Saturday, May 11, 2024
HomeTech Articlesஆதித்யா L1 : சூரியனை ஆராயும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்ன?

ஆதித்யா L1 : சூரியனை ஆராயும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் என்ன?

விண்வெளி ஆய்வுகளில் சிறப்பாக செயல்படும் ஆய்வு நிறுவனங்களிடம் கூட சூரியனைப் பற்றிய பெரிய அளவிலான தரவுகள் இல்லை. இதற்கு மிக முக்கியமான காரணம், அதன் தொலைவு மற்றும் வெப்பநிலை. இந்த சவால்களை கடந்து சூரியனை மிகவும் நெருக்கமாக சென்று ஆய்வு செய்திட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செய்திடக்கூடிய மிகப்பெரிய முயற்சி தான் ஆதித்யா L1 (Aditya-L1) என்கிற விண்வெளி ஆய்வுத் திட்டம்.

ஆதித்யா L1 திட்டத்தின் மிக முக்கியமான நோக்கங்கள் என்ன?

பூமியில் இருந்து சுமார் 150 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் இருக்கக்கூடிய சூரியன் தான் இந்த சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய ஆற்றல் மூலமாக இருக்கிறது. நமக்கு அருகில் இருக்கக்கூடிய மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒன்று சூரியன் தான். 

ஆனால், அதனிடம் நெருங்கிச் சென்று ஆய்வுகளை நடத்துவது என்பது மிகவும் சிக்கலான காரியம். அதற்கு காரணம், வெப்பநிலை. கொஞ்சம் தவறாக அருகே சென்றால் ஒட்டுமொத்த விண்கலத்தையுமே அது எரித்துவிடும்.

மிகச்சிறந்த திட்டமிடலுடன் சூரியனை முடிந்த வரையில் நெருங்கிச் சென்று ஆய்வு செய்திடும் இஸ்ரோவின் முயற்சி தான் ஆதித்யா L1. ஆதித்யா L1 (Aditya-L1) பல்வேறு நோக்கங்களுக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதனை இப்போது விரிவாக பார்க்கலாம்.

  1. ஆதித்யா L1 இன் முதன்மையான நோக்கம் சூரியனை ஆராய்வது தான். சூரியனில் நிகழும் மாற்றங்களை அருகில் இருந்து கவனித்து தரவுகளை பெறுவது. மேலும் சூரியனின் மேற்பரப்பு, கரோனா, மற்றும் சூரிய புயல் குறித்து ஆராய்வது.
  2. சூரியனில் மேற்பரப்பை விடவும் கரோனா பகுதியில் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதற்கான காரணத்தை அறிய ஆய்வாளர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள். இதற்கு ஆதித்யா L1 உதவும்.
  3. ஆதித்யா L1, விண்வெளி வானிலை நிலையமாகவும் செயல்படுகிறது. பூமிக்கு அருகே இருக்கும் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றங்கள் குறித்து தரவுகளை சேகரிக்கிறது. மேலும், சூரியனில் நிகழும் மாற்றங்கள் எப்படி பூமியில் காலநிலை மாற்றங்களில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை ஆராய தரவுகளை சேகரிக்கிறது. 
  4. ஆதித்யா L1 இன் மிக முக்கியமான இன்னொரு பணி மிகப்பெரிய கரோனல் வெளியேற்றம் (Coronal Mass Ejections) குறித்து ஆராய்வது. இந்த நிகழ்வின் போது சூரியனில் இருந்து வெடித்துச் சிதறும் மூலங்கள், காந்தப் புலங்கள் குறித்தும் ஆராயும்.
  5. விண்வெளி வானிலை மாற்றங்களை தொடர்ந்து கண்காணித்து தரவுகளை சேகரிப்பதன் மூலம், ஆதித்யா-எல்1 விண்வெளி வானிலை முன்னறிவிப்பு மாதிரிகளை மேம்படுத்த பங்களிக்கிறது.  விண்வெளியில் செயற்கைக்கோள்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதற்கு இது முக்கியமானது.

இப்படியான பல்வேறு நோக்கங்களுக்காக ஆதித்யா L1 விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பப்பட்டு உள்ளது.

ஆதித்யா L1 திட்டத்தின் செலவு என்ன?

ஆதித்யா L1 செப்டம்பர் 02, 2023 அன்று சதிஷ் தவான் விண்வெளி நிலையத்தில் இருந்து வெற்றிகரமாக அனுப்பப்பட்டது. ஆதித்யா L1 திட்டத்திற்கு இந்திய மதிப்பில் 400 கோடி ரூபாய் செலவு செய்யபட்டு உள்ளது. 

ஏற்கனவே, வெற்றிகரமாக சந்திரயான் 3 யை செய்து காட்டிய இந்திய விஞ்ஞானிகள் சூரியனையும் ஆராய்ந்திட எடுத்து இருக்கும் முயற்சி தான் ஆதித்யா L1.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular