32 Bit vs. 64 Bit
பொதுவாக 32 Bit கணினி அல்லது 64 Bit கணினி என கூறினாலும் உண்மையில் அந்த வார்த்தைகள் குறிப்பது என்னவோ 32 Bit processor அல்லது 64 Bit processor என்பதைத்தான்.
ஒரு கணினி வாங்கும் போது அல்லது ஒரு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்திடும் போது அல்லது ஒரு சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்திடும் போது 32 Bit அல்லது 64 Bit என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதை பார்த்திருப்போம். இதனை கவனிக்காமல் கணினியை வாங்கிவிட்டாலோ அல்லது சாப்ட்வேர் இன்ஸ்டால் செய்துவிட்டாலோ அது மிகப்பெரிய தலைவலியாக அமைந்துவிடும். உண்மையில் 32 Bit கணினிக்கும் 64 Bit கணினிக்கும் இடையே இருக்கின்ற வித்தியாசம் என்ன? என்பதை தான் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம்.
Read this also :
32 Bit vs. 64 Bit
பொதுவாக 32 Bit கணினி அல்லது 64 Bit கணினி என கூறினாலும் உண்மையில் அந்த வார்த்தைகள் குறிப்பது என்னவோ 32 Bit processor அல்லது 64 Bit processor என்பதைத்தான்.
A 32-bit system can access 2^32 memory addresses, i.e 4 GB of RAM or physical memory.
A 64-bit system can access 2^64 memory addresses, i.e actually 18-Billion GB of RAM. In short, any amount of memory greater than 4 GB can be easily handled by it.
ஒரு கணினியில் இருக்கக்கூடிய சிபியு ரெஜிஸ்டர் (CPU register) மெமரிக்கான முகவரியை [Memory Addre சேமித்து வைத்திருக்கும். இதனை பயன்படுத்திதான் Processor ஆனது தகவலை RAM இல் இருந்து பெரும். ஆகவே ஒரு 32 Bit processor ஆல் 2^32 (4,294,967,296) மெமரி இருப்பிடங்களில் (Memory Location) இருந்து தகவலை பெற முடியும் [ 32-bit address bus can address 232 (4,294,967,296) memory locations] . ஒவ்வொரு மெமரி லொகேஷனும் ஒரு byte அளவிலான தகவலை சேமித்து வைத்திருக்குமாயின் கிட்டத்தட்ட 4 GB RAM ( 4,294,967,296 bytes) அளவிலான தகவலை பெற முடியும்.. உண்மையில் இதன் அளவு ஏறக்குறைய 3.5GB ஆகத்தான் இருக்கும். ஏனெனில் processor இல் இருக்கக்கூடிய சில ரெஜிஸ்டெர்கள் மற்ற temporary values களை சேமிக்க பயன்படுத்தப்பட்டு இருக்கும்.
64 Bit processor ஆல் 2^64 (18,446,744,073,709,551,616 bytes) மெமரி இருப்பிடங்களில் (Memory Location) இருந்து தகவலை பெற முடியும். இதன் அளவு 17,179,869,184 GB. 32 bit உடன் ஒப்பிடும் போது இது பல மடங்கு அதிகம்.
32 Bit vs. 64 Bit மிக முக்கியமானது வேகம். 32 Bit ஐ விட 64 Bit இல் ஒரு நொடியில் பல மடங்கு கணக்குகளை செய்திட முடியும் [Calculations per second] . இதனால் 64 Bit கணினி மிக வேகமாக செயல்பட முடியும். ஆகையினால் தான் 64 bit கணினியில் ஒரே நேரத்தில் பல அப்ளிகேசனைகளை எந்தவித தடங்கலும் இன்றி இயக்கிட முடியும். மிகப்பெரிய கேம்கள் மற்றும் எடிட்டிங் உள்ளிட்ட சாப்ட்வேர் களை பயன்படுத்திட தகுந்த கணினியாக 64 Bit இருக்கிறது.
Note :
32 bit கணினியில் 8 GB RAM இருந்தாலும் அந்த processor ஆல் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதிகபட்சமாக 4GB RAM ஐ தான் பயன்படுத்திக்கொள்ள முடியும். மீதமுள்ள 4GB RAM பயன்படுத்தப்படாமலேயே இருக்கும் Vice Versa.
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.