Tuesday, December 3, 2024
HomeTech ArticlesYeah! Young man addicted with NetFlix?

Yeah! Young man addicted with NetFlix?

 


 

பெங்களூருவை சேர்ந்த 26 வயது இளைஞர் தொடர்ச்சியாக அதிக நேரம் NETFLIX இல் நிகழ்ச்சிகளை பார்த்ததனால் அதற்கு அடிமையாகிப்போனதாக மருத்துவமனையில சோதனைக்காக சேர்ந்திருக்கிறார் . இந்தியாவை பொருத்தவரையில் இப்பிரச்சனைக்காக மருத்துவமனையில சேர்த்திருக்கும் முதல் இளைஞராக இவர் கருதப்படுகிறார் .

 




NETFLIX மோகம்

 

Netflix
Netflix

 

NETFLIX என்பது ஆன்லைனில் ஆங்கில தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் அடங்கியது . குறிப்பிட்ட சந்தா தொகையினை கட்டி அதற்குள் இருக்கும் வீடியோக்களை பார்த்துக்கொள்ளலாம் . Series முறையில் பல சிறப்பான வீடியோக்கள் அதில் தொடர்ந்து பதிவேற்றப்படுவதனால் அதற்கு ரசிகர் கூட்டம் மிக அதிகம் . சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலும் நுழைந்திட்ட இதில் தற்போது ஏகப்பட்ட இளைஞர்கள் வாடிக்கையாளர்களாக சேர்ந்திருக்கின்றனர் .


பெங்களூருவை சேர்ந்த 26 வயது இளைஞர் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் இருந்துவந்துள்ளார் . தன்னுடைய வயதையொத்த நண்பர்கள் வேலைக்கு செல்வதனால் குடும்பத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது . அந்த மன அழுத்தத்தை  குறைக்க NETFLIX இல் வீடியோ பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் . அப்படி பார்க்க ஆரம்பித்து கிட்டத்தட்ட நாளொன்றுக்கு 8 மணி நேரம் 29 நிமிடம் வரை பார்த்திருக்கிறார் . காலை எழுந்தவுடன் டிவி யை ON செய்திடும் அவருக்கு OFF செய்யவே தோன்றுவதில்லை என்பதே பிரச்சனை.


பொழுது போக்கிற்காக வாழ்வினை இழக்கும் இளைஞர்கள்

 


 

மொபைல் போன்களின் வருகையினால் ஏற்கனவே இளைஞர்கள் மொபைல் இல் அதிக நேரம் செலவிடுவதாகவும் இதனால் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் கூறப்பட்டுவந்தது . PubG போன்ற கேம்களின் வருகையும் அவர்களை ஆட்படுத்தி வைத்திருந்தது . இதனை போன்றே தற்போது NETFLIX உம் வந்திருக்கின்றது .

 




Self Control is Everything 



மொபைல் போன்ற சாதனங்களும் கேம்கள் , வீடியோக்கள் மற்றும் திரைப்படங்கள் அனைத்தும் நம்மை மகிழ்விக்க வந்தவை . அவற்றினை பயன்படுத்துவதோ விளையாடுவதோ பார்ப்பதோ தவறில்லை . ஆனால் அதனை அளவோடு செய்கிறோமா என்பதில் தான் அனைத்துமே இருகின்றது . இந்த மாதிரியான விசயங்களுக்கு அடிமையாகி போகின்றவர்கள் விபரம் அறியாதவர்கள் இல்லை , அனைவருமே படித்தவர்கள் , நன்றாக புரிந்துகொள்ளக்கூடியர்வர்கள் .



நண்பர்களே நாம் தொடர்ந்து ஒரு விசயத்தில் ஈடுபடும்போது நம்மை அறியாமலே அதற்கு அடிமையாகிறோம்  . அப்படியும் தொடரும் போது மனநோயாகவே மாறிப்போகிறது .


நாம் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதனை அனைவருமே அறிந்துவைத்திருப்பது நல்லது . ஆரம்பகட்டத்தில் இருப்பவர்கள் இப்போதே கவனமாக குறைத்துக்கொள்ளுங்கள் . உங்களாலேயே கட்டுப்படுத்திட முடியாவிட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள் .

 


Read additional post here ….

 

Howw to stop Mobile Addiction?

 

How to use Mobile Phone Safely?

 


TECH TAMILAN

RELATED ARTICLES

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular