இங்கே நாம் ‘block’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறோம். ஆனால், நம்மால் எந்தவொரு யூடியூப் சேனலையும் block செய்துவிட முடியாது. ஆனால், ஒரு பார்வையாளராக நமக்கு மட்டும் குறிப்பிட்ட சேனல் சார்ந்த வீடியோக்களை காண்பிக்காமல் இருக்க செய்திட முடியும். இதற்கு Youtube இல் இருக்கக்கூடிய சரியான வார்த்தை ‘don’t recommend channel’ என்பது தான்.
ஏராளமான யூடியூப் சேனல்கள் இங்கே இருக்கின்றன. நாம் ஏற்கனவே பார்த்த வீடியோக்களின் அடிப்படையில் தான் யூடியூப் நமக்கு சில சேனல்களை நமது feed இல் காட்டும். சில நேரங்களில் அவை நமக்கு பிடித்தமானதாக இருக்கலாம். சில நேரங்களில் பிடிக்காமலும் போகலாம். அப்படி பிடிக்காமல் போகும் சூழலில் இனி குறிப்பிட்ட சேனலை பரிந்துரை செய்யவே கூடாது என நீங்கள் நினைத்தால் அந்த Youtube சேனலை block செய்துகொள்ள முடியும். நீங்கள் அந்த தடையை நீக்க விரும்பினாலும் நீக்கிக்கொள்ளலாம்.
How to Block a YouTube Channel?
Youtube இல் Login செய்து YouTube homepage க்கு செல்லுங்கள். அங்கே எந்த சேனல் வீடியோ உங்களுக்கு வேண்டாம் என நினைக்கிறீர்களோ அதை கண்டுபிடியுங்கள்.
மூன்று புள்ளிகளை கிளிக் செய்திடுங்கள்
Don’t recommend channel என்பதை கிளிக் செய்திடுங்கள்
தவறான சேனலை அழுத்தி இருந்தால் Undo வை அழுத்துங்கள்.
How to Unblock a YouTube Channel?
Google My Activity page க்கு செல்லுங்கள்
இடது பக்கத்தில் இருக்கும் Other activity ஐ அழுத்துங்கள்
YouTube ‘Not interested’ feedback ஐ தேடுங்கள்
அதனை delete செய்திடுங்கள்.
Youtube உங்களுக்கு ஏற்ற சேனல்களை தான் காட்டும். சில நேரங்களில் அதில் தவறு ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படி நேர்ந்தால் குறிப்பிட்ட சேனலின் வீடியோ உங்களுக்கு காட்டாதபடி உங்களால் செய்துவிட முடியும். அதை எப்படி செய்வது என்பதைத்தான் இங்கே பார்த்தோம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கமெண்டில் தெரிவியுங்கள்.