Thursday, November 21, 2024
HomeUncategorizedசிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் பணியில் ரோபோ | Singapore deploys robo in park |...

சிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் பணியில் ரோபோ | Singapore deploys robo in park | Video

சிங்கப்பூர் பார்க்கில் கண்காணிக்கும் பணியில் ரோபோ
சிங்கப்பூரில் இருக்கக்கூடிய உள்ளூர் நிர்வாகம் ஒன்று பார்க்கிற்கு வருகிறவர்களை கண்காணிப்பதற்காக போஸ்டன் டைனமிக்ஸ் இன் நான்கு கால்கள் கொண்ட ரோபோவை பயன்படுத்த துவங்கி இருக்கிறது. தற்சமயம் Bishan-Ang Mo Kio Park இல் மட்டும் கண்காணிப்பை துவங்கி இருக்கிறார்கள்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு கெடுதல்கள் நடந்தாலும் கூட சில நன்மைகளும் ஏற்படவே செய்கின்றன. தொழில்நுட்பத்தை சில விசயங்களில் பயன்படுத்திப்பார்ப்பதற்கான வாய்ப்பினை இந்த கொரோனா காலம் கொடுத்திருக்கிறது எனலாம். இந்தியாவில் சமூக இடைவெளியை கண்காணிக்க போலீசார் வானில் பறந்து கண்காணிக்கும் ட்ரோன் கேமராக்களை பெருவாரியாக தற்போது தான் பயன்படுத்துப்பார்க்கிறார்கள். இதற்கான வாய்ப்பு அவர்களுக்கு முன்பு கிடைக்கவில்லை. இனி வரும் காலங்களில் இதே ட்ரோன் கேமராக்களை பயன்படுத்தி குற்றவாளிகளை ஆதாரத்தோடு பிடிக்க இயலும். 

 

இதே போன்று சிங்கப்பூரில் இருக்கக்கூடிய உள்ளூர் நிர்வாகம் ஒன்று பார்க்கிற்கு வருகிறவர்களை கண்காணிப்பதற்காக போஸ்டன் டைனமிக்ஸ் இன் நான்கு கால்கள் கொண்ட ரோபோவை பயன்படுத்த துவங்கி இருக்கிறது. தற்சமயம் Bishan-Ang Mo Kio Park இல் மட்டும் கண்காணிப்பை துவங்கி இருக்கிறார்கள். இந்த முயற்சி வெற்றி பெற்றால் கூடுதலான இடங்களிலும் ரோபோ பயன்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. 

https://www.youtube.com/watch?v=K6MrUjhD4k8

இந்த ரோபோவானது நான்கு கால்களை கொண்டிருப்பதனால் எத்தகைய ஏற்றத்தாழ்வான இடங்களிலும் செல்ல வல்லது. அதேபோல இதில் இருக்கக்கூடிய கேமராக்களின் மூலமாக எத்தனை பேர் வருகிறார்கள்? சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்பதனை பார்க்க முடியும். அதேசமயம், இந்த கேமராக்களில் இருந்து தனிமனிதர்களின் தகவல்கள் பெறப்பட மாட்டாது மற்றும் வேறெங்கும் பயன்படுத்தப்பட மாட்டாது.

 

ரிமோட் வாயிலாக தற்சமயம் இயக்கப்படும் இந்த ரோபோவில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துக்கள் ஒலிக்கப்படும். இதன்மூலமாக, நேரடியாக களத்தில் பணியாட்களை வேலைக்கு அமர்த்திட வேண்டிய கட்டாயம் இல்லை என்கிறது நிர்வாகம். 

 

சமூக இடைவெளியை பின்பற்றிடுவதை கண்காணிக்க ரோபோக்களையும் ட்ரோன் கேமராக்களையும் பயன்படுத்துவது முதல் முறை அல்ல. ஏற்கனவே அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளிலும் இப்படிப்பட்ட முயற்சிகள் நடக்கின்றன. இந்தியாவிலும் குறிப்பாக தமிழகத்திலும் கூட ட்ரோன் மூலமாக கண்காணிப்பது, மருந்து தெளிப்பது, அறிவுரைகளை வழங்குவது என பயன்படுத்தப்படுகின்றன. 

தாமஸ் ஆல்வா எடிசன் எனும் கண்டுபிடிப்புகளின் பேரரசன்

Click Here

யார் இந்த சர் சிவி ராமன்?

Click Here

ஒன்பிளஸ் நிறுவனத்தின் வெற்றிக்கதை

Click Here

அலிபாபா நிறுவனர் ஜாக் மா சாதித்தது எப்படி?

Click Here

கேமரான் ஜான்ஸன் 19 வயதில் மில்லியனர்

Click Here


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular