Tuesday, December 3, 2024
HomeInsuranceTerm Insurance என்றால் என்ன? இந்தியாவில் Best Term Insurance எது?

Term Insurance என்றால் என்ன? இந்தியாவில் Best Term Insurance எது?

Affordable protection for your loved ones

Term Insurance என்பது Life Insurance பாலிசிகளின் வகைகளில் ஒன்று. இதனை நீங்கள் வாங்கினால், எதிர்பாராமல் இறக்க நேர்ந்தால் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு பொருளாதார பாதுகாப்பை இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும். மற்ற இன்சூரன்ஸ் பாலிசிகளை போல அல்லாமல் term insurance பாலிசியில் உங்களுக்கு எந்தவித சேமிப்பு பலனும் உங்களுக்கு கிடைக்காது. இந்தப்பதிவில், Term Insurance In Tamil பற்றி விரிவாக பார்க்கலாம்.

Term Insurance என்றால் என்ன? Term Insurance In Tamil

Term Insurance என்பது முற்றிலும் பொருளாதார பாதுகாப்பிற்கான பாலிசி. Term Insurance பாலிசி எடுத்து இருக்கும் நபர் பாலிசி காலத்தில் எதிர்பாராத விதமாக இறந்து போனால் அவர் பரிந்துரை செய்திருக்கும் நபர்களுக்கு [nominee] மொத்த தொகையும் [entire term insurance amount (sum assured)] வழங்கப்படும். 

உதாரணத்திற்கு, நீங்கள் pnb metlife term insurance அல்லது hdfc term insurance எடுத்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம். பாலிசியின் படி, அடுத்த 40 ஆண்டுகளுக்கு நீங்கள் 9378 ரூபாய் செலுத்த வேண்டும். அப்படி நீங்கள் செலுத்தி வந்தால், இடையிலேயே நீங்கள் இறக்கும் பட்சத்தில் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும். இதனால் உங்களையே வருமானத்திற்காக நம்பி இருக்கும் குடும்பத்திற்கு உங்களது திடீர் இறப்பினால் பெரிய பொருளாதார பாதிப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும். 

ஒருவேளை 40 ஆண்டுகள் பிரீமியம் காலத்தில் உங்களுக்கு எதுவும் நடக்கவில்லை என்றால் நீங்கள் எந்தவித பலனையும் term insurance நிறுவனத்திடம் இருந்து பெற முடியாது.

Benefits of Term Life Insurance

1. சிறிய அளவில் பிரீமியம் தொகையினை செலுத்துவதன் மூலமாக கோடிகளில் உங்களது குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை வழங்கிட Term Life Insurance உதவும். 

2. Section 80C of the Income Tax Act, 1961 சட்டத்தின்படி, நீங்கள் Term Life Insurance க்காக செலுத்துகிற பிரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்கு பெற முடியும். 

3. நீங்கள் மிகப்பெரிய அளவில் கடன் அல்லது வீட்டுக்கடன் உள்ளிட்டவற்றை வாங்கி இருந்தால் உங்களது திடீர் இறப்பின்போது உங்களது குடும்பம் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ளும். இதில் இருந்து உங்களது குடும்பத்தை காக்க இந்த டெர்ம் இன்சூரன்ஸ் உதவும்.

Best term insurance policy in india

நீங்கள் term insurance policy வாங்க வேண்டும் என முடிவு செய்துவிட்டால் சரியான term insurance policy யை வாங்க வேண்டியது அவசியம். இந்தியாவில் term insurance policy வழங்கும் பல நல்ல இன்சூரன்ஸ் கம்பெனிகள் இருக்கின்றன. உங்களுக்கு பொருத்தமான ஒன்றினை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

ICICI Prudential iProtect Smart

HDFC Life Click 2 Protect Super

Max Life Smart Secure Plus

TATA AIA SRS Vitality Protect

Bajaj Allianz eTouch Online Term Plan

PNB Metlife Mera Term Plan Plus

பொதுவாகவே, அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களிலும் பின்வரும் நன்மைகள் அடங்கி இருக்கும். 

  • குறைவான பிரீமியம் தொகையில் அதிக கவரேஜ் 
  • வெவ்வேறு விதமான பிரீமியம் கட்டண முறைகள்

Tips for choosing the best term insurance policy in India

இந்தியாவில் பல்வேறு சிறந்த term insurance பாலிசிகள் இருக்கின்றன. ஆனால், உங்களுக்கு ஏற்ற ஒரு பாலிசியை நீங்கள் தேர்வு செய்துகொள்வது அவசியம். நீங்கள் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விசயங்கள் உங்களுக்காக, 

உங்கள் பொருளாதார தேவை : திடீரென நீங்கள் இறந்துபோனால் உங்களது குடும்பத்திற்கு எவ்வளவு பொருளாதார தேவை இருக்கும் என்பதை நீங்கள் அறிந்துகொண்டு அதற்கு ஏற்ற ஒரு பாலிசியை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

ஒப்பீடு செய்துகொள்ளுங்கள் : பல நிறுவனங்கள் பல term insurance பாலிசிகளை வழங்குகின்றன. ஆனால், அவை பிரீமியம் தொகை, விதிமுறைகள், பிரீமியம் கால அளவு என பல விதங்களில் மாறுபடும். உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளுங்கள். 

நன்றாக விதிமுறைகளை படியுங்கள் : இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும் போது விதிமுறைகளை சரியாக படித்து புரிந்துகொள்வது மிகவும் அவசியம். 

பரிந்துரைகளை கேளுங்கள் : உங்களுக்கு term insurance பற்றி எதுவும் தெரியாவிடில் அதுபற்றி தெரிந்தவர்களிடம் நன்றாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பிறகு சரியான பாலிசி ஒன்றை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

முடிவுரை

நீங்கள் இல்லாத காலங்களில் பொருளாதார பாதுகாப்பு உங்களது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டுமெனில் உங்களுக்கு Term Insurance தான் சரியான ஒன்று. பல்வேறு நிறுவனங்கள் இந்த பாலிசியை வழங்குகின்றன. நீங்கள் term insurance க்கு செலுத்தும் பிரீமியம் தொகைக்கு வருமான வரி விலக்கும் கூட வாங்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular