Friday, May 10, 2024
HomeTech ArticlesElon Musk vs Ambani இடையே என்ன போட்டி? இந்தியா யார் பக்கம் இருக்கப்போகிறது?

Elon Musk vs Ambani இடையே என்ன போட்டி? இந்தியா யார் பக்கம் இருக்கப்போகிறது?

Elon Musk Interested To Start Broadband Services In India

உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னிலையில் இருப்பவராக எலன் மஸ்க்கிற்கும் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானிக்கும் இடையே ‘இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை’ வழங்குவதில் போட்டி வந்துள்ளது. அண்மையில் அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை எலன் மஸ்க் சந்தித்து பேசியதற்கு பின்பாக இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. அப்படி என்ன இருவருக்கும் போட்டி? வாருங்கள் பார்க்கலாம்.

இந்தியா உலகின் மிகப்பெரிய சந்தை என்பது அனைவரும் அறிந்ததே. எலன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் செயற்கைகோள் மூலமாக இணையசேவையை வழங்கும் ஓர் நிறுவனம். கடந்த வாரம், இந்தியப்பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேசிய பிறகு இந்தியாவில் ஸ்டார்லிங்க் நிறுவனம் இணையசேவையை வழங்க விரும்புகிறது என தெரிவித்தார். இதன் மூலமாக, குக்கிராமங்கள் வரைக்கும் இன்டர்நெட் வசதியை கொண்டு சேர்க்க முடியும் என மஸ்க் தெரிவித்தார். 

ஒருவேளை, எலன் மஸ்க் இந்தியாவில் இணைய சேவையினை வழங்க வரும் பட்சத்தில் அவர் இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிறுவனருமான முகேஷ் அம்பானிக்கு நேரடி போட்டியாக இருப்பார். 439 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Reliance Jio vs. Starlink

ஸ்டார்லிங்க் போன்றதொரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைவதை முற்றிலுமாக தடுக்க முடியாது. அம்பானியும் ஸ்டார்லிங்க் உள்ளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. மாறாக, ஸ்பெக்ட்ரம் எப்படி விற்பனை செய்யபப்ட்ட வேண்டும் என்பதில் தான் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது. 

ஸ்டார்லிங்க் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் அல்லது அலைக்கற்றை என்பது இயற்கை வளம். ஆகவே, மற்ற உலக நாடுகள் கடைபிடிப்பது போலவே இந்திய அரசாங்கம் நிறுவனங்களுக்கு லைசென்ஸ் வழங்க வேண்டும். இதனால் பல நிறுவனங்கள் இதில் இறங்கும், அந்நிறுவனங்கள் இதனை பகிர்ந்துகொள்ள முடியும் என்கிறது. ஆனால், இந்த முறைக்கு முற்றிலும் எதிர்ப்பு தெரிவிக்கும் முகேஷ் அம்பானி ஏலம் விடப்பட வேண்டும் என வலியுறுத்துகிறார். இதன் மூலமாக, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இடையே சரிசமமான போட்டி இருக்கும் என அவர் கருதுகிறார். 

SpaceX நிறுவனம் 2021 இல் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணைய சேவையை பெறுவதற்கு புக்கிங் செய்திட ஆரம்பித்தது. ஆனால், ஸ்டார்லிங்க் லைசென்ஸ் வாங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை கூறியபிறகு தற்காலிகமாக புக்கிங் நிறுத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியா யார் பக்கம்?

2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலை இந்தியா எதிர்கொள்ள காத்திருக்கிறது. அதேபோல, மக்கள்தொகையில் சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்ட இந்தியா தனது பொருளாதாரத்தை உயர்த்தவும் பல்வேறு நடவெடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதி தான் எலன் மஸ்க் – மோடி சந்திப்பு. மற்றொருபுறம், உள்நாட்டு தயாரிப்பு, உள்நாட்டு பொருளாதார மேம்பாடு குறித்தும் தற்போதைய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆகவே, இந்த பிரச்சனையில் யார் பக்கம் இப்போதைய அரசு நிற்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular