IP Address என்றால் என்ன? | IP Address explained in Tamil

நாம் தற்போது இணைய உலகின் உச்சத்தில் இருக்கிறோம். இணையம் வேலை செய்திட மிகவும் முக்கியமானது IP address. IP address குறித்து நீங்கள் மேலோட்டமாக கேள்விப்பட்டு இருக்கலாம். அதுபற்றி, மேலும் அதிகமாக நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால் நீங்கள் சரியான இடத்திற்கு வந்துள்ளீர்கள். IP address எப்படி வேலை செய்கிறது, IP address இல் இருக்கும் வகைகள் என்ன என்பவை குறித்து விரிவாக பார்க்கலாம். [IP Address In Tamil]

மிக எளிமையாக சொல்லவேண்டும் என்றால் IP Address என்பது ஒரு வீட்டின் கதவு எண் போன்றது, சரியான கணினியை அடையாளம் கண்டுகொள்வதற்கான எண்.

The Purpose of IP Addresses


ஒருவர் அனுப்புகின்ற கடிதம் நமது வீட்டிற்கு சரியாக வந்து சேர்வதற்கு பெயர், கதவு எண், ஊர் பெயர் போன்றவை அடங்கிய முகவரி தேவையோ அதனை போலவே தான் ஒரு நெட்ஒர்க்கில் இயங்கக்கூடிய கணினி போன்ற கருவிகளுக்கு தகவலை அனுப்பவும் பெறவும் முகவரியாக இருப்பது IP Address.  தற்போது இணையத்தை பயன்படுத்துகின்ற கணினிகள் அனைத்தும் TCP /IP வழிமுறைகளின் படியே மற்ற கணினிகளுடன் தொடர்பு கொள்கின்றன. ஒரு கணினியை அடையாளம் காணுவதற்கு இந்த முறையில் பயன்படுத்தப்படுகின்ற தனித்துவம் வாய்ந்த முகவரி (unique identifier) தான் IP Address.

Two Standards of IP Address

> IPv4

> IPv6

Standard IPv4

IPv4 என்பது 32 பைனரி எண்களால் ( 0 , 1) உருவாக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு  154.31.16.13 [Binary form : 10011010.00011111.00010000.00001101] இந்த IP இல் நான்கு எண்கள் dot ஆல் பிரிக்கப்பட்டு இருக்கும். இதன்படி 4 பில்லியன் கணினிகளுக்கு IP முகவரியினை வழங்கிட முடியும்.

Standard IPv6

நாளுக்கு நாள் கணினி உள்ளிட்ட கருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகின்ற காரணத்தினால் IPv4 இன் மூலமாக கிடைக்கக்கூடிய 4.3 பில்லியன் IP Address போதாது என்பதனால் IPv6 அறிமுகப்படுத்தப்பட்டது. 128 பைனரி எண்களால் ( 0 , 1) உருவாக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு 2001:cdba:0000:0000:0000:0000:3257:9652

IP Address எப்படி ஒதுக்கப்படுகிறது?

IP Address நிர்வகிக்கும் அமைப்பு தான் நெட்ஒர்க்கின் வகைக்கு ஏற்றவாறு IP Address ஐ ஒதுக்குகின்றன. இதனை Internet Assigned Numbers Authority (IANA) என்கிற அமைப்பு மேற்பார்வை செய்கிறது.

IANA என்கிற அமைப்பு IP address blocks ஐ Regional Internet Registries (RIRs) க்கு ஒதுக்குகிறது. RIRs தான் Internet Service Providers (ISPs) மற்றும் பல நிறுவனங்களுக்கு IP Address ஐ ஒதுக்குகிறது. ISPs ஆனது பயனாளர்களுக்கு IP Address ஐ ஒதுக்குகின்றன. இதன் மூலமாக பயனாளர்கள் இணையத்தை பயன்படுத்த முடியும்.

The Role of Internet Service Providers (ISPs)

ISP என்கிற அமைப்பு தான் IP address ஐ ஒதுக்குவதிலும் நிர்வகிப்பதிலும் பெரும்பங்காற்றி வருகிறது. இந்த அமைப்பு தான் இண்டெர்நெட்டிற்கும் பயனாளர்களுக்கும் இடையே இருக்கிறது. ISP தான் பயனாளர்களுக்கு IP address ஐ ஒதுக்குகிறது. இது Static அல்லது Dynamic என இரண்டு வகைப்படும். Dynamic IP address நீங்கள் ஒவ்வொருமுறை இன்டர்நெட்டில் இணையும் போதும் மாறுபடும். Static IP address எப்போதுமே மாறாது.

சைபர்பாதுகாப்பில் IP Addresses

சைபர்பாதுகாப்பில் IP Addresses பெரும்பங்காற்றி வருகிறது. அது, கருவியை அடையாளம் கண்டறிவதற்கும் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. குறிப்பாக, attempts, spamming, unauthorized access என்ற பல பிரச்சனைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள IP Addresses உதவுகிறது.

ஒரு நெட்ஒர்க்கில் எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்பதை தெரிந்துகொள்ள IP Addresses உதவுகிறது. இதனால் தவறுகள் நடப்பதை கண்டறியவும் தடுக்கவும் எளிதாக முடியும். இப்போதும் கூட இணைய குற்றம் ஒன்று நடந்தால் காவல்துறை குற்றவாளியை கண்டறிய பயன்படுத்துவது IP Addresses தான்.

கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here

TECH TAMILAN