினியிலும் இருக்கக்கூடிய அடிப்படையான புரோக்ராம் (Program). ஒரு கணினி அல்லது மொபைல் இயங்குவதற்கு “Operating System Program” தான் அடிப்படை. இன்ஸ்டால் செய்திடக்கூடிய மற்ற அப்ளிகேசன்கள் மற்றும் பல புரோக்ராம்கள் இயங்குவதற்கு “Operating System Program” அவசியம்.

இயங்குதளத்தின் முக்கிய பணி | Basic Functions of Operating System in Tamil

இயங்குதளம்

>> கணினியின் input கருவிகளில் வரக்கூடிய தரவுகளை பெறுவது (கீ போர்டு , மவுஸ்)

>> Output கருவிகளுக்கு தரவுகளை அனுப்புவது (திரை,பிரிண்டர்)

>> கணினியுடன் இணைத்திருக்கும் பிரிண்டர் உள்ளிட்ட கருவிகளை கட்டுப்படுத்துவது

>> Storage drive களை தொடர்ந்து கண்காணிப்பது

>> சரியான user தான் கணினியை இயக்குகிறாரா (Login) போன்ற பாதுகாப்பினை வழங்குவது

போன்ற பல முக்கிய பணிகளை செய்வது இயங்குதளத்தின் வேலை.

விண்டோஸ் (Windows Operating System)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Windows இயங்குதளமானது உலக அளவில் முன்னனி இயங்குதளமாக திகழ்கிறது. வீடு மற்றும் அலுவலகங்களில் பெரும்பாலும் Windows இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது. கிட்டத்தட்ட 82.88% desktop computer களில் Windows இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது.

மேக் (Mac Operating System)

Mac இயங்குதளமானது ஆப்பிள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள இயங்குதளம். அலுவலக மற்றும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்ற கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. இருந்தாலும் 12.52% அளவுக்கே இதன் பயன்பாடு இருக்கிறது.

லினக்ஸ் (Linux Operating System)

லினக்ஸ் இயங்குதளமானது முற்றிலும் இலவசமான இயங்குதளம் (free and open-source software operating systems) . தற்போதைய நிலையில் 1.71% அளவிற்கான கணினிகளில் மட்டுமே லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்தப்படுகிறது.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN