Types of Computers in tamil | கணினியின் வகைகள்

பலவகையான கணினி இப்போது பயன்பாட்டில் இருக்கின்றன. தேவைக்கு ஏற்றவாறு உங்களுக்கு ஏற்ற கணினியை நீங்கள் பயன்படுத்தலாம். கணினியில் எந்தவகை உங்களுக்கு தேவைப்படும் என்பதை கண்டுபிடிக்க இருக்கும் பலவகையான கம்ப்யூட்டர் [Types Of Computer] பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் அல்லவா. இந்தப்பதிவில் நீங்கள் பலவகையான கணினி குறித்து தெரிந்துகொள்ளலாம்.

கணினி அதில் பயன்படுத்தப்படும் புராசஸர்ஸ் (Processors), வேகம், அளவு ஆகியவற்றை பொறுத்து வகைப்படுத்தப்படுகின்றன. முதல் தலைமுறை கணினியில் vacuum tube பயன்படுத்தப்பட்டன. பின்னர் டிரான்சிஸ்டர் பயன்படுத்தப்பட்டன. பின்னர் சிப்கள் பயன்படுத்தப்பட்டன. தற்போது சிப்களின் அளவுகள் குறைக்கப்பட்டு அதன் வேகம் அதிகப்படுத்தப்படுகிறது.

கணினிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்,

Desktop (கணினி)

Laptop (மடிக்கணினி)

Tablet (கையடக்க கணினி)

Server (சர்வர்)

Mainframe (மெயின் பிரேம்)

Supercomputer (சூப்பர் கம்யூட்டர்)

Desktop

desktop computer

நாம் வீடுகளில், அலுவலகங்களில் வைத்து பயன்படுத்தப்படுகின்ற கணினி தான். இதில் Display, CPU , Keyboard , Mouse போன்றவை இருக்கும்.

Desktop vs Laptop : எதனை வாங்கலாம் என குழப்பமா? இதை படிங்க

Laptop

laptop

செல்லும் இடங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் பேட்டரி மூலம் இயங்க கூடிய கணினி. இதில் Display, CPU , Keyboard , Mouse அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு இருக்கும். தற்போது இதனை பெரும்பாலான மாணவர்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

Tablet

tablet pc

கிட்டத்தட்ட மொபைல் போன்று இருக்கும் கையடக்க கணினி. இதில் தற்போது touch போன்றவை வந்துவிட்டன. Virtual Keyboard, WIFI என சகல வசதிகளையும் கொண்ட டேப்லெட் கள் பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.

Server

Server

அதிக செயல்திறன் கொண்ட கணினி. அதிக வேகத்தில் இயங்கக்கூடிய இவை display வை கொண்டிருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். இவற்றின் பயன்பாடு network இல் இணைத்திருக்கும் பிற கணினிகளோடு ஒருங்கிணைந்து இயங்கும் வண்ணம் இருக்கும். சர்வரை அது பயன்படுத்தப்படும் விதத்தினை பொறுத்து பல வகைகளாக பிரிக்கலாம். File server (தகவல் சேமிப்பு) , Gaming Server (விளையாட்டு சம்பந்தப்பட்ட தகவல்) , Mail Server ( மின்னஞ்சல் தகவல்) என பல வகைகளாக பிரிக்கலாம்.

Mainframe

main frame computer

மிகப்பெரிய அளவில் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளக்கூடிய நிறுவனங்கள் அதிக செயல்திறன் கொண்ட கணினிகளை பயன்படுத்துகின்றன. உதாரணத்திற்கு நொடிக்கு பல லட்சக்கணக்கான பண பரிமாற்றங்களை மேற்கொள்ள கூடிய கணினிகள் வங்கிகளில் பயன்படுத்தப்படும். அவையே Mainframe Computer.

Supercomputer

super computer

உலகின் அதிநவீன, அதிக செயலாற்றல் கொண்ட கணினி இவை தான். மிகவும் சிக்கலான வேலைகளை துல்லியமாகவும் வேகமாகவும் செய்து முடிக்க இவை பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நுட்பமான அப்ளிகேஷன்களில் இந்த வகையான கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. வானிலை கண்காணிப்பு, சுற்றுசூழல் ஆராய்ச்சி போன்றவற்றை சில உதாரணமாக கொள்ளலாம்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

Read More : கணினியின் முக்கிய பாகங்கள்

TECH TAMILAN