Sunday, November 24, 2024
HomeAppsவாட்ஸ்ஆப் - இனி இந்த மெசேஜ்களை ஒருவருக்கு மேல் அனுப்ப முடியாது | highly forwarded...

வாட்ஸ்ஆப் – இனி இந்த மெசேஜ்களை ஒருவருக்கு மேல் அனுப்ப முடியாது | highly forwarded messages

Whatsapp Business logo

WhatsApp

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது கொண்டுவந்துள்ள மாற்றத்தின்படி அதிகப்படியாக பார்வேர்டு செய்யப்படுகிற மெசேஜ்களை இனி ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். ஏற்கனவே 5 பேருக்கு அனுப்ப முடியும் என்பதோடு கூடுதலாக இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது .



உலகம் முழுமைக்கும் தற்போது மக்கள் வீடுகளிலேயே தங்கி இருக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மற்ற நாட்களைக்காட்டிலும் தற்போது வாட்ஸ்ஆப் மூலமாக செய்தி பரிமாற்றம் அதிகமாக நடைபெறுகிறது. மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் பலருடன் உரையாடல்களை வாட்ஸ்ஆப் மூலமாக மேற்கொண்டு வருகின்றனர். ஒருபுறம் இது ஆரோக்கியமானதாக இருந்தாலும் கூட இன்னொருபுறம் வாட்ஸ்ஆப் மூலமாக பொய்யான செய்திகள் மிகவேகமாக பொதுமக்களிடையே பரப்பப்படுகிறது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதனை வாட்ஸ்ஆப் நிறுவனம் கருத்தில் கொண்டுதான் தற்போது புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது.

வாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள புதிய கட்டுப்பாடு என்ன?

அதிகப்படியாக பார்வேர்டு [forward] செய்திகளை அடையாளம் கண்டு அந்த செய்திகளை "அதிகமாக பரிமாறப்படும் செய்தி" [highly forwarded messages] என வாட்ஸ்ஆப் பிரிக்கும். அந்த குறிப்பிட்ட செய்திகளை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

அதிகப்படியாக பார்வேர்டு [forward] செய்திகளை அடையாளம் கண்டு அந்த செய்திகளை “அதிகமாக பரிமாறப்படும் செய்தி” [highly forwarded messages] என வாட்ஸ்ஆப் பிரிக்கும். அந்த குறிப்பிட்ட செய்திகளை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும்.

 

 “அதிகமாக பரிமாறப்படும் செய்தி”யை எப்படி தெரிந்துகொள்வது?

 

ஏற்கனவே பார்வேர்டு [forward] செய்யப்படும் செய்திகளை அறிந்துகொள்ள ஒற்றை அம்புக்குறி “single arrow” இருக்கும். தற்போது “அதிகமாக பரிமாறப்படும் செய்தி” யை அடையாளப்படுத்த இரண்டு அம்புக்குறி “double arrow” இருக்கும். நீங்கள் இந்த செய்திகளை ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். நீங்கள் இரண்டாவது நபரை தேர்ந்தெடுக்கும் போது உங்களுக்கு “Forwarded many times. You can share with up to 1 chat” என்ற நோட்டிபிகேஷன் காட்டப்படும்.

 

ஏன் வாட்ஸ்ஆப் இந்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது?

 

பெரும்பாலான மக்கள் நல்லவிதமான செய்திகளையும் ஜோக்குகள் மீம்ஸ்கள் போன்றவற்றை பரப்புகிறார்கள். அதில் தவறில்லை, ஆனால் பொய் செய்திகளும் அதே நேரத்தில் பரப்பப்படுகின்றன. இதனை குறைக்கவே இந்த கட்டுப்பாட்டை கொண்டுவந்துள்ளதாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 5 நபர்களுக்குத்தான் ஒரே நேரத்தில் அனுப்ப முடியும் என்ற கட்டுப்பாட்டால் 25% செய்திகள் பகிரப்படுவது குறைந்ததாக வாட்ஸ்ஆப் தெரிவித்துள்ளது.

 

நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒரு செய்தியை பகிர்வதற்கு முன்னதாக அந்த செய்தி உண்மையானதா பொய்யானதா என்பதை தெரிந்துகொண்டு பகிர்வது நல்லது. அதைப்பற்றி தெரியவில்லை எனில் நீங்கள் பகிர வேண்டிய அவசியமே இல்லை.


Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular